மொத்தப் பக்கக்காட்சிகள்

ரியல் எஸ்டேட் ஹாலிவுட் தொடர்பு.. ஆ ஆறுமுக நயினார், வழக்கறிஞர் Real estate

ரியல் எஸ்டேட் ஹாலிவுட் தொடர்பு...
ஆ ஆறுமுக நயினார், வழக்கறிஞர்


இன்று காலை நடை பயணத்தில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் ஹாலிவுட் சினிமா நகரத்திற்கும் உள்ள தொடர்பை பார்ப்போம்.

 ஹாலிவுட் என்பது அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள ஒரு பகுதியாகும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் இதற்கு என்ன சம்பந்தம் என்று பார்த்தால் ஒரேஸ் வில்காக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் பிரமோட்டர் இந்த ஹாலிவுட் என்ற நகரத்தை லேஅவுட் போட்டு குடியிருப்பு பகுதியாக நிர்மாணித்தார்.

 இந்தப் பகுதியில் மிதமான தட்பவெப்ப நிலையும் 365 நாட்களும் சூரிய வெளிச்சமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதுவே சினிமா தொழிலுக்கு ஒரு பெரிய மூலதனமாக வரப்பிரசதமாக அமைந்தது..

 1911 ஆம் ஆண்டு இங்கு சன்செட் போல்வர்ட் என்ற இடத்தில் முதல் சினிமா கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது இதை தொடர்ந்து விரைவில் சுமார் 20 கம்பெனிகள் அங்கே இடம் பிடித்தன... ஒரு வேடிக்கை என்னவென்றால் 1909 ஆம் ஆண்டு இங்கே உள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் திரைப்படத்தில் நடிகர் நடிகைகளின் பெயர்கள் போடப்படக்கூடாது என்று முடிவு செய்து அது கடைபிடிக்கப்பட்டது .

.இந்த கண்டிப்பான உத்தரவில் உள்ள இடர்ப்பாடுகளை உணர்ந்து அடுத்த ஆண்டு இந்த உத்தரவு வாபஸ் வாங்கிக் கொள்ளப்பட்டு அதன் பின்னர் சினிமா கம்பெனிகள் தங்களுடைய கதாநாயகர்கள் கதாநாயகிகள்மற்றும் மற்ற முக்கிய நடிகர்களின் சாகசங்களை விளம்பரம் செய்து தங்களது திரைப்படங்களுக்கு விளம்பரம் தேட ஆரம்பித்தார்கள்..

. ஹாலிவுட் முறைப்படியான முதல் கதை படம் ஃபீச்சர் ஃபிலிம் என்பது 1913 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சிசில் பி டி மில் என்பவர் தயாரித்த தி ஸ்குவா மேன் என்ற திரைப்படம் ஆகும்... இது பழைய மாட்டுப்பண்ணையை மாற்றி ஸ்டூடியோ வாக அமைத்து எடுக்கப்பட்ட படம்... முதலில் அனைத்து திரைப்படங்களும் ஊமை படங்களாகவே வந்தன.

 ஆனால் முதலில் வெளிவந்த பேசும் படம் தி ஜாஸ் சிங்கர் என்ற 1927 ஆம் ஆண்டு வெளியான படம் ஆகும்... வண்ண படங்களில் முதலில் கருப்பு வெள்ளை ஃபிலிம் மீது வண்ணங்களை தீட்டி அவை திரையிடப்பட்டன பின்னர் 1935 ஆம் வருடம் 3 வண்ணங்கள் இணைந்த டெக்னிக்கலர் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு டெக்னிக் கலரில் முதலில் வெளிவந்த திரைப்படம் ராபர்ட் மாமோலியன் என்ற டைரக்டர் இயக்கிய பெக்கி ஷார்ப் என்ற திரைப்படமாகும்  

இதன் பின்னர் உலகத்தில் ஆங்கிலத் திரைப்பட
தயாரிப்பில் தலைமை இடம் ஹாலிவுட் என்று ஹாலிவுட் கதாநாயகர்களும் கதாநாயகிகளும் உலகம் முழுதும் புகழ்பெற்று விளங்கி அதில்  ரொனால்ட் ரீகன் என்பவர் அமெரிக்க ஜனாதிபதியாகவும் ஆனார் என்பது வரலாறு இன்று ஹாலிவுட் உலக திரைப்பட வரலாற்றில் முக்கிய கேந்திரமாக திகழ்கிறது.

ஆ ஆறுமுக நயினார், வழக்கறிஞர், தமிழ்நாடு பதிவுத்துறை முன்னாள் கூடுதல் தலைவர்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...