மொத்தப் பக்கக்காட்சிகள்

ஏ.டி.எம் புதிய விதிமுறைகள்!


ATM New Rules  ஏ.டி.எம் புதிய விதிமுறைகள்!  

வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பதைக் காட்டிலும் நாம் அதிகமுறை ஏ.டி.எம்களில்தான் பணம் எடுக்கிறோம்.

இந்த நிலையில் ஒவ்வொரு வங்கிகளும் ஏ.டி.எம்களில் ஒரு மாதத்திற்கு இத்தனை முறைதான் பணம் எடுக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் வைத்துள்ளன.

அதேசமயம் பணம் அல்லாது பிற பரிவர்த்தனைகளுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன.  பலர் ஏ.டி.எம்களை பயன்படுத்தும்போது அவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் சிரமத்தை ஏற்படுத்துகின்றன.

சிலசமயம் பணம் எடுக்கும்போது .டி.எம்.இல் பணம் வந்திருக்காது. ஆனால், வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்பட்டிருக்கும். இந்தப் பணம் மீண்டும் கணக்கில் சேர்க்க சில தினங்கள் ஆகும். இவை உரிய தினத்தில் வரவு வைக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது.


இதையடுத்து ரிசர்வ் வங்கி சென்ற வாரம், 'வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைப்பதில் சில வங்கிகள் காலதாமதம் செய்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் உரிய கணக்குகளில் வரவு வைக்கப்படாதபட்சத்தில் வங்கிகள் அந்த நபருக்கு அபராதம் செலுத்த வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:

இந்தப் புதிய விதிமுறைகளின்படி .டிஎ.ம்.இல் பணம் வராமல், கணக்கில் இருந்து கழிக்கப்பட்ட பணம் மீண்டும் ஐந்து  தினங்களில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இல்லையெனில் பணம் திரும்பி கணக்கில் வைக்கப்படும் வரை நாள் ஒன்றிற்கு 100 ரூபாய் அந்தப் பயனருக்கு வங்கி செலுத்த வேண்டும். பணம் எடுக்கப்பட்ட தினத்தில் இருந்து  ஐந்து நாட்கள் மட்டுமே அவகாசம்.

சென்ற மாதம் ஆர்.பி.ஐயின் அறிவிப்புப்படி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்படும் பரிவர்த்தனைகளை இலவச பரிவர்த்தனைகள் கணக்கில் சேர்க்கக்கூடாது. ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவே இலவச பரிவர்த்தனைகளை வழங்குகின்றன.

இதனால், ரத்து செய்யப்பட்ட பரிவர்த்தனைகளை இந்தக் கணக்கில் சேர்க்காமல், வாடிக்கையாளருக்கு அந்த இலவச பரிவர்த்தனையை வழங்க வேண்டும் என ஆர்.பி.ஐ வலியுறுத்தியுள்ளது.

அதேபோல் .டி.எம்.இல் பணம் இல்லாதபோதோ, தவறான பின் கொடுக்கப்பட்டோ, ரத்து செய்யப்படும் பரிவர்த்தனைகளையும் இலவச பரிவர்த்தனைகள் கணக்கில் சேர்க்கக் கூடாது.

உதாரணமாக எஸ்.பி. வங்கி ஒரு மாதத்திற்கு 5 முதல் 8 இலவச ஏ.டி.எம் பரிவர்த்தனைகளை வழங்குகிறது. இதற்கு முன்புவரை நாம் பணம் இருக்கிறதாக என ஏ.டி.எம்மில் பரிசோதிப்பது, பணம் எடுப்பது, பின் மாற்றுவது என அனைத்துமே இந்த இலவச பரிவர்த்தனைக் கணக்கில் கழிக்கப்பட்டுவந்தது

புதிய விதிமுறைகளின்படி இனி பணப்பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடுகள். பணம் அல்லாத பிற பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை, என அறிவிக்கப்பட்டுள்ளது.



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...