மொத்தப் பக்கக்காட்சிகள்

கார் விபத்துக்கு என்ன காரணம்

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துகளை பார்க்கும் போது இதில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான். இதன் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைள்.
சமூக ஆர்வலர்கள் ( 𝙍𝙏𝙄 𝘼𝘾𝙏 2005 ) 
1. விபத்தில் சிக்கும் வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன் பாட்டிற்க்காக வாங்கியவண்டிகள்.

இதற்கு காரணம்.

1. சொந்த வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. பெரும்பாலும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுப்பார்கள். ஆதலாம் போதுமான கட்டுப்பாடு கிடைப்பது கிடையாது. 

2. சொந்த கார்களை பெரும்பாலும் அடிக்கடி ஓட்டாததால் அவர்கள் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது.

3.தொலைதூரங்களுக்கு செல்லும்போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர்களுக்கு பழக்கம் இல்லாததால் அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாததால் தீடீரென காரைக்கட்டுபடுத்த இயலாமல் எங்காவது மோதி விடுகிறார்கள்.

4. காரை அடிக்கடி
ஓட்டாததால் சில நேரங்களில் பிரேக்கிற்க்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அமுக்கிவிடுவார்கள்.

இதை தவிர்ப்பது எவ்வாறு?

1. பொதுவாக அடிக்கடி காரை ஒட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது..இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது.

2. அடிக்கடி சென்று பழக்கமில்லாத சாலைகளில் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது

3. வாகனத்தை தொலைதூர பயணத்திற்க்கு பயன்படுத்தும் போது டயர், மற்றும் பின்க்க சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.
********************************************
_________________________
ரொம்ப முக்கியம்
_________________________

4. லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து.ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் எரிவது இல்லை. ஆதால் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
********************************************

5. நான்குவழிச்சாலைகளில் ஒரு லேனில் இருந்து மற்றொரு லேனிற்க்கு மாறூம் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்து மாறவும்.

6. அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை கவனிக்கவும் மறக்காமல்.

7. நமது சாலைகளில் 100கிமீ மேல் பயணம் செய்வதை தவிர்க்கவும்.
______________________________
 ஏனென்றால் நமது சாலைகள் அந்தவேகத்திற்க்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.
_______________________________
8. காரை ஓட்டுபவர் ஒரே மூச்சில் ஓட்டாமல், இடைக்கிடை சற்று ஓய்வெடுத்து ஒட்டுதல் நலம்.

9. ஓட்டுபவர் உணவை ஒரே தடவையில் உண்ணாது, இரண்டு மூன்று தடவையாக உண்பது நலம்.

10. குறிப்பாக புரோட்டா, முட்டை புரோட்டா போன்ற உணவுகளை, ஓட்டுபவர் தவிர்த்தல் நலம்...
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் ஃபண்ட் NFO- SBI வாகன வாய்ப்பு நிதி 17.05.2024 முதல் 31.05.2024 வரை

👆🏿 🚘 *NFO- SBI வாகன வாய்ப்பு நிதி* (17.05.2024 முதல் 31.05.2024 வரை)  நிதி மேலாளர்- திரு.தன்மய் தேசாய்   பெஞ்ச்மார்க் - நிஃப்டி ஆட்டோ டிஆ...