மொத்தப் பக்கக்காட்சிகள்

காஃபி பைட் ரிச் – புதிய சாக்லேட்டை அறிமுகம் business

காஃபி பைட் ரிச்புதிய சாக்லேட்டை அறிமுகம் செய்தது லோட்டே இந்தியா

 

புதுமையான காபி மற்றும் கிரீமி வெண்ணிலா சுவையுடன் வருகிறது

 

சென்னை,ஆகஸ்ட்1,2023:சாக்லேட், பிஸ்கெட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் லோட்டே இந்தியா, அனைவரும் விரும்பும் காஃபி பைட் பிராண்டின் கீழ் புதிய அறிமுகத்துடன் தனது அடுத்தகட்ட வளர்ச்சி பயணத்தை துவங்கி உள்ளது. அந்த வரிசையில் தற்போது இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள காஃபி பைட் ரிச் சாக்லேட், புதுமையான காபி மற்றும் கிரீமி வெண்ணிலா உடன், முழுமையான காபி சுவை அனுபவத்தை இதை சாப்பிடுபவர்களுக்கு வழங்குகிறது.

 

இது குறித்து லோட்டே இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மிலன் வாஹி கூறுகையில், தற்போது நாங்கள் அறிமுகம் செய்துள்ள காஃபி பைட் ரிச் சாக்லேட், எங்கள் பயணத்தில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது, இது நுகர்வோரின் மாறிவரும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சாக்லேட்டிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நாங்கள் நம்புவதோடு, எங்களின் வருவாயும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும் இந்த புதிய தயாரிப்பு புதுமையான காபி மற்றும் கிரீமி வெண்ணிலா சுவையுடன், நுகர்வோரின் விருப்பங்களை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு இந்தியரும் விரும்பும் சாக்லேட்டாக மாறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

 

இந்த புதிய சாக்லேட் தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளது, இது சாக்லேட் சந்தையில் கடுமையான போட்டிக்கு மத்தியில் தனித்து நிற்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தனது பிராண்டின் பாரம்பரியத்தைப் பராமரிக்கும் வகையில், இந்த புதிய சாக்லேட்டை அசல் காஃபி பைட் சுவை மாறாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறந்த சுவை அனுபவத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இந்த சாக்லேட்டை இந்நிறுவனம் பலதரப்பட்ட மக்களிடம் பல்வேறு வயதினரிடம் பரிசோதித்துள்ளது. பாரி கன்பெக்ஷனரி நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்து லோட்டே நிறுவனம் காபி டோஃபி பிராண்ட் பிரிவில் முன்னோடியாக இருந்து வருகிறது, மேலும் காஃபி பைட்டில் பல ஆண்டுகளாக ஒரு சிறந்த பிராண்டாக இருந்து வருகிறது. இதன் தயாரிப்புகள் 1987–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இன்று வரை தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துள்ளது.

 

மேலும் பல்வேறு புதிய சுவைகள், புதிய பேக்கிங் வடிவங்களையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய அதே நேரத்தில் அதன் பெருமையை குறிக்கும் காபி சுவையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இந்தியாவில் உள்ள நுகர்வோர்களின் சாக்லேட் அனுபவத்தை மாற்றி அமைக்கும் வகையில் இந்நிறுவனம் தற்போது காஃபி பைட் ரிச் சாக்லேட்டை அறிமுகம் செய்துள்ளது. இது எங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான பயணம் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது

 

வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறை செலுத்துவதோடு, வளர்ந்து வரும் உணவு வர்த்தக பிரிவில் தனக்கென ஒரு இடத்தை லோட்டே இந்தியா நிறுவனம் தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

லோட்டே பற்றி: கடந்த 2004–ம் ஆண்டு முருகப்பா குழுமத்திடம் இருந்து பாரிஸ் கன்பெக்ஷனரி நிறுவனத்தை கையகப்படுத்தி லோட்டே இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் துவக்கப்பட்டது. லோட்டே இந்தியாவின் தாய் நிறுவனமான லோட்டே வெல்புட் கம்பெனி லிமிடெட் (முன்னர் லோட்டே கன்பெக்ஷனரி), கொரிய கூட்டு நிறுவனமான லோட்டே கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். இந்நிறுவனம் காஃபி பைட், கோகனட் பஞ்ச், காராமில்க், லாக்டோ கிங், ஜெல்லி, லாலிபாப் மற்றும் எக்லேர்ஸ் போன்ற சிறந்த பிராண்டுகளுடன் சாக்லேட் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்களைக் கொண்டுள்ள லோட்டே இந்தியா நிறுவனம் 4 பிராந்தியங்களில் 24 சிஎப்ஏகளுடன் செயல்படுகிறது. சென்னை மற்றும் ரோஹ்தக்கில் உள்ள இரண்டு அதிநவீன, முழு தானியங்கி சாக்கோ பை தொழிற்சாலைகளைத் தவிர இந்நிறுவனத்திற்கு பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள நெல்லிகுப்பத்திலும் சொந்தமாக சாக்லேட் தொழிற்சாலை உள்ளது. மேலும் கூடுதலாக, நிறுவனம் அதன் சாக்லேட் உற்பத்தியை இந்தியா முழுவதும் உள்ள மற்ற 3 யூனிட்டுகளுக்கு அவுட்சோர்சிங் செய்துள்ளது. லோட்டே இந்தியா நிறுவனம் தனது தயாரிப்புகள் அனைத்தும் முதன்மைத்துவம் பெறும் வகையில் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

 


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உலக ஆரோக்கிய தினம் ஏப்ரல் 7 World Health Day

உலக ஆரோக்கிய தினம்  ஏப்ரல் 7