மொத்தப் பக்கக்காட்சிகள்

பேங்க் ஆஃப் இந்தியா: 2021-22 முதல் காலாண்டு நிகர லாபம் ரூ..720 கோடி, Q4FY21 –ஐ விட 188% அதிகம்

பேங்க் ஆஃப் இந்தியா 

2021, ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகள்

 

முக்கிய அம்சங்கள் 2021-22 முதல் காலாண்டு 

*நிகர லாபம் ரூ..720 கோடி, Q4FY21 –ஐ விட 188% அதிகம்


 செயல்பாட்டு லாபம் ரூ. .2,806 கோடி, Q4FY21 –ஐ விட 34% அதிகம்


வட்டி சாரா வருமானம், முந்தைய ஆண்டின் ஜூன் காலாண்டை விட 39% அதிகம்


நிகர வட்டி வரம்பு முந்தைய காலாண்டை விட 0.15% உயர்வு. நிகர வட்டி வருமானம் 7%  உயர்வு


மொத்த வாராக் கடன் முந்தைய ஆண்டின் ஜூன் காலாண்டை விட 0.4%  குறைவு


       நிகர வாராக் கடன் முந்தைய ஆண்டின் ஜூன் காலாண்டை விட 0.23%  குறைவு

       வாராக் கடன் ஒதுக்கீட்டு விகிதம் 86.17% ஆக உள்ளது. கடந்த ஆண்டை விட 1.30% மேம்பட்டுள்ளது.

       மொத்த மூலதன தன்னிறைவு விகிதம்  15.07% ஆக உள்ளது. இது 2021 மார்ச் மற்றும் 2020 ஜூன் காலாண்டை விட அதிகமாகும்.  

      உற்பத்தி துறைக்கு அண்மையில் வழங்கப்பட்ட கடன், முந்தைய ஆண்டின் ஜூன் காலாண்டை விட 11.02% அதிகரித்துள்ளது. இது மொத்தக் கடனில் 51.36% பங்களிப்பை கொண்டுள்ளது.

      சில்லறை கடன், முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட 10.57% அதிகரித்துள்ளது.

     வேளாண் கடன் இதே காலக் கட்டத்தில் 11.08% உயர்ந்துள்ளது.

      எம்.எஸ்.எம்.இ ( MSME) கடன்,  முந்தைய ஆண்டின் ஜூன் காலாண்டை விட 11.45% அதிகரித்துள்ளது.

      காசா டெபாசிட்கள்,  முந்தைய ஆண்டின் ஜூன் காலாண்டை விட 13.80% அதிகரித்துள்ளது.

      கடன் செலவு 2021-22 ஜூன் காலாண்டில், 2020-21 ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது 2.41% குறைந்துள்ளது.  

       புதிய வாராக் கடன் உருவாக்கம், 2021-22 ஜூன் காலாண்டில், 2020-21 ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது 0.96% குறைந்துள்ளது.  

 

லாபத்தின் தன்மை:

 பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் (Net Profit)  2021-22 –ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஜுன் காலாண்டு) ரூ. 720  கோடியாக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 844  கோடியாக இருந்தது. முந்தைய காலாண்டின் நிகர லாபமான ரூ. 250 கோடியிலிருந்து 188% அதிகரித்துள்ளது.

 

*       செயல்பாட்டு லாபம் (Operating Profit) 2021-22 –ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 2,806 கோடியாக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 2,845  கோடியாக இருந்தது. முந்தைய காலாண்டின் நிகர லாபமான ரூ.2,094 கோடியிலிருந்து 34% அதிகரித்துள்ளது.

 

*       நிகர வட்டி வருமானம் (Net Interest Income -NII) 2021-22 –ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 3,145 கோடியாக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 3,481  கோடியாக இருந்தது. முந்தைய காலாண்டின் நிகர லாபமான ரூ. 2,936  கோடியிலிருந்து 7% அதிகரித்துள்ளது.

*       வட்டி சாரா வருமானம் (Non-Interest Income) 2021-22 –ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 39% அதிகரித்து ரூ. 2,377 கோடியாக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 1,707  கோடியாக இருந்தது. முந்தைய காலாண்டின் நிகர லாபமான ரூ. 2,053 கோடியிலிருந்து 16% அதிகரித்துள்ளது.

 

விகிதங்கள் (Ratios):

*       நிகர வட்டி வரம்பு (NIM - Global) 2021-22 –ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 2.16% ஆக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 2.48% ஆக இருந்தது. முந்தைய காலாண்டின் 2.16%-லிருந்து 0.15% அதிகரித்துள்ளது.

*       நிகர வட்டி வரம்பு (NIM - Domestic) 2021-22 –ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 2.35% ஆக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 2.73% ஆக இருந்தது. முந்தைய காலாண்டின் 2.16% -லிருந்து 0.19% அதிகரித்துள்ளது.

*       செலவுக்கும் வருமானத்துக்குமான விகிதம் (Cost to Income ratio - Global) 2021-22 –ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 49.18% ஆக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 45.18%  ஆக இருந்தது. முந்தைய காலாண்டின் 58.02% -லிருந்து 8.84% அதிகரித்துள்ளது.

*       கடன்கள் மூலமான வருமான வசூல் (Yield on Advances  - Global) 2021-22 –ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 6.67% ஆக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 7.55%  ஆக இருந்தது.

*       நிதித் திரட்டும் செலவு (Cost of Deposits -Global) 2021-22 –ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 3.79% ஆக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 4.32%  ஆக இருந்தது. முந்தைய காலாண்டின் 3.90% - லிருந்து 0.11% அதிகரித்துள்ளது.

 

வணிகம் (Business):

*        சர்வதேச வணிகம், முந்தைய ஆண்டின் ஜூன் காலாண்டை விட 2.71% அதிகரித்து ரூ. 10,38,083  கோடியாக உள்ளது.  

*       வழங்கப்பட்ட சர்வதேச கடன்கள் (Global Advances) ரூ. 4,14,697  கோடியாக உள்ளது. வழங்கப்பட்ட உள்நாட்டு கடன்கள் (Domestic Advances), முந்தைய நிதி ஆண்டின் ஜூன் காலாண்டை விட 1.65%  அதிகரித்து ரூ. 3,65,653 கோடியாக உள்ளது. திரட்டப்பட்ட சர்வதேச டெபாசிட்கள் (Global Deposits), முந்தைய நிதி ஆண்டின் ஜூன் காலாண்டை விட 4.73% அதிகரித்து ரூ.  6,23,385 கோடியாக உள்ளது. திரட்டப்பட்ட உள்நாட்டு டெபாசிட்கள் 6.71% அதிகரித்து ரூ. 5,52,303 கோடியாக உள்ளது.

*       உள்நாட்டு காசா (Domestic CASA), முந்தைய நிதி ஆண்டின் இதே ஜூன் காலாண்டை விட 13.80% அதிகரித்து ரூ. 2,35,980 கோடியாக உள்ளது. காசா 43.22% ஆக இருக்கிறது.

 

சொத்து தரம் (Asset Quality):

*       மொத்த வாராக் கடன் (GNPA) விகிதம் 2020 ஜூன் காலாண்டில் 13.91%  ஆக இருந்தது. இது 2021 ஜூன் காலாண்டில் 13.51%  ஆக மேம்பட்டுள்ளது.

*      நிகர வாராக் கடன் (Net NPA) விகிதம் 2020 ஜூன் காலாண்டில் 3.58%  ஆக இருந்தது. இது 2021 ஜூன் காலாண்டில் 3.35%  ஆக மேம்பட்டுள்ளது.

 வாராக் கடன் ஒதுக்கீட்டு விகிதம் (Provision Coverage Ratio -PCR)  2021 ஜூன் காலாண்டில் 86.17%   உள்ளது. இது 2021 மார்ச் காலாண்டில் 86.24% ஆக இருந்தது. 2020 ஜூனில் 84.87% ஆக இருந்தது.

 

மூலதன தன்னிறைவு (Capital Adequacy):

   வங்கியின் மொத்த மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy Ratio-CRAR) 30.06.2021 நிலவரப்படி  15.07%  ஆக உள்ளது. இது 2021 மார்ச் காலாண்டில் 14.93%  ஆக இருந்தது.

 

   CET-1 விகிதம், ஜூன் 2021-ல் 11.52%  ஆக உள்ளது. இது 2021 மார்ச்சில் 11.51%  ஆக இருந்தது.

 

முன்னுரிமை துறை & அனைவருக்கும் நிதிச் சேவை (Priority Sector & Financial Inclusion):

   முன்னுரிமை துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் (Priority Sector advances), முந்தைய நிதி ஆண்டின் ஜூன் காலாண்டு உடன் ஒப்பிடும் போது, 2021 ஜூன் காலாண்டில் 10.58%  அதிகரித்து ரூ. 1,39,020 கோடியாக உள்ளது.  சரிக்கட்டப்பட்ட நிகர வங்கிக் கடனில் (Adjusted Net Bank Credit – ANBC) இதன் பங்களிப்பு 39.65%  ஆக உள்ளது.

  ஏ.என்.பி.சி-ல்  சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள்  9.35% ஆக உள்ளது. இது நலிவுற்ற பிரிவினருக்கு வழங்கப்பட்ட கடனில் 12.10% ஆக உள்ளது. இவை சட்டப்படியான விகிதத்தை விட அதிகமாகும்.

    பிரதம மந்திரியின் தெரு வியாபாரிகளின் ஆத்மநிபார் நிதி (PMSVA Nidhi)  திட்டத்தின் கீழ் 97.82%  கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 96.91% கடன் அளிக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய நிலை நிலை விவரங்கள் 2021-22 முதல் காலாண்டு

 (ரூ. கோடி)

விவரங்கள்

Q1FY21

Q4FY21

Q1FY22

YoY %

QoQ %

வட்டி வருமானம்

10,234

9,327

9,321

-8.92

-0.06

வட்டி செலவுகள்

6,753

6,391

6,177

-8.54

-3.35

நிகர வட்டி வருமானம் (என்.ஐ.ஐ)

3,481

2,936

3,145

-9.67

7.11

வட்டி சாரா வருமானம்ம்

1,707

2,053

2,377

39.22

15.76

செயல்பாட்டு வருமானம் (என்.ஐ.ஐ + இதர வருமானம்ம்)

5,188

4,989

5,521

6.42

10.67

செயல்பாட்டு செலவுகள்

2,344

2,895

2,715

15.84

-6.20

செயல்பாட்டு லாபம்

2,845

2,094

2,806

-1.35

33.99

மொத்த ஒதுக்கீடுகள்

2,001

1,844

2,086

4.26

13.12

- வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடுகள்

767

3,089

873

13.91

-71.73

வரிக்கு முந்தைய லாபம்

1,332

263

1,097

-17.66

316.63

நிகர லாபம்

844

250

720

-14.65

187.77

என்.ஐ.எம் % (உள்நாடு)

2.73

2.16

2.35

 

விவரங்கள்

ஜூன்-20

மார்ச்-21

ஜூன் -21

YoY %

QoQ %

திரட்டப்பட்ட சர்வதேச டெபாசிட்கள்

5,95,235

6,27,114

6,23,385

4.73

-0.59

உள்நாட்டு காசா

2,07,370

2,24,669

2,35,980

13.80

5.03

திரட்டப்பட்ட உள்நாட்டு டெபாசிட்கள்

5,17,577

5,51,135

5,52,303

6.71

0.21

வழங்கப்பட்ட சர்வதேச கடன்கள்

4,15,440

4,10,436

4,14,697

-0.18

1.04

வழங்கப்பட்ட உள்நாட்டுகடன்கள்

3,59,715

3,62,361

3,65,653

1.65

0.91

மொத்த வாராக் கடன்

57,788

56,535

56,042

-3.02

-0.87

நிகர வாராக் கடன்

13,275

12,262

12,424

-6.41

1.32

 

விவரங்கள்  (விகிதங்கள் %)

ஜூன்-20

மார்ச்-21

ஜூன்-21

YoY bps

QoQ

bps

சொத்தின் தரம்

மொத்த வாராக் கடன்

13.91

13.77

13.51

-0.40

-0.26

நிகர வாராக் கடன்

3.58

3.35

3.35

-0.23

0.00

வாராக் கடன் ஒதுக்கீட்டு விகிதம் (PCR)

84.87

86.24

86.17

1.30

-0.07

                                மூலதன விகிதங்கள்

டயர் - 1 (Tier-1)

9.48

11.96

11.98

CET-1

9.46

11.51

11.52

CRAR

12.76

14.93

15.07

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...