மொத்தப் பக்கக்காட்சிகள்

ஹெச்.டி.எஃப்.சி நிஃப்டி 100 இண்டெக்ஸ் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி நிஃப்டி 100 ஈக்வல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட்

 ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், இந்தியர்கள் லார்ஜ் கேப் ஃபண்ட்களில் முதலீடு செய்வதை எளிதாக்க, ஹெச்.டி.எஃப்.சி நிஃப்டி 100 இண்டெக்ஸ் ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி நிஃப்டி 100 ஈக்வல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட் ஆகிய இரு ஃபண்ட்களை அறிமுகப்படுத்துகிறது.

இந்தியர்கள் லார்ஜ் கேப் (large cap) ஃபண்ட்களில் முதலீடு செய்ய ஏதுவாக  ஹெச்.டி.எஃப்.சி நிஃப்டி 100 இண்டெக்ஸ் ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி நிஃப்டி 100 ஈக்வல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட் ஆகிய இரு ஃபண்ட்களை  ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் தீர்வாக (HDFC MF Index Solution)  அறிமுகப்படுத்துகிறது.

புதிய ஃபண்ட் வெளியீட்டுக் காலம்: -  பிப்ரவரி 11, 2022 - பிப்ரவரி 18, 2022

இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றாக ஹெச்.டி.எஃப்.சி  அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், (HDFC Asset Management Company)  உள்ளது. இந்த நிறுவனம் 4.41 டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இந்த நிறுவனம், ஹெச்.டி.எஃப்.சி நிஃப்டி 100 இண்டெக்ஸ் ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி நிஃப்டி 100 ஈக்வல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட்  (HDFC NIFTY 100 Index Fund and HDFC NIFTY100 Equal Weight Index Fund.) ஆகிய இரண்டு புதிய மியூச்சுவல் ஃபண்ட்களை (NFOs) அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இரண்டு  புதிய ஃபண்ட்களும் முறையே நிஃப்டி 100 இண்டெக்ஸ் (NIFTY 100 Index)  மற்றும் நிஃப்டி 100 ஈக்வல் வெயிட் இண்டெக்ஸ் (NIFTY 100 Equal Weight Index) ஆகியவற்றின் செயல்திறனுடன் தொடர்புடைய வருமானத்தைத் தேடும் முதலீட்டாளர்களை இலக்காகக் கொண்டவை ஆகும்.  மேலும், இவற்றின் வருமானம்  கண்காணிப்புப் பிழைகளுக்கு (Tracking Errors) உட்பட்டவை.  அதாவது, இந்தக் குறியீடுகளின் வருமானத்தை விட இந்த இரு புதிய ஃபண்ட்களின் வருமானத்தில் சற்று மாறுதல் இருக்கக் கூடும்.

இந்த இரு புதிய ஃபண்ட்களின் வெளியீடு பிப்ரவரி 11, 2022 அன்று  ஆரம்பிக்கிறது; பிப்ரவரி 18, 2022 அன்று  நிறைவு பெறுகிறது. இந்தப் புதிய ஃபண்ட்களின் வெளியீடு,  இந்தியாவின் லார்ஜ் கேப் ஃபண்ட்களில் முதலீட்டுக்கான வழியை எளிதாக்குகின்றன

இந்திய  லார்ஜ் கேப் நிறுவனங்கள் (NIFTY 100 இண்டெக்ஸில் இடம் பெற்றிருக்கும் பங்குகளாகும்) டிசம்பர் 31, 2021 நிலவரப்படி, இந்தியப் பங்குச் சந்தையில்  பட்டியலிடப்பட் நிறுவனங்களின் மொத்த பங்குச் சந்தை மதிப்பின் (Market cap) லார்ஜ் கேப் பங்குகளின் பங்களிப்பு 68% ஆகும்.



இந்த இரு புதிய ஃபண்ட்களின் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த ஹெச்.டி.எஃப்.சி ஏ.ஏம்.சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி  நவ்நீத் முனோட் (Mr. Navneet Munot, MD  & CEO, HDFC AMC) கூறும் போது, இந்த இரண்டு  புதிய வெளியீடு என்பது ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இண்டெக்ஸ் ஃபண்ட்களை விரிவுபடுத்தி, இந்தியாவின் 100 பெரிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய அனுமதிக்கும் எங்கள் முயற்சியின் ஒரு பகுதியாகும். ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி நிரூபிக்கப்பட்ட திறன் கொண்ட குறியீட்டு தீர்வுகளில் வரலாற்றை கொண்ட நிறுவனங்களில் ஒன்றாகும்.” என்றார்.

ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி ஆனது 19 வருடங்களுக்கு மேலாக இண்டெக்ஸ் ஃபண்டுகளை நிர்வகிப்பதற்கான அனுபவத்தைக் கொண்டுள்ளது, தற்போதுள்ள குறியீட்டு தீர்வுகள் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் மிகக் குறைந்த கண்காணிப்புப் பிழைகளைக் கொண்டுள்ளன*.

நிஃப்டி 100 குறியீட்டின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான உத்திகளை  இந்த இரு புதிய ஃபண்ட்களும் வழங்குகின்றன. நிஃப்டி 100 இண்டெக்ஸ் (NIFTY 100 Index), ப்ரி ஃப்ளோட் மார்க்கெட் கேப் (Free Float Market Cap.) அடிப்படையிலான வெயிட்டேஜ் கொடுக்கிறது. நிஃப்டி 100 ஈக்வல் வெயிட் இண்டெக்ஸ் (NIFTY100 Equal Weight Index) அனைத்து பங்குகளுக்கும் சம விகிதாச்சாரத்தை கொடுக்கிறது.

நல்ல லாபம் கொடுக்கும் பங்குகள் மாறிக்கொண்டே இருக்கும். எனவே, முதலீட்டாளர்கள் இரண்டு ஃபண்டுகளிலும் முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ளலாம்.

* டிசம்பர் 31, 2021 நிலவரப்படி கடந்த 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு காலத்திற்கு (ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி நிறுவனத்தின்  உள் கணக்கீடு)

ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி (About HDFC AMC)

ஹெச்.டி.எஃப்.சி அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் (HDFC Asset Management Company Limited - HDFC AMC) என்பது நாட்டின் மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஒன்றான ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டு மேலாளர் (Investment Manager) ஆகும். இது டிசம்பர் 10, 1999 இல் நிறுவனங்கள் சட்டம், 1956 இன் கீழ்  தொடங்கப்பட்டது.  3 ஜூலை 2000 அன்று  செபி (SEBI) அமைப்பால் ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்டிற்கான சொத்து மேலாண்மை நிறுவனமாக செயல்பட அங்கீகரிக்கப்பட்டது.  இது தவிர போர்ட்ஃபோலியோ மேஜேஜ்மென்ட் சர்வீசஸ் / மாற்று முதலீட்டுத் திட்டங்களுக்கும் (PMS / AIF) அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி  மியூச்சுவல் ஃபண்டின் திட்டங்களுக்கான முதலீட்டு மேலாளராக ஹெச்.டி.எஃ.சி ஏ.எம்.சி உள்ளது. பங்குச் சார்ந்த திட்டங்கள்  மற்றும் நிலையான வருமானம் (Equity and Fixed Income)  மற்றும் பிற பல்வகைப்பட்ட சொத்து பிரிவு கலவையை நிர்வகிக்கிறது. வங்கிகள்,  தனிப்பட்ட நிதி ஆலோசகர்கள் (Independent Financial Advisors) மற்றும் தேசிய விநியோகஸ்தர்கள் அடங்கிய பல்வகைப்பட்ட விநியோக வலையமைப்புடன் நாடு  முழுக்க கிளையும் கொண்டுள்ளது.

Disclaimers

NIFTY Disclaimer: HDFC NIFTY 100 Index Fund and HDFC NIFTY100 Equal Weight Index Fund "(the Products)" offered by HDFC Asset Management Company Limited are not sponsored, endorsed, sold or promoted by NSE INDICES LIMITED (formerly known as India Index Services & Products Limited (IISL)). NSE INDICES LIMITED does not make any representation or warranty, express or implied (including warranties of merchantability or fitness for particular purpose or use) and disclaims all liability to the owners of the Products or any member of the public regarding the advisability of investing in securities generally or in the Products linked to NIFTY 100 Index / NIFTY100 Equal Weight Index or particularly in the ability of the NIFTY 100 Index / NIFTY100 Equal Weight Index to track general stock market performance in India. Please read the full Disclaimers in relation to the NIFTY 100 Index / NIFTY100 Equal Weight Index in the Offer Document of the Products.

 

For Disclosure of percentage of AUM by geography and Asset Class-wise disclosure of Quarterly AUM & AAUM click here:

https://files.hdfcfund.com/s3fs-public/2022-01/Disclosure%20of%20AUM%20-%20As%20on%2031-Dec-2021.pdf

 

MUTUAL FUND INVESTMENTS ARE SUBJECT TO MARKET RISKS, READ ALL SCHEME RELATED DOCUMENTS CAREFULLY.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் 2024 அக்டோபர் 1 முதல் 

ஐ ஆர் டி ஏ உத்தரவுப்படி அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் அக்டோபர் 1 முதல்  செய்யப்படவுள்ளது  அதன்படி எல் ஐ சி யில் 10 ஆண்டுகளுக்கு...