மொத்தப் பக்கக்காட்சிகள்

இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு! 


| Google Pay Paytm PhonePe Daily Limits


கூகுள் பே (Google Pay). பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe) போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்துபவர்களுக்கு 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதென்ன கட்டுப்பாடுகள்? ஏன் இந்த திடீர் நடவடிக்கை? இதோ விவரங்கள்:

2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!


கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ ஆப்கள் ஆனது நமது வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India - NPCI) அறிமுகப்படுத்திய யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface - UPI) ஆனது பணப்பரிமாற்றங்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எளிமையாகவும், பாதுகாப்பாகவும் மாற்றி உள்ளது.

இருப்பினும் கூட, அணுகல்தன்மை (Accessibility) காரணமாக இந்திய அரசாங்கம் யுபிஐ ஆப் பயனர்களுக்கு 2 புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது!

முதல் கட்டுப்பாடு!

இந்திய அரசாங்கம் அறிவித்துள்ள முதல் கட்டுப்பாடு ஆனது யுபிஐ ஆப்கள் வழியாக அனுப்பப்படும் மொத்த தொகையோடு (Total Amount) தொடர்புடையது.

NPCI-யின் புதிய விதிமுறையின் படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான தொகையை மட்டுமே UPI ஆப்கள் வழியாக அனுப்ப முடியும்.

அதாவது கனரா வங்கி (Canara Bank) போன்ற சிறிய வங்கிகள் ரூ.25,000 வரை என்கிற வரம்பை நிர்ணயம் செய்துள்ளன. அதேசமயம் எஸ்பிஐ (SBI Bank) போன்ற பெரிய வங்கிகள் ஆனது தினசரி யுபிஐ பரிவர்த்தனை வரம்பை ரூ.1,00,000 என்று நிர்ணயம் செய்துள்ளன. அதாவது இந்த வரம்பு - வங்கிக்கு வங்கி மாறுபடும் என்று அர்த்தம்!


இரண்டாவது கட்டுப்பாடு!

NPCI-யின் இரண்டாவது கட்டுப்பாடு ஆனது ஒரு நாளைக்கு எத்தனை முறை யுபிஐ ஆப்களை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யலாம் என்பதோடு தொடர்புடையது!

இனிமேல் யுபிஐ ஆப்களை பயன்படுத்தி - ஒரு நாளைக்கு இருபது பரிமாற்றங்களை (அதிகபட்சம்) மட்டுமே செய்ய முடியும், இந்த கட்டுப்பாட்டை மீறிய பிறகு, மறுபடியும் ஒரு பணபரிமாற்றத்தை செய்ய நீங்கள் 24 மணிநேரம் காத்திருக்க வேண்டும்.

இங்கே இருக்கும் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் - இந்த வரம்பு உங்களுடைய வங்கியின் கொள்கைகளை பொறுத்து வேறுபடலாம் என்பதே ஆகும்!

கூகுள் பே ஆப்பிற்கான தினசரி யுபிஐ வரம்பு எவ்வளவு?
சுருக்கமாக GPay என்று அழைக்கப்படும் Google Pay ஆப்பிற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.1,00,000 ஆகும். மேலும் இது அனைத்து UPI ஆப்கள் மற்றும் வங்கிக் கணக்குகளிலும் ஒரு நாளைக்கு மொத்தம் 10 பரிவர்த்தனைகளை மட்டுமே அனுமதிக்கும்.

போன்பேஆப்பிற்கான தினசரி யுபிஐ வரம்பு எவ்வளவு?

PhonePe ஆப்பிற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.1,00,000 ஆகும். இருப்பினும் இந்த வரம்பு உங்களுடைய வங்கிக்கு ஏற்ப மாறுபடலாம். மேலும் ஒவ்வொரு நாளும் PhonePe மூலம் அதிகபட்சமாக 10 அல்லது 20 பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும்.

பேடிஎம் ஆப்பிற்கான தினசரி யுபிஐ வரம்பு எவ்வளவு?

Paytm ஆப்பிற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ.1,00,000 ஆகும். பேடிஎம் ஆப்பின் டெய்லி லிமிட்டை பொறுத்தவரை, ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 20 முறை மட்டுமே பணபரிமாற்றங்களை செய்ய முடியும்!

பகிர்வு - தகவல் உலா 



Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/ChHBJGCH9nx2hJW0S6pIDg
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

20 ஆண்டுகளில் 33 பங்குகள் 100 மடங்குக்கு மேல் வருமானம்..! பட்டியல் இதோ...!

20 ஆண்டுகளில் 33 பங்குகள் 100 மடங்குக்கு மேல் வருமானம் கொடுத்துள்ளன! ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 20 ஆண்டுகளில் ...