மொத்தப் பக்கக்காட்சிகள்

போலி ஷாப்பிங் இணைய தளங்கள் உஷார்..!

போலி ஷாப்பிங் இணைய தளங்கள் உஷார்..!

"http" மற்றும் "https" என்னும் வார்த்தைகள் வெப் சைட்டின் ஆரம்பத்தில் பார்க்கிறோம் அல்லவா?

இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன?

 பாதுகாப்பிற்காக அறியவேண்டிய முக்கிய தருணம்

இதை  அறிய  32 லட்சம் டெபிட் கார்டுகLai பறிகொடுத்துள்ளோம்

இருந்தபோதும் வித்தியாசம் என்னவென்று சிலர் அறிந்திருப்பீர்கள்.

அறியதவர்களுக்கு இந்தப் பதிவு.

நம் டெபிட் கார்டின் பாதுகாப்பு பற்றிய அறிகுறி தான் "http" மற்றும் "https" இவற்றின் வித்தியாசம்.


"http" என்பது "Hyper Text Transfer  Protocol" என்பதைக் குறிக்கும்.

"s" என்பது இணைந்தால்,  "Secure" என்பதைக் குறிக்கும். இணையதளத்தில் நாம் பார்த்தால் முதல் வார்த்தை "http://" என்றுதான் வரும்

இதன் பொருள் தங்கள் இணையதளம் பாதுகாப்பற்ற இணைய முகவரியில் தங்களை இணைத்துள்ளது என்பதே.. இது தங்கள் கணினியின் மொழிகளை

தாங்கள் உள்நுழைந்த இந்த இணையமுகவரி மூலம் ஒட்டுக்கேட்கவும் வகை செய்யும். இப்படிப்பட்ட இணையமுகவரியில் தாங்கள் நுழைந்து பூத்தி செய்யும் தனிப்பட்ட விண்ணப்பங்களை பிறர் தாராளமாக பார்க்க முடியும்.
      
 எனவே தங்கள் கிரெடிட் கார்டு எண்களையோ பாஸ்வேர்டுகளையோ,

இந்த "http//" இணைய முகவரியில்  தயவு செய்து பதிவிடாதீர்கள்.!

அதே சமயம் தங்கள் இணைய முகவரி "https://" என ஆரம்பித்தால், தங்கள் கணினி பாதுகாக்கப்பட்ட இணையமுகவரியில் உங்களை நுழைத்துள்ளது என அறியுங்கள்

இதிலிருந்து நமது தகவல்களை ஒட்டுக்கேட்கவோ சேகரிக்கவோ முடியாது.

இந்த S என்ற ஒற்றை எழுத்து சேர்வதன் பாதுகாப்பும், நம்பகத் தன்மையும் S இல்லாத இணையமுகவரி இரண்டுக்கும் உள்ள வித்தியாசமும் தற்போது தாங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்!

இனி எந்த இணைய முகவரிக்காவது உங்கள் கிரெடிட் கார்டு எண் பதிவிட வேண்டும் என்றால், முதலில் இந்த வித்தியசத்தை கவனித்துவிட்டு, பிறகு பதிவிடுங்கள்.

எந்த இணைய முகவரியைத் தேடும் போதும், முதலில் இணைய களம் எதில் முடிகிறது எனப் பார்க்கவும்.  (Eg: ".com"  or ".org", ".co.in", ".net"  etc).* இவற்றின் முன் உள்ள பெயர் மட்டுமே இணைய களப்பெயர்.
      
.Eg: "http://amazon.diwali -festivals.com" என எடுத்துக் கொள்வோம்.


இதில் ".com" என்பதற்கு முன்னால் உள்ள "diwali-festivals" ("amazon" என்பது அல்ல) என்பதுதான் அந்த இணையகளத்தின் முகவரி. எனவே இது "amazon.com" இணையதளத்தைச் சேர்ந்தது அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது "diwali-festivals.com" எனும், நாம் இதுவரை அறியாத ஓர் இணைய களத்தைச் சேர்ந்தது.

இதே வழியில் வங்கித் திருட்டுக்களையும் தாங்கள் கண்டறிய முடியும்

தங்கள் வங்கியுடனான -சேவையைத் தொடங்கும் முன்னர், மேலே கூறியது போல், ".com" எனும் வார்த்தயை ஒட்டி, அதன் முன்னால், உங்கள் குறிப்பிட்ட வங்கியின் பெயர் உள்ளதா எனமுதலில் கவனியுங்கள். Eg: "icicibank.com" என்பது icici வங்கியைச் சார்ந்தது

ஆனால் , "icicibank.'வேறு ஏதோ வார்த்தை'.com" என வந்தால், அது iciciவங்கியுடையது அல்ல
அந்த‌ _"வேறு ஏதோ வார்த்தையுடையது.

 _இது பார்க்க சாதாரண விஷயமாகத் தோன்றும்

ஆனால் இந்தத் தவறால் பணம் இழந்தவர்கள் பலர்

- யாரோ 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! AI

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் காகிதமில்லாத (paperless) மற்றும் 100% ரொக்கமில்லா (Cashles...