மொத்தப் பக்கக்காட்சிகள்

சென்னையில் தனது நான்காவது உற்பத்தி தொழிலகத்தை தொடங்கும் நிபவ் ஹோம் லிஃப்ட்ஸ்

நான்காவது உற்பத்தி தொழிலகத்தை தொடங்கும் நிபவ் ஹோம் லிஃப்ட்ஸ்

 

  • டிசம்பர், 2023-க்குள் இந்தியாவிலும்வெளிநாடுகளிலும் 4500 புதிய பணியாளர்களை பணிக்கு சேர்க்கவிருப்பதை அறிவித்திருக்கிறது
  • "சீரீஸ் மேக்ஸ்" - தனது சமீபத்தியபுதிய ஹோம் லிஃப்ட் தயாரிப்பினை அறிமுகம் செய்திருக்கிறது

 

சென்னை, 08 மே, 2023: 2024 டிசம்பர் மாத இறுதிக்குள் பில்லியன் டாலர் பெருமானமுள்ள நிறுவனமாக வளர்ச்சியடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்துவரும் இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் லிஃப்ட் பிராண்டான நிபவ் ஹோம் லிஃப்ட்ஸ் (NIBAV Home Lifts), ஹோம் லிஃப்ட்ஸ் உற்பத்திக்கான தனது இந்திய செயல்பாடுகள் விரிவாக்கப்படுவதை இன்று மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறது. சென்னை மாநகரின் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி அமைந்துள்ள 'அக்கரை' பகுதியில், 50,000 சதுரஅடி பரப்பளவில் தனது நான்காவது உற்பத்தி தொழிலகம் தொடங்கப்படுவதை இந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. உலகின் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு நவீனமான புதிய ஹோம் எலிவேட்டர் (இல்லங்களுக்கான மின்தூக்கி) தயாரிப்பு தொழிலகம் இங்கு அமையவிருக்கிறது. ஐரோப்பிய தரநிலைகளுக்கேற்ப இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹோம் லிஃப்ட்களை 14 வெளிநாடுகளை உள்ளடக்கி சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் சந்தைக்கு அதிக அளவில் அனுப்புவதற்குஇந்த கூடுதல் உற்பத்தித்திறன் நிபவ் நிறுவனத்திற்கு உதவும். அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் பிரதான சந்தையாக இந்தியா தொடர்ந்து இருக்கும்.

 

டிசம்பர் 2023 இறுதிக்குள் 4,500-க்கும் அதிகமான பணியாளர்களை சேர்க்கிற தனது ஆட்சேர்ப்பு திட்டத்தையும் நிபவ் ஹோம் லிஃப்ட்ஸ் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களது எண்ணிக்கை 6000 ஆக உயரும். இந்நிறுவனத்தின் ECO வலையமைப்பு (எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் மற்றும் அலுவலகம்) இந்தியாவிலும்உலகளவிலும் விரிவாக்கப்படும் செயல்பாட்டில் புதிதாக சேர்க்கப்படும் பெரும்பாலான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அதுமட்டுமன்றி இத்தொழில்துறையில் திறனும்அனுபவமும் உள்ள சிறந்த பணியாளர்களின் சேர்க்கைபுதிதாக தொடங்கப்பட்டிருக்கும் உயர்தொழில்நுட்ப திறன் கொண்ட கார்பரேட் அலுவலகம்நான்கு உற்பத்தி தொழிலகங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மேலும் மேம்படுத்தப்படுவதற்கு இது உறுதுணையாக இருக்கும்.

 

நிபவ் ஹோம் லிஃப்ட்ஸ்-ன் நிறுவனரும்தலைமைச் செயல் அலுவலருமான திரு. விமல் R. பாபு, இது தொடர்பாக கூறியதாவது: "டிசம்பர், 2019-ல் தொடங்கப்பட்டதிலிருந்தே நிபவ் ஹோம் லிஃப்ட்ஸ்வலுவான பிசினஸ் வளர்ச்சியை தொடர்ந்து கண்டுவருகிறது. 2021ம் ஆண்டில் ரூ. 150 கோடி என்ற விற்பனை மதிப்பு 2022-ம் ஆண்டில் 400 கோடியாக உயர்ந்திருக்கிறதுஇந்த 2023 காலண்டர் ஆண்டின் முதல் காலாண்டிற்குள்ளேயே 1000 லிஃப்ட்கள் விற்பனை மைல்கல்லை நாங்கள் வெற்றிகரமாக கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறோம். இல்லத்திற்குள் மொபிலிட்டி தீர்வுகள் பிரிவில் வீட்டு உரிமையாளர்களுக்கு தேவைப்படுவதை சிறப்பாகவும்மிகத் துல்லியமாகவும் எங்களால் வழங்கமுடியும் என்பதற்கு சான்றாக 2022-ம் ஆண்டில்இந்தியாவைக் கடந்து சர்வதேச அளவில் எமது விரிவாக்க செயல்பாடு தொடங்கியது. புதிய உற்பத்தி தொழிலகம் இப்போது தொடங்கப்படுவதால்உலகளவிலான ஹோம் லிஃப்ட் பிரிவிலும் எமது நிறுவனத்தின் வளர்ச்சி மேலும் வேகம் எடுக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். உலகளவில் ஹோம் லிஃப்ட்-களுக்கான தேவை அதிகரித்துவரும் நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கும் போக்கும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் 2024 டிசம்பர் மாதத்திற்குள் உலகளவில் ஹோம் லிஃப்ட் விற்பனையில் முதன்மையான இந்திய பிராண்டாக வளர்ச்சியடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாங்கள் பயணித்து வருகிறோம். பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் பட்டியலில் நாங்கள் இடம்பெறுவதை இது சாத்தியமாக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்."

 

பணிக்கு ஆட்சேர்ப்புக்கான திட்டங்கள் பற்றி திரு. விமல் பாபு மேலும் பேசுகையில்"நிபவ்-ன் ஹோம் எலிவேட்டர்களுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் கனடாசுவிட்சர்லாந்துஆஸ்திரேலியாமலேசியாதாய்லாந்து மற்றும் பிற நாடுகளிலும் வாடிக்கையாளர்களின் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதை நாங்கள் கண்டுவருகிறோம். இத்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு எமது மனிதவளத்துறையை நாங்கள் ஏற்கனவே வலுப்படுத்தியிருக்கிறோம். இத்தொழில்துறையைச் சேர்ந்த 4500-க்கும் அதிகமான திறனும்அனுபவமும் கொண்ட நிபுணர்களையும்பணியாளர்களையும் நிபவ் குடும்பத்தில் இணைக்கும் பணியை இப்போது நாங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். நடப்பு காலண்டர் ஆண்டான 2023-க்குள் 6000-க்கும் அதிகமான பணியாளர்களுடன்முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் நாடுகளில் எமது சந்தை தலைமைத்துவத்தை மேலும் வலுவாக நாங்கள் நிலைநாட்டவிருக்கிறோம். உலகின் மிகச்சிறந்த ஹோம் லிஃப்ட்களை தயாரித்து வழங்குவதன் மூலம் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டிற்குள் எளிதான மற்றும் சவுகரியமான மொபிலிட்டி அனுபவங்களை சாத்தியமாக்கும் எமது குறிக்கோளோடு நாங்கள் முனைப்புடன் பணியாற்றுகிறோம்," என்று கூறினார்.

 

இந்த இரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வின் ஒரு அங்கமாகதனது சமீபத்திய ஹோம் எலிவேட்டர் தயாரிப்பான சீரீஸ் மேக்ஸ்-ஐ நிபவ் ஹோம் லிஃப்ட்ஸ் வெளியிட்டு அறிமுகம் செய்திருக்கிறது. சீரீஸ் மேக்ஸ் லிஃப்ட் என்பது உலகின் மிகப்பெரிய வீட்டிற்குள் பயன்படுத்தப்படும் மின்தூக்கியாகும். 240 கிலோகிராம் திறனுடன் G+3 வரை அமைக்கப்படக்கூடிய இந்த லிஃப்ட் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்சிறப்பான ஆற்றல் திறன்அழகானநவீன வடிவமைப்பு ஆகியவை இதனை மேலும் சிறப்பான தயாரிப்பாக ஆக்கியிருக்கிறது. இப்புதிய தயாரிப்பின் மூலம் இத்தொழில்துறையில் ஒரு புதிய நேர்த்தி தரநிலையை நிபவ் ஹோம் லிஃப்ட்ஸ் நிலைநாட்டுகிறது. உயர்தரமான அனுபவத்தை இதன் பயனாளிகள் நிச்சயமாக பெறமுடியும். 

 

ஐரோப்பிய தரநிலைகளின் படி உருவாக்கப்பட்டிருக்கும் நிபவ்-ன் இல்லத்திற்குள் பயன்படுத்தப்படும் மின்தூக்கிகளை நிறுவிஅந்த இல்லத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கை தரத்தை சிறப்பாக உயர்த்தியிருக்கிறது. நிலைப்புத்தன்மையுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த ஹோம் லிஃப்ட்சக்கர நாற்காலியை அல்லது வாக்கிங் ஃபிரேம்-ஐ பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக நுழையவும் மற்றும் வெளியேறவும் வசதியானது. நடமாட்ட திறன் பாதிப்புள்ள நபர்கள்மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வருபவர்கள்உடல் ஊனம் அல்லது கடுமையான ஆஸ்துமா போன்றவற்றால் அவதியுறும் நபர்கள் மற்றும் வயதானவர்கள் என பலதரப்பட்ட நபர்களுக்கும் வீட்டிற்குள் நடமாட்டத்தை இது எளிதாக்குகிறது. வழக்கமான ஹைட்ராலிக் அமைப்புகளைவிட குறைவான மின் சக்தியையே நிபவ்-ன் நுமாட்டிக் அடிப்படையில் செயல்படும் ஹோம் எலிவேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. கட்டுமான பணிக்கான அவசியமின்மைசுய ஆதரவு அளிக்கும் கட்டமைப்புகிரீஸ் பயன்பாடு இல்லாத தொழில்நுட்பம் மற்றும் சக்கர நாற்காலியை உபபோயகப்படுத்துவதற்கான இணக்க நிலை போன்ற இத்தொழில்துறையின் முதன்மை அம்சங்கள் கொண்டதாக நிபவ்-ன் ஹோம் லிஃப்ட்கள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்படுகின்றன.

 

நிபவ் ஹோம் எலிவேட்டர்ஸ் குறித்து: நிபவ் லிஃப்ட்ஸ் (மின்தூக்கிகள்) நிறுவனம்தரம் மற்றும் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரநிலைகளை உறுதிசெய்கிற ப்ரீமிய ஹோம் லிப்ட்களை தயாரித்து வழங்குகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் நிபவ் ஹோம் லிஃப்ட்கள் 14 நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உலகெங்கிலும் 44 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது. இன்னும் பல புதிய மையங்கள் விரைவில் அமைக்கப்படவிருக்கின்றன. இதன் மிகச்சிறப்பான சேவை மற்றும் நேர்த்தி நிலையை வழங்குவதில் பொறுப்புறுதி ஆகிய அம்சங்களுக்காக இந்நிறுவனம் உலகளவில் சிறந்த நற்பெயரைப் பெற்றிருக்கிறது. சென்னையில் இரு மிக நவீன உற்பத்தி தொழிலகங்களையும் பொறியியல் மற்றும் வடிவமைப்புக்கான இரு சிறப்பு மையங்களையும் சென்னையில் இந்நிறுவனம் கொண்டிருக்கிறது. தரம் மற்றும் பாதுகாப்பு மீது தளராத உறுதியை கொண்டிருக்கும் ப்ரீமியர் ஹோம் லிஃப்ட்ஸ் தொழில்துறையில் முதன்மை நிறுவனமாக தன்னை நிலைநாட்டியிருக்கிறது. ஒவ்வொரு இல்ல உரிமையாளரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு பிரத்யேகமான தீர்வுகளை வழங்கும் திறன் இந்நிறுவனத்தின் பெருமைக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. இந்நிறுவனத்தின் ஹோம் லிஃப்ட்களின் சமீபத்திய தொகுப்புவாடிக்கையாளர்களின் தனித்துவமான தேவைகள் மற்றும் விருப்பங்களை பல்வேறு அம்சங்களையும்ஆதாயங்களையும் அவர்களுக்கு வழங்குகிறது. ஹோம் லிஃப்ட்களுக்கு கௌரவமிக்க TUV சான்றிதழை பெற்றிருக்கும் ஒரே பிராண்டாகத் திகழும் நிபவ்தரம் மற்றும் நம்பகத்தன்மையின் உயர் தரநிலைகளை தொடர்ந்து பராமரிப்பதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடு தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டுமன்றி உலகளவில் இன்னும் பல நாடுகளிலும் ஹோம் லிஃப்ட்ஸ் தொழில்துறையில் ஒரு முக்கிய பெரு நிறுவனமாக வளர்ச்சி காண நிபவ் ஹோம் எலிவேட்டர்ஸ் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.


Photo Caption:

Photo – 1 From L to R - Mr. Thanumalaya Perumal, VP - Global Sales, Mr. Vimal Babu, Founder and CEO, Mr. Vijay Bhaskar, Director Global Expansion and Mr. Jitesh Shivakumar, Global Operations Head


 


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...