மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்தியாவின் முதல் இ.எஸ்.ஜி ஐ.பி.ஓ: ஃபேப்இந்தியா

 

இந்தியாவின்   முதல் இ.எஸ்.ஜி ஐ.பி.ஓ:  ஃபேப்இந்தியா லிமிடெட் புதிய பங்கு வெளியீட்டுக்கு டி.ஆர்.ஹெச்.பி பதிவு செய்கிறது: நிலைத்தன்மை சார்ந்த பங்குகளை பங்குச் சந்தைகளில் பட்டியலிடுகிறது

ஃபேப்இந்தியா நிறுவனத்தின் நிறுவனர்கள் பங்குகளை அன்பளிப்பாக கொடுக்க திட்டம்

இந்தியாவின் முதல் இ.எஸ்.ஜி ஐ.பி.ஓ (ESG IPO) –  ஃபேப்இந்தியா லிமிடெட் (Fab india Limited - “Fabindia” or the “Company”) வெளியிட திட்டமிட்டுள்ளது.  ESG  என்பது Environmental, Social, and Governance (சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம்) என்பதன் சுருக்கம் ஆகும்.

இ.எஸ்.ஜி ஐ.பி.ஓ வெளியிட ஃபேப் இந்தியா லிமிடெட் நிறுவனம், புதிய பங்குகள் வெளியிட டி.ஆர்.ஹெச்.பி (DRHP - Draft Red Herring Prospectus) விண்ணப்பத்தை இந்தியப் பங்குச் சந்தையை நெறிப்படுத்தும் செபி அமைப்புக்கு சமர்பித்துள்ளது. இந்தப் புதிய பங்கு வெளியீடு மூலம் ரூ. 500 கோடி திரட்டப்படுகிறது. இது தவிர பங்குச் சந்தையில் ஆஃபர் பார் சேல் (offer for sale) என்கிற முறையில் ஏற்கனவே பங்கு முதலீட்டாளர்களாக இருப்பவர்களின் 25,050,543 சம பங்குகள் (Equity Shares) விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஃபேப் இந்தியா லிமிடெட்ன் இந்தியாவின் முதல் இ.எஸ்.ஜி ஐ.பி.ஓ ஏன்?

ஃபேப்இந்தியா நிறுவனம், 50,000-க்கும் மேற்பட்ட கைவினைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்கிறது; தோராயமாக 64% கைவினைஞர்கள் பெண்கள் ஆவார்கள்.  அவர்கள் தங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்குm உதவுகிறார்கள். 70% பேர் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். இந்த நிறுவனம் 2,200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் நேரடியாகவும், 10,300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் அசோசியேட்ஸ் (associates) மூலமாகவும் நிலையான விவசாய நடைமுறைகளை உருவாக்கி உள்ளது. உலகளாவிய இயற்கை சான்றிதழைப் (Global Organic Certification) பெற்று தருவதில் விவசாயிகளுக்கு  உதவி செய்வது மூலம் நச்சுத்தன்மையற்ற விவசாய கலாச்சாரத்தை உருவாக்க ஃபேப் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

ஃபேப்இந்தியா, கைவினைஞர்களுக்கு மூலப்பொருட்களை வீட்டிற்கே வழங்குகிறது; மேலும்,  உற்பத்தி செய்து, விற்பனைக்கு தயாராக இருக்கும் பொருள்களை வீட்டிற்கே வந்து எடுத்துச் செல்கிறது. இப்படி செய்வது மூலம் அவர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிறுவனம் அல்லது அதன் துணை நிறுவனங்களில் ஈடுபட்டுள்ள  கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வெகுமதி மற்றும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஃபேப்இந்தியாவின் சில நிறுவனர்களான (Promoters) பிம்லா நந்தா பிஸ்ஸல் மற்றும் மதுகர் கேரா (Bimla Nanda Bissell and Madhukar Khera) ஆகியோர், ஜனவரி 14, 2022 தேதியிட்ட தங்களின் கடிதங்களின்படி, முறையே 4,00,000 மற்றும் 3,75,080  பங்குகளை பரிமாற்றம் செய்ய உத்தேசித்துள்ளனர். இதையொட்டி,  வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ் (Draft Red Herring Prospectus) செபி அமைப்பிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து,

(i) ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை தாக்கல் செய்வதற்கு முன் அல்லது (ii) பொருந்தக்கூடிய சட்ட விதிமுறைகளுக்கு  இணங்க, செபி ஐ.சி.டி.ஆர் (SEBI ICDR) ஒழுங்குமுறைகளின் கீழ், சலுகை மற்றும் பொருந்தக்கூடிய ஒழுங்குமுறை பூட்டு காலம் (Lock-in period) முடிந்த பிறகு. ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸைத் தாக்கல் செய்வதற்கு முன், அத்தகைய முன்மொழியப்பட்ட பரிமாற்றம் (அல்லது அதன் ஏதேனும் பகுதி) மேற்கொள்ளப்பட்டால், ஃபேப்இந்தியாவில் பிம்லா நந்தா பிஸ்ஸல் மற்றும் மதுகர் கெரா ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட பங்குகள் உட்பட தொடர்புடைய விவரங்கள் ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸில் புதுப்பிக்கப்படும்.

ஃபேப்இந்தியாவின் நிறுவனர்களான பிம்லா நந்தா பிஸ்ஸல் மற்றும் மதுகர் கேரா ஆகியோர் தங்களுக்குரிய டீமேட் கணக்குகளைத் தொடங்கி முறையே 4,00,000 சம பங்குகள் மற்றும் 3,75,080 சம பங்குகளை கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பரிசாக மாற்றுவதற்கு முன்மொழிந்துள்ளனர். ஜனவரி 15, 2022 தேதியிட்ட தீர்மானத்தின்படி, ஃபேப்இந்தியாவின் நிறுவனர்களில் ஒருவரான வில்லியம் நந்தா பிஸ்ஸெல் ஜனவரி 14, 2022 தேதியிட்ட கடிதத்தை இயக்குநர்கள் குழு கவனத்தில் எடுத்தது. அதன்படி, குறிப்பிட்ட சில தெரிந்தவர்களுக்கு பரிசாக 32,200  சம பங்குகளை மாற்றும் எண்ணத்தை பதிவு செய்தது. (நன்கொடையாளர்கள் -“Donees”). இந்த வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ் தேதியின்படி, சில நன்கொடையாளர்களின் தொடர்புடைய டிமேட் கணக்குகள் மாற்றம் நடந்து கொண்டிருப்பதால் (மற்றும் தேவையான சட்ட முறைகள் இன்னும் முடிக்கப்படவில்லை), வில்லியம் நந்தா பிஸ்ஸல் அத்தகைய  சம பங்குகளை நன்கொடையாளர்களுக்கு மாற்ற முன்மொழிகிறார். செபியிடம் இந்த டிராஃப்ட் ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸைத் தாக்கல் செய்வது, ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸைத் தாக்கல் செய்வதற்கு முன்பு அத்தகைய மாற்றங்கள் முடிக்கப்படும், மேலும் ஃபேப்இந்தியாவில் வில்லியம் நந்தா பிஸ்ஸெல்லின் புதுப்பிக்கப்பட்ட பங்குகள் உட்பட தொடர்புடைய விவரங்கள் ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸில் புதுப்பிக்கப்படும்.



புதிய பங்கு வெளியீடு, பங்குச் சந்தையில் பங்குதாரர்களின் பங்குகள் விற்பனை (Selling Shareholders for IPO, Offer for Sale):

பிம்லா நந்தா பிஸ்ஸல், வில்லியம் நந்தா பிஸ்ஸல் மற்றும் மதுகர் கேரா ஆகியோர் புதிய பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நிறுவனர்கள் (Promoters) ஆவார்கள். அதேசமயம், விஜய் குமார் கபூர் மற்றும் மினி கபூர் ஆகியோர் ஏற்கனவே இருக்கும் பங்குகளை பங்குச் சந்தை மூலம் ஆஃபர் பார் சேல் முறையில் பங்குகளை  விற்பனை  செய்யும் பங்குதாரர்களாக (Shareholders) உள்ளனர். பி.ஐ ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்ட் I மற்றும் பிராசிம் டிரேடிங் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் ஆகியவை பங்குகளை விற்பனை பங்குதாரர்கள் ஆவர்.

இந்தியா 2020 ஃபண்ட் II, பஜாஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட், கோட்டக் இந்தியா அட்வான்டேஜ் ஃபண்ட்- I,  ஐ.எஃப்.ஐ.எஸ்  கார்ப்பரேட் அட்வைஸரி பிரைவேட் லிமிடெட்  மற்றும்  என்டிரஸ்ட் ஃபேமிலி ஆபிஸ் லீகல் மற்றும் டிரஸ்டீஷிப் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை பங்குகளை பங்குச் சந்தையில் விற்பனை செய்யும் இதர பங்குதாரர்கள் ஆவார்கள்.

ஃபேப்இ0ந்தியா நிறுவனம்  என்பது ஒரு நுகர்வோர் வாழ்க்கை முறை தளம் (Consumer Llifestyle Platform) ஆகும். இது 62 வருட பாரம்பரியம் கொண்ட உண்மையான, நிலையான மற்றும் இந்திய பாரம்பரிய வாழ்க்கை முறை பொருள்கள் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது.

இந்த நிறுவனத்தின் பிராண்டுகளானஃபேப் இந்தியாமற்றும்ஆர்கானிக் இந்தியாஆகியவை இந்தியாவில் நன்கு அங்கீகரிக்கப்பட்ட பிராண்டுகளாகும். இவை, முறையேஇந்தியாவைக் கொண்டாடுவதுமற்றும்ஆரோக்கியமான உணர்வுடன் வாழ்வது” (“Celebrating India” and “Healthy Conscious Living”) ஆகிய அடிப்படைக் கொள்கைகளில் கவனம் செலுத்துகிறது.

ஆடை மற்றும் அணிகலன்கள்,   குடும்பம் மற்றும் வாழ்க்கை முறை, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும்  இயற்கை உணவு வகைகளில் பல்வேறு வகையான வாழ்க்கை முறை  உற்பத்தி பொருள்களின் கலவையை நிறுவனம் வழங்குகிறது.

ஃபேப்இந்தியாவின் வணிக மாதிரி (Business model) என்பது வடிவமைப்பின் மூலம் நிலைத்தன்மையை மையமாகக் கொண்டுள்ளது மற்றும் அவர்கள் கைவினைஞர்களின் நெட்வொர்க்கை (ஒப்பந்த உற்பத்தியாளர்களுடன் ("ஒப்பந்த உற்பத்தியாளர்கள்" - “Contract Manufacturers”) ஏற்பாடு செய்வதன் மூலம் ஈடுபடுத்தும் மாதிரியின் மூலம் வேறுபட்ட விநியோக சமூகத்தை உருவாக்கி உள்ளது. இந்தியா முழுவதும் கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகளை ஒருங்கிணைந்து அதன் உற்பத்தி பொருள்களை தயாரித்து வருகிறது.

2021, செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, 309 ஃபேப்இந்தியா ஸ்டோர்கள் மற்றும் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள், 74 ஆர்கானிக் இந்தியா ஸ்டோர்கள் மற்றும் ஆர்கானிக் இந்தியாவிற்கான சில்லறை டச் பாயின்ட் நெட்வொர்க் (பொது வர்த்தகக் கடைகள், நவீன வர்த்தகக் கடைகள் மற்றும் வேதியியலாளர்கள் உட்பட) ஆகியவற்றின் மூலம் இந்தியா முழுக்க நெட்வொர்க் கொண்ட ஃபேப்இந்தியா நிறுவனம், ஒரு  சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. மற்றும் அதன் ஆன்லைன் தளங்களான www.fabindia.com, www.organicindia.com, மொபைல் பயன்பாடு (mobile application), 'ஃபேப் இந்தியா' மற்றும் மூன்றாம் தரப்பு சந்தைகள் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு  சேவை அளித்து வருகிறது.

ஃபேப் இந்தியா நிறுவனம், அதில் பணிபுரிபவர்களை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலைக் கவனித்துக் கொள்ளவும், அவர்களின் நடத்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும்  முயற்சி செய்கிறது. சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் நெறிமுறைகளைப் பயன்படுத்தி கைவினைஞர்கள், சமூகங்கள், ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சமூகத் தாக்கத்தை உருவாக்கி பொருளாதார நல்வாழ்வை வளர்ப்பதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது; இதற்காக (i) வாழ்வாதாரத்தை உருவாக்கி நிலைநிறுத்துவது (ii) கைவினைஞர்களின் திறனைக் கட்டியெழுப்புதல்; மற்றும் (iii) கைவினைக் கிளஸ்டர் மேம்பாடு மற்றும் வாழ்வாதார தாக்கத் திட்டங்களை கொண்டிருக்கிறது.  

இந்த நிறுவனம், தற்போது 50,000 கிராமப்புற கைவினைஞர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது மற்றும் நாட்டில் உள்ள பரந்த கைவினைஞர் தளத்தை  (இந்தியாவில் மொத்தம் 7 மில்லியனுக்கும் அதிகமான கைவினைஞர்கள்) பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

 ஃபேப்இந்தியா நிறுவனம்,  எரிசக்தி, மூலப் பொருட்கள், உமிழ்வுகள், நீர், கழிவுகள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றைக் குறைத்து அதன் தாக்கத்தை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகிறது.

பல்வேறு இயற்கை இழைகளைப் (Natural Fibers) பயன்படுத்தி அதன் பொருள்களை உருவாக்குதல், பொருட்களில் உள்ள ரசாயனங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், அதன் எரிசக்த்தி மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வை நிர்வகித்தல் மற்றும் கழிவு உற்பத்தியைக் குறைத்தல் உட்பட, அதன் செயல்பாடுகளில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கான வழிகளை இந்த நிறுவனம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

புதிய பங்கு வெளியீடு  மூலம் கிடைக்கும் நிகர தொகை மூலம் (i) நிறுவனத்தால்  வெளியிடப்பட்ட என்.சி.டிகளை (NCD) தன்னார்வமாக மீட்பதற்கும் அதற்கு கொடுக்க வேண்டிய வட்டிக்கும் ("NCD Redemption") பயன்படுத்தபடும்; (ii) நிறுவனத்தால் பெறப்பட்ட சில  கடன்கள் மற்றும் அதற்கான வட்டியின்  ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துதல் மற்றும் (iii) பொது நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும்.

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் லிமிடெட், கிரெடிடி சூஸே செக்யூரிட்டீஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், ஜே.பி. மார்கன் இந்தியா பிரைவேட் லிமிடெட், நோர்மா ஃபைனான்ஸியல் அட்வைஸரி அண்ட் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.பி.ஐ கேப்பிட்டல் மார்கெட்ஸ் லிமிடெட், ஈக்ரிஸ் (Equirus) கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இந்தப் பங்கு வெளியீட்டின் முன்னணி நிர்வாகிகளாக உள்ளன.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..! Food

*மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!* ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும்...