மொத்தப் பக்கக்காட்சிகள்

MF மியூச்சுவல் ஃபண்டில் சுலபமாக முதலீடு செய்ய டிபிஎஸ் பேங்க் இந்தியா-ன் டிஜிபோர்ட்ஃபோலியோ

 

  டிபிஎஸ் பேங்க் இந்தியா, தடையில்லா முதலீட்டுக் கலவை மேலாண்மைக்கு 'டிஜிபோர்ட்ஃபோலியோ ' அறிமுகம்..!

 

இந்தப் பிரிவில் வங்கி ஒன்று அறிமுகம் செய்யும் முதல் சிறந்த முதலீட்டுத் தீர்வு.

 

digiPortfolio, முதலீட்டாளர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிர்வகிக்க உதவுகிறது.

 

மும்பை, மார்ச் 29, 2023: டிபிஎஸ் பேங்க் இந்தியா (DBS Bank India) தனது டிஜிபேங்க் தளத்தில் (digibank platform) 'டிஜிபோர்ட்ஃபோலியோ' ('digiPortfolio') என்கிற புதுமையான முதலீட்டு தீர்வை அறிவித்துள்ளது. டிஜிபோர்ட்ஃபோலியோ என்பது தொழில்நுட்பம் மற்றும் மனித நிபுணத்துவம் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி மார்னிங்ஸ்டார் (Morningstar) நிறுவனம் மூலம் பல்வேறு முதலீட்டாளர்களின் இடர் முன்னுரிமைகளுடன் பொருந்தக்கூடிய முதலீட்டு விருப்பங்களின் தொகுப்பை (Investment Options) உருவாக்குகிறது. மியூச்சுவல் ஃபண்டுகளின் ஆயத்த தொகுப்புகளில் (Ready-Made Baskets) பணத்தை முதலீடு செய்ய பயனர்களுக்கு இந்த தளம் எளிதான தீர்வாகும். இந்தியாவில் இந்த வகையான டிஜிட்டல் தீர்வை வழங்கும் முதல் வங்கியாக டிபிஎஸ் பேங்க் இந்தியா உள்ளது.

 

தரவுகள் (Data), செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் அனுபவத்தை மாற்றி அமைப்பதோடு மேலும் தடையற்றதாக மாற்றுவதையும் டிபிஎஸ் வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில், முதலீட்டாளர்களின் பல்வேறு இடர் சுயவிவரங்களுக்கு (Risk profiles) ஏற்ப பல்வேறு முதலீட்டுக் கலவைகள் (portfolios) இருப்பதை உறுதி செய்வதற்காக, இந்திய பங்குச் சந்தை முதலீடுகள், கடன் சந்தை மற்றும் பணச் சந்தை ஆவணங்கள் போன்ற பல்வேறு வகையான முதலீட்டு விருப்பங்கள் அடங்கும். டிஜிபோர்ட்ஃபோலியோவின் இயங்குதளமானது குவான்டிஃபீடு (Quantifeed) நிறுவனத்தால் இயக்கப்படுகிறது மற்றும் தானியங்கி முறையில் சுலபமாக பயன்படுத்தப்படுகிறது.

 

டிபிஎஸ் பேங்க் இந்தியாவின் நுகர்வோர் வங்கி குழுமம் - நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் பிரசாந்த் ஜோஷி (Prashant Joshi, Managing Director & Head - Consumer Banking Group, DBS Bank India), கூறும் போது, "கடந்த இரண்டு ஆண்டுகளில் வளர்ந்து வரும் பங்குச் சந்தை முதலீடுகளில் இந்திய சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இருந்தாலும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் சிக்கலான தன்மை மற்றும் அதில் உள்ள  இடர்பாடுகள் பல வருங்கால முதலீட்டாளர்களை குழப்பத்தில் வைத்திருக்கின்றன. இந்த வித்தியாசமான சேவையின் மூலம், முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போது முதலீட்டு வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை சமநிலைப்படுத்த உதவும் அதே வேளையில், செயல்முறையை எளிதாக்குவதும் முதலீடு குறித்த அறிவாற்றல் இடைவெளியைக் குறைப்பதும் எங்கள் நோக்கமாகும்.

 

டிஜிபோர்ட்ஃபோலியோவின் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களில் பலர் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கேற்பதில் அதிக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சியாகும்." என்றார்.

 

மார்னிங்ஸ்டார் நிறுவனத்தின் தவல் கபாடியா, இயக்குனர் - போர்ட்ஃபோலியோ ஸ்பெஷலிஸ்ட், (Dhaval Kapadia, Director – Portfolio Specialist, Morningstar), கூறும் போது," சொத்து ஒதுக்கீடு (Asset Allocation), அதாவது, முதலீட்டாளரின் முதலீட்டுக் கலவையில் உள்ள பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் (Equity) கடன் சந்தை சார்ந்த முதலீடுகள் (Debt) போன்ற பல்வேறு சொத்து பிரிவுளின் ஒதுக்கீடு, நீண்ட காலத்திற்கு இடர்பாடு மற்றும் வெகுமதியின் அடிப்படையில் முதலீட்டு செயல்திறனின் முக்கிய இயக்கியாக அறியப்படுகிறது. டிஜிபோர்ட்ஃபோலியோ, மார்னிங்ஸ்டார் நிறுவனத்தின் நீண்ட கால சொத்து ஒதுக்கீடு பற்றிய ஆராய்ச்சியுடன் தொடங்குகிறது.

இந்த அணுகுமுறையானது, உள்நாட்டுப் பங்குகள் (Domestic Equities) மற்றும் நிலையான வருமான (Fixed-income) திட்டங்களின் பல்வகைப்பட்ட பரஸ்பர நிதி திட்டங்களின் (Diversified Mutual Funds)  அடிப்படையிலான முதலீட்டுக் கலவைகளை உருவாக்க பல்வேறு சொத்து பிரிவுகளாக கருதுகிறது. இந்த முதலீட்டுக் கலவைகள் ஒரு முதலீடாக வடிவமைக்கப்பட்டுள்ளது,  இது உங்கள் நிதி இலக்குகளை (Financial Goals) அடைய உதவும், உங்கள் இடர்பாட்டை சந்திக்கும் திறன மற்றும் முதலீட்டுக் காலத்துக்கு ஏற்ப சீரமைக்கப்பட்டுள்ளது." என்றார்.

டிஜிபோர்ட்ஃபோலியோவின் பிளாட்ஃபார்மில் உள்ள முதலீட்டுத் திட்டங்கள் என்பவை  மார்னிங்ஸ்டார் நிறுவனத்தால் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரஸ்பர நிதித் திட்டங்களை கொண்டதாகும்.  இந்த நிறுவனம் 37 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த முதலீட்டுக் கலவைகள், பங்குச் சந்தை ஏற்ற இறக்கமாக (Volatile) இருந்தாலும், அவை வலுவாக இருப்பதை உறுதிசெய்யவும், முடிந்தவரை சிறந்த வருவாயை அளிக்கவும் தொடர்ந்து இடைவிடாது சரிசெய்யப்படுகின்றன.

டிஜிபோர்ட்ஃபோலியோ, முதலீட்டாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 மற்றும்  ரூ.50,000 முதலீட்டில் தொடங்கும் இரண்டு திட்டங்களுக்கான அணுகலை உடனடியாக வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் மார்னிங்ஸ்டார் நிறுவனம் மூலம் இயக்கப்படும் முதலீட்டுக் கலவை கட்டுமானம், கண்காணிப்பு மற்றும் மறுசீரமைப்பு சேவைகள் (Portfolio Construction, Monitoring, and Rebalancing Services) போன்ற அம்சங்கள் அடங்கும். இந்த வங்கி, முதலீட்டாளர்களுக்கு விஷயங்களை விரைவாகவும், மலிவாகவும், திறமையாகவும் மாற்றுவதற்கு தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்துகிறது. விற்பனை அல்லது பரிவர்த்தனை கட்டணம் (Sales or Transaction Fees.) போன்ற கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லை. முதலீட்டாளர்கள் தங்களின் இலக்குகள், இடர்பாட்டை சந்திக்கும் திறன் மற்றும் முதலீட்டு காலம் ஆகியவற்றின் அடிப்படையில் தங்களுக்குப் பொருத்தமான திட்டங்களைத் தேர்ந்தெடுத்து எவ்வளவு காலம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

குவான்டிஃபீடு நிறுவனத்தின்  தலைமை தொழில்நுட்ப அதிகாரி & இணை நிறுவனர் ராஸ் மில்வர்ட் (Ross Milward, Chief Technology Officer & Co-Founder of Quantifeed), கூறும் போது," டிபிஎஸ் வங்கியுடனான எங்கள் உறவைத் தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இந்தியாவில் அவர்களின் சமீபத்திய புதிய அறிமுகத்தை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக வணிகத்தையும் தொழில்நுட்பத்தையும் எவ்வாறு ஒன்றிணைக்க முடியும் என்பதை குவான்டிஃபீடு நிறுவனம் தொடர்ந்து நேரடியாகப் பார்க்கிறது. டிஜிபோர்ட்ஃபோலியோ, டிஜிட்டல்  முதலீட்டு செல்வம் உருவாக்குவதில் தொடர்ந்து புரட்சியை ஏற்படுத்தும். வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட முதலீட்டு அனுபவத்தை கொண்டு வரும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்." என்றார்.

டிபிஎஸ் பேங்க் இந்தியா, அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முதலீட்டுத் தீர்வுகளை வழங்குவதில் வலுவான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது, வங்கி, தொழில்துறையில் முன்னணி உள்ள நிறுவனங்களுடன் தொடர்ந்து கூட்டாண்மை செய்கிறது.

2022 ஆம் ஆண்டில், வங்கி பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் இணைந்து 'பஜாஜ் ஃபின்சர்வ் டிபிஎஸ் பேங்க் சூப்பர்கார்ட்' ('Bajaj Finserv DB


 SuperCard
) - அறிமுகப்படுத்தியது, இது விசா மூலம் இயங்கும் கிரெடிட் கார்டு ஆகும். இது பல கார்டுகளின் தேவையை நீக்கி, வாடிக்கையாளர்களின் பணப் பயன்பாட்டை எளிதாக்கி உள்ளது. 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் பண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புநாள் ஏப்ரல் 27, 2024 மிகக் குறைந்த கட்டணம்..

மியூச்சுவல் பண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நாள் 27/04/2024 நேரம் : மாலை 7.00 • மியூச்சுவல் பண்டு வழியாக பணத்தை பெருக்குவது எப்படி?  • பங்...