மொத்தப் பக்கக்காட்சிகள்

அறிவிப்பாளர் B.H.அப்துல் ஹமீத் எழுதிய *'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்'*

தேனி - நாடார் சரஸ்வதி கல்லூரியில்...
அன்பு அறிவிப்பாளர்
B.H.அப்துல் ஹமீத் அவர்கள் எழுதிய *'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்'*
நூலை
பேராசிரியர் கு.ஞான சம்பந்தன் அறிமுகப்படுத்தினார்.

ஏற்புரையில்
B.H.அப்துல் ஹமீத் அவர்கள்...

"நான் 50 ஆண்டு காலம் பல ஆளுமைகள் மட்டும் அல்லாது உழைக்கும் எளிய மக்களின் வாழ்வனுபவங்களையும் வானொலியில் ஒலிபரப்பியிருக்கிறேன். மீனவர்களுடன் நடுக்கடலுக்குச் சென்று அவர்களின் வலைவீசும் பாடல்களையும்,
கரை சேர்ந்த பிறகு
அவர்களின் மனைவிமார்கள் கடலம்மாவுக்கு நன்றி செலுத்தும் பாடல்களையும் பதிவு செய்து ஒலிபரப்பி இருக்கிறேன்.
கிராமங்கள் தோறும் சென்று மூதாட்டிகளிடம் தாலாட்டுப் பாடல்கள், அறுவடைப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் என பல பாடல்களை பதிவு செய்து ஒலிபரப்ப உழைத்திருக்கிறேன்.
ஆனால் நான் 'துர்பாக்கியசாலி'.
அவை எல்லாம் அப்போதே காற்றில் கரைந்து மறைந்து போயின. என் உழைப்பும் கரைந்து மறைந்தே போயின.

ஆனால்,
இங்கே விருது பெற்று அமர்ந்திருக்கும் எழுத்தாளர்கள் பாக்கியசாலிகள்.
உங்கள் சிந்தனையும் எழுத்தும் 
புத்தகம் என்கிற வாகனம் ஏறி எப்போதும் வலம் வந்துகொண்டு இருக்கின்றன.
நாள்தோறும் படிக்கப் படுகின்றன.
எனவே நீங்கள்தான் பாக்கியசாலிகள்...
நான் துர்பாக்கியசாலி!"
என்று சொல்லி கண்கலங்கினார்.

இதைக் கேட்டு கண்கலங்கிய நான் உடனே மேடை ஏறி
அவரது கையில் இருந்த மைக்கை வாங்கி...

"சார்... 
தங்களுடைய படைப்புகள் காற்றில் கரைந்து மறையவில்லை.
தாங்கள் 'துர்பாக்கியசாலி' இல்லை. 
தாங்கள் ஒலிபரப்பிய பேச்சு, பேட்டிகள் , நாட்டுப்புற பாடல்கள் , மீனவர்களின் பாடல்கள் என 
நிலைய ரெக்கார்டர்டரில் 
இருக்கும் அனைத்தையும்  புத்தகமாக வெளியிட தயாராக இருக்கிறேன்.

எனவே, தாங்கள் எங்கள் தேனி மண்ணிலிருந்து,
அவலச்சுவையான "துர்பாக்கியசாலி" என்கிற துன்பச்சுமையான வார்த்தையைச் சுமந்து கொண்டு திரும்பிச் செல்ல வேண்டாம்.
தண்டபாணி தேசிகர்,
எஸ்.எம்.சுப்பைய நாயுடு
கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோரின் இசையும்...
தியாகராஜ பாகவதர், டி.எம்.செளந்தரராஜன், கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்றோரின் குரலும் 
எப்படி இந்த உலகில் காற்று மண்டலம் இருக்கும் வரை இருக்குமோ
அப்படி தங்கள் பெயரும் புகழும் நிலைத்து இருக்கும்!
எங்கள் தங்கக் குரல்
 தமிழ் மகனே,  கவலை வேண்டாம்...
நாங்கள் இருக்கிறோம்"
என்று அவரது கைகளைப் பற்றினேன்.
*--பொன்ஸீ.*
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...