மொத்தப் பக்கக்காட்சிகள்

பெல்ஸ்டார் மைக்ரோஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.769 மில்லியன்


பெல்ஸ்டார் மைக்ரோஃபைனான்ஸ் லிமிடெட் 
(Belstar Microfinance Limited -BML):
பி.எம்.எல், 1988 ஜனவரியில் பெங்களூரில் நிறுவப்பட்டது. மேலும் இந்த நிறுவனம் 2001  மார்ச் மாதத்தில் வங்கி சாரா நிதி நிறுவனமாக ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டது. 2013 டிசம்பர் 11 முதல் இந்த நிறுவனம், ஆர்.பி.ஐ- அமைப்பால்  “NBFC-MFI” என மறுவகைப்படுத்தப்படுத்தப்பட்டு உள்ளது பி..எம்.எல், நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் (equity share capital) 70.01%  முத்தூட் ஃபைனான்ஸ் வசம் உள்ளது. பி.எம். எல், 2008 செப்டம்பரில் ஹேண்ட் இன் ஹேண்ட் (Hand in Hand)  குழுமத்தை கையக்கப்படுத்தியது. இந்த நிறுவனம், அதன் முதல் கடனை கர்நாடாக மாநிலம், ஹேவிரி மாவட்டத்தில் 2009 மார்ச் மாதத்தில் 3 சுய உதவி குழுக்களை சேர்ந்த 22 உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ. 0.2 மில்லியன் கடன் வழங்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளாக, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, உருவாக்கிய குழுக்களுக்கு சுய உதவி குழுக்கள் மாதிரியில் (SHG model) கடன் உதவி அளித்து வருகிறது. 2015 ஜனவரி முதல் கூட்டு பொறுப்பு குழுக்கள் (JLG - Joint Liability Groups)  மாதிரியில் கடன் உதவி அளித்து வருகிறது. பி.எம்.எல், இதனை மஹாராஷ்ட்ரா மாநிலம் புனே மாவட்டத்தில் தொடங்கியது.

2019 டிசம்பர் 31, நிலவரப்படி, பி.எம்.எல்-ன் செயல்பாடுகள் 16 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் (தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தரகண்ட், ஜார்க்கண்ட் மற்றும் புதுச்சேரி).
இது 573 கிளைகள், 101 பிராந்திய அலுவலகங்கள், 4,269 பணியாளர்களை கொண்டுள்ளது. அதன் மொத்த வழங்கப்பட்ட கடன் 2009 மார்ச் மாதத்தில் ரூ. 0.20 மில்லியனிலிருந்து 2019  டிசம்பரில் ரூ. 22,849 மில்லியனாக வளர்ந்துள்ளது. 2019-20 ஆம் நிதி ஆண்டின் ஒன்பது மாதங்களில்  வரிக்குப் பிந்தைய நிகர லாபம் ரூ.769 மில்லியன் மற்றும் நிகர மதிப்பு ரூ .4,748 மில்லியன் ஆக உள்ளது.

முக்கிய நிதி நிலை அம்சங்கள்
(ரூ. மில்லியன்கள்)
விவரங்கள்
9M FY20

கிளைகள் எண்ணிக்கை  
573

பணியாளர்கள் எண்ணிக்கை
4269
மொத்தம் வழங்கப்பட்ட கடன்
22849
மூலதன தன்னிறைவு விகிதம்
27%
மொத்த வருமானம்
3681

மொத்த செலவு
2654

வரிக்கு முந்தைய லாபம்
1027

வரிக்கு பிந்தைய லாபம்
769

பங்குதாரர்களின் நிதி
4748

மொத்த கடன் நிலுவைகள்
20022

மொத்த சொத்துகள்
24770
மூன்றாம் நிலை கடன் சொத்துகள்
258

மொத்த கடன் சொத்தில் மூன்றாம் நிலை சொத்துகள்%
1.13

மூன்றாம் நிலை எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு
230

எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு
347

மொத்த கடன் சொத்தில் எதிர்பார்ப்பு கடன் இழப்புக்கான ஒதுக்கீடு%
1.52

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

ராகேஷ் ஜுன் ஜூன் வாலா சொத்து மதிப்பு ரூ 35 ஆயிரம் கோடி

ராகேஷ் ஜுன் ஜூன் வாலா சொத்து மதிப்பு ரூ 35,500  கோடி Passes away today at the age of 62.