காசா கிராண்ட்: புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது..!

CASAGRAND காசா கிராண்ட்: புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது..!

 

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்று காசா கிராண்ட் (CASAGRAND) ஆகும்.

இந்த நிறுவனம்  வரும் 2022 –ம் ஆண்டுக்குள் புதிய பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ) களமிறங்கும் என அந்த நிறுவனத்தின் நிறுவனர்  எம்.என். அருண் (Mr. Arun Mn, Founder and Managing Director of CASAGRAND) சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

 

Mr. Arun Mn, Founder and Managing Director of CASAGRAND

இந்த நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டில் ரூ. 2,300 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டில் விற்பனை இலக்காக ரூ. 3,750 கோடி நிர்ணயித்துள்ளது.

 

காசா கிராண்ட், 2022-ம் ஆண்டுக்குள் ரூ.10,000 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகளை வாங்குகிறது.

 


குடியிருப்பு ரியல் எஸ்டேட்டில் ரூ.5,000 கோடி முதலீடு செய்கிறது. இதில் சென்னையில் மட்டும் ரூ. 3,000 கோடி முதலீடு செய்யப்படுகிறது.  பெங்களுருவில் ரூ. 1,250 கோடி முதலீடு செய்கிறது. அமெரிக்கா மற்றும் துபாயில் விற்பனை அலுவலங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.CASAGRAND plans to go public by the year 2022

Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.