மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆலமரத்தடி-யில் துவங்கப்பட்ட மும்பை பங்குச் சந்தை.. 147வது பிறந்த நாள்.

ஆலமரத்தடி-யில் துவங்கப்பட்ட மும்பை பங்குச் சந்தை.. 147வது பிறந்த நாள்..

பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (BSE), 28-அடுக்குகளைக் கொண்ட ஃபிரோஸ் ஜீஜீபோய் டவர்ஸில் அமைந்துள்ளது, இது ஆசியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்ட பங்குச் சந்தையாகும்.

ஜூலை 9, 1875 இல் பம்பாய் தரகர்கள் குழுவால் நேட்டிவ் பங்குகள் மற்றும் பங்கு தரகர்களின் தன்மை, பங்குகளின் நிலை மற்றும் நலன்களைப் பாதுகாக்க ஒரு சங்கத்தை உருவாக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பங்குச் சந்தை நிறுவப்பட்டது.

தெற்கு பம்பாயில் டவுன் ஹால் அருகே உள்ள ஒரு ஆலமரத்தடியில் இருந்து செயல்படத் தொடங்கிய 147 ஆண்டுகள் பழமையான மும்பை பங்குச்சந்தை 1980 இல் தான் PJ டவர்ஸுக்கு மாறியது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

இந்திய அரசின் அங்கீகாரம்
ஆகஸ்ட் 1957 இல், பத்திர ஒப்பந்தங்கள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் பங்குச் சந்தையாகப் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (BSE) அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இந்தியாவின் தலையாயப் பங்குச்சந்தையாக மாறியது.

147 ஆண்டுகள்
கடந்த 147 ஆண்டுகளில், இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றில் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (BSE) சுவாரஸ்யமான மற்றும் நினைவில் கொள்ள வேண்டிய நிகழ்வுகள் நிறைந்த பயணத்தைக் கொண்டுள்ளது. பங்குச் சந்தையின் வரலாறு மற்றும் முக்கிய மைல்கற்களை இங்கே பார்க்கலாம்.

பிரேம்சந்த் ராய்சந்த்
பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (BSE) உருவாக அடிப்படை காரணம் பருத்தி ராஜா அல்லது பிக் புல் எனச் செல்லமாக அழைக்கப்படும் பிரேம்சந்த் ராய்சந்த் என்பவர் என்பதால், இதற்கான பெருமை அவரைச் சாரும், ஆனால் பிஎஸ்ஈ இன்று மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதற்கு இந்திய அரசு முக்கியக் காரணமாகும்.

1855 முதல் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்
பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-ன் வரலாறு 1855 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது, அப்போது 22 பங்குத் தரகர்கள் மட்டுமே கொண்டு இருந்ததால் டவுன் ஹால் அருகே ஒரு ஆலமரத்தடியில் கூடி வர்த்தகம் பரிமாற்றங்களைச் செய்தனர்.

ஆலமரங்கள் தான் ஆபீஸ்
அடுத்த 10 ஆண்டுகளில், புரோக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் டவுன் ஹாலில் இருந்து மெடோவ்ஸ் தெருவில் உள்ள ஆலமரங்களுக்கு மாறினார்கள். பெருகிவரும் தரகர்களின் எண்ணிக்கைக்கு இடமளிக்க இடம் விட்டு இடம் நகர்ந்த பிறகு, 1874 ஆம் ஆண்டுத் தலால் தெருவில் நிரந்தர இடத்தில் இருந்து இக்குழு செயல்படத் தொடங்கியது.

தி நேட்டிவ் ஷேர் & ஸ்டாக் ப்ரோக்கர்ஸ் அமைப்பு
புரோக்கர்கள் தங்களுக்கான நிரந்தர இடத்தைத் தேர்வு செய்த அடுத்த ஆண்டிலேயே அதாவது ஜூலை 9, 1875 அன்று, தி நேட்டிவ் ஷேர் & ஸ்டாக் ப்ரோக்கர்ஸ் என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பு தான் காலப்போக்கில் மும்பை பங்குச்சந்தையாக மாறியது.

1921 - 1990 வரை
1921: பேங்க் ஆப் இந்தியாவால் ஒரு கிளியரிங் ஹவுஸ் தொடங்கப்பட்டது.

1957: பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் (SCRA) கீழ் இந்திய அரசாங்கத்திடமிருந்து BSE நிரந்தர அங்கீகாரத்தைப் பெற்றது.

1986: நாட்டின் முதல் ஈக்விட்டி இண்டெக்ஸ், எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ், அடிப்படை ஆண்டு 1978-79 =100 உடன் தொடங்கப்பட்டது.

1987: முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி அறிமுகப்படுத்தப்பட்டது.

1989: BSE பயிற்சி நிறுவனம் (BTI) தொடங்கப்பட்டது.

1990 - 2000 வரை

1990: முதல் முறையாக, S&P BSE சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்தது.

1992: எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் 4000-ஐ தாண்டியது.

1992: செபி சட்டம் மற்றும் செக்யூரிட்டிஸ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (எஸ்ஏடி) நிறுவப்பட்டது.

1995: BSE பாம்பே ஆன்லைன் வர்த்தக அமைப்பு (BOLT) எனப்படும் திரை அடிப்படையிலான வர்த்தக அமைப்பைத் தொடங்கியது.

2000: செபி அங்கீகரிக்கப்பட்ட டெரிவேட்டிவ் ஒப்பந்தங்களில், டெரிவேட்டிவ் டிரேடிங் மற்றும் செட்டில்மென்ட் தொடங்க பிஎஸ்இக்கு செபி ஒப்புதல் அளித்தது.

2001 - 2010 வரை

2001: BSE TECK இன்டெக்ஸ் தொடங்கப்பட்டது.

2007: சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்சில் மற்றும் டாய்ச் போர்ஸ் உடன் பிஎஸ்ஈ மூலோபாயப் பங்காளிகளாக இணைந்தது. சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்ச் பிஎஸ்ஈ-யில் 5 சதவீத பங்குகளை ரூ.189 கோடிக்கு வாங்கியது. ஜெர்மனிய பங்குச் சந்தையான Deutsche Borse, BSE இல் இதேபோன்ற 5 சதவீத பங்குகளை ரூ.189 கோடிக்கு வாங்கியது.

2009: பிஎஸ்இ StAR MF - மியூச்சுவல் ஃபண்ட் வர்த்தகத் தளத்தை அறிமுகப்படுத்தியது.

2011 - 2020 வரை

2011: பங்குச்சந்தையின் பெயர் இப்போது பயன்படுத்தப்படும் 'பிஎஸ்இ லிமிடெட்' என மாற்றப்பட்டது.

2013: பிஎஸ்இ நாணய டெரிவேட்டிவ் பிரிவை அறிமுகப்படுத்தியது.

2015: இந்திய தொழில்துறையின் கூட்டமைப்பு CII மற்றும் இந்திய நிறுவன விவகாரங்களுக்கான நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, BSE கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு தளமான 'சம்மான்' ('Sammaan') அறிமுகப்படுத்தியது.

2016: பரிமாற்றத்தின் 140 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், ஆசியாவின் மிகப் பழமையான பங்குச் சந்தை சொந்த தபால் தலை பெற்றது.

2020: Frankfurt-ஐ தளமாகக் கொண்ட Deutsche Boerse தனது மீதமுள்ள 1.75 சதவீத பங்குகளைத் திறந்த சந்தை பரிவர்த்தனை மூலம் 44 கோடி ரூபாய்க்கு விற்று BSE இலிருந்து வெளியேறியது. பிஎஸ்இ லிமிடெட்டின் 2.67 சதவீத பங்குகளை ஒரு நாள் முன்னதாக ரூ.65.88 கோடிக்கு விற்றது.

2021 முதல்

2021: பிஎஸ்ஈ அதன் வரலாற்று உச்ச அளவான 62,245.43 புள்ளிகளை 2021ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பதிவு செய்தது

2022: முதல் 6 மாதத்தில் 9.79 சதவீதம் வரையில் சரிந்தது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...