மொத்தப் பக்கக்காட்சிகள்

நெகட்டிவான சிந்தனை கொண்ட ஒருவரால், பாஸிட்டிவான சிந்தனைக்கு மாற முடியுமா? Life

கருவில் குழந்தை உருவானதிலிருந்து, நான்கிலிருந்து, ஆறு வயது வரை, தான் கேட்டது ,பார்த்தது, உணர்ந்தது, தன்னை சுற்றி நடந்தது என பலவற்றை எந்த ஒரு எதிர்வினையுமின்றி அப்படியே தன்னுள் எடுத்துக் கொள்ளும். 

இதுவே அந்தக் குழந்தையின் அடிப்படை 'வேல்யு ஸிஸ்டமாக' ஆழ்மனதில் பதிகிறது. 

பின்னாட்களில் பெரும்பாலும், இந்த வேல்யு ஸிஸ்டத்தை அடிப்படையாக வைத்தே ஒவ்வொருவருக்கும் தன்னைச் சுற்றி நடப்பவற்றின் மீது பிரத்யேகமான கருத்து ஏற்படுகிறது.

 இதனாலேயே சில சம்பவங்கள் ஒருவரை அதிகமாக பாதிக்கிறது. மற்றவரை சற்றே தொட்டுவிட்டு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் கடந்து விடுகிறது. சிலர் எதையும் பாஸிட்டிவாக பார்க்கிறார்கள். சிலர் எல்லாவற்றையும் நெகட்டிவாகவே பார்க்கிறார்கள். 

"We are living in the feeling of our thinking". 'நாம் நம் எண்ணங்களின் உணர்வுகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்… !' நம்மை சுற்றி  நடப்பது நல்லதா, கெட்டதா என்பதைத் தாண்டி, நம் எண்ணங்களும், அது ஏற்படுத்தும் உணர்வும், நல்லது கெட்டதை தீர்மானிக்கிறது என்கிறது வாழ்வியல்'. 

சரி.. நெகட்டிவான சிந்தனை கொண்ட ஒருவரால், பாஸிட்டிவான சிந்தனைக்கு மாறி தன் வாழ்க்கையை சீர் செய்ய முடியுமா?!

 நிச்சயமாக முடியும் .  'தான்' என்ன செய்கிறோம் என்ற விழிப்புணர்ச்சியும் 'தான்' மாற வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால், ஒருவர் எந்த வயதிலும் தன் எண்ணங்களை வசப்படுத்திக் கொண்டு, தன் வேல்யு ஸிஸ்டத்தை மேம்படுத்தி, தான் விரும்பும் வாழ்க்கையை வாழலாம். அல்லது, எத்தனை வயதானாலும், சூழ்நிலை எப்படி மாறினாலும், குழப்ப மனநிலையிலேயே வாழ்க்கை தொடரும். என்கிறது ஆழ்மன இயல். எது வேண்டும் நமக்கு?!

-dr.Fajila Azad,International Lifecoach
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...