மொத்தப் பக்கக்காட்சிகள்

முத்தங்களைச் சமைப்பவள் - பிருந்தா சாரதி

முத்தங்களைச் சமைப்பவள் 

- பிருந்தா சாரதி


முதல் பார்வையில் 
மனதைத் 
தீப்பற்ற வைத்துப் 
பின்  தீண்டல்களால்
வாழ்நாள் முழுமைக்குமான உணவைச் 
சமைக்கத் தெரிந்தவள் அவள்.

பறித்த கிழங்கின் வாசனையும் 
பனை நுங்கின் ருசியும்
அங்கங்களில்.

வேறு வகை உணவுகளும் உண்டு அவளிடத்தில்.

ஜென்மாந்திரப் பசியை  நொடியில் தீர்க்கும் 
அட்சய பாத்திர உள்ளங்கையில்
உலகறியா நறுமணத்தைப்
பதுக்கியிருந்தாள்.

அவன் கனவுகளின் கூடாரத்தைக் கைப்பற்றி 
வாஸ்து பார்த்து 
ஒரு மூலையில் 
தன் சமையல்கூடத்தை அமைத்துக் கொண்டாள்.
 
அவர்கள் நெருக்கத்தில்
சிக்கிமுக்கிக் கல்லுரசி 
பற்றி எரிகிறது அடுப்பு.

பசி வழியும்  பாத்திரத்தில்    இருவரும் தாகங்களால்  கொதிக்கவைக்கிறார்கள் ஆசைகளை.

உலை தளதளக்க
நீள்கிறது சமையல்.

ஆதி மனிதன் வேட்டையாடிய மாமிசம் மணக்கிறது
அச்சமையலில்.

சமைத்தபடியே  
மாறி மாறி ருசி பார்ப்பதால்  காலியாகிவிடுகிறது உணவு 
ஒவ்வொரு முறையும்.

காயசண்டிகையாய்
தீராப்பசி கொண்டு அலையும் மனதை
வேடிக்கை மட்டும்தான் பார்க்கிறது 
பயணத்தில் களைத்த உடல்.

பசியே ருசி என்பதை உணரும் கணத்தில்
அமிர்தமென ஊறி
இரு ஆன்மாக்களிலும்  பரவுகிறது 
நான்கு இதழ்களின் வழியே 
ஓடும் நதி.
*
#உலக_முத்த_தினம்

( #முக்கோண_மனிதன் தொகுதியில் இருந்து )
*
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...