மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்தியன் வங்கி, எஸ்.பி.ஐ லைஃப் உடன் ஒப்பந்தம்; வங்கி மூலம் காப்பீடு பாலிசிகள் விநியோகம்

இந்தியன் வங்கி, எஸ்.பி. லைஃப் உடன்  ஒப்பந்தம்; வங்கி மூலம் காப்பீடு பாலிசிகள் விநியோகம்


சென்னை, ஆகஸ்ட் 05, 2019: 

இந்தியாவின் பழைமையான மற்றும் நம்பகமான பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி (Indian Bank), இன்று முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவவனமான எஸ்.பி. லைஃப் இன்சூரன்ஸ்  (SBI Life Insurance) நிறுவனத்துடன் வங்கிக் காப்பீட்டு ஒப்பந்தம் (bancassurance pact) மூலம் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் அது வங்கி வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நிதித் திட்டமிடல் தீர்வுகளை (holistic financial planning solutions) வழங்குகிறது. .

          இந்த ஒப்பந்தம், இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி  திருமதி. பத்மஜா சுண்டுரு (Smt. Padmaja Chunduru, MD & CEO, Indian Bank)  & எஸ்.பி. லைஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு சஞ்சீவ் நவ்டியால் (Shri Sanjeev Nautiyal, MD & CEO, SBI Life) ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

          எஸ்.பி.. லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தனிநபர் மற்றும் குழுக் காப்பீட்டு தீர்வுகளை, (individual and group insurance solutions) காப்பீடு, சேமிப்பு, ஆரோக்கியம், கடன் வாழ்க்கை (protection, savings, health, credit life), ஆகியவை இந்தக் கூட்டு மூலம் பரந்து விரிந்து இந்தியா முழுக்க 2851  கிளைகளை கொண்டுள்ள இந்தியன் வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கும். ஆயுள் காப்பீடு பாலிசிகளை இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் பெற, சென்னையை தலைமை இடமாக கொண்ட இந்தியன் வங்கியின் பணியாளர்களுக்கு எஸ்.பி.. லைஃப் நிறுவனம், காப்பீடு திட்டங்கள் விற்பனை சார்ந்த பயிற்சிகள் மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளை வழங்கும்.

          இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி. லைஃப், வாடிக்கையாளரின் பல்வேறு வாழ்க்கை நிலை தேவைகளுக்கு ஏற்ப ஆயுள் காப்பீட்டு திட்டங்களை அளிக்கும். இந்தியன் வங்கியின் பரந்து விரிந்த கிளைகள் மற்றும் எஸ்.பி. லைஃப் நிறுவனத்தின் விரிவான திட்டங்கள் மூலம், இந்தக் கூட்டு நுகர்வோருக்கு ஆயுள் காப்பீட்டை எளிதாக அணுகுவதை உறுதி செய்யும்.

            இந்த நிகழ்வின் போது, இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி  திருமதி. பத்மஜா சுண்டுரு (Ms.Padmaja Chunduru, MD & CEO, Indian Bank) கூறும் போது,‘’ இந்தக் கூட்டு மூலம், எங்கள் வங்கியின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு, புகழ்பெற்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின்  பல்வேறு பயனுள்ள திட்டங்கள் கிடைப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி
 
Ms. Padmaja Chunduru, MD & CEO, India Bank and Mr. Sanjeev Nautiyal, MD & CEO, SBI Life Insurance signing the Bancassurance pact along with other dignitaries.
          இந்த முன்முயற்சி குறித்து, எஸ்.பி. லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு சஞ்சீவ் நவ்டியால் (Mr. Sanjeev Nautiyal, MD & CEO, SBI Life Insurance) கருத்து கூறும் போது, பேங்காசூரன்ஸ் (Bancassurance), ஒரு வலுவான  சேனலாக, எங்களுக்கு இருந்து வருகிறது. மேலும் நம்பகமான நிறுவனங்களுடனான கூட்டு மூலம் அதிக வாய்ப்புகளை நாங்கள் தொடர்ந்து ஆராய்கிறோம். நீண்ட காலமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதில் ஒரு சிறந்த வரலாற்றைப் பெற்றுள்ள இந்தியன் வங்கியுடன் கூட்டாளராக இருப்பதில் நாங்கள் மிக மகிழ்ச்சியடைகிறோம்,  இந்த ஒப்பந்தம், எஸ்.பி. லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிலையை மேம்படுத்துவதோடு,இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நிதித் திட்டமிடல் தீர்வை வழங்கவும் உதவும். நாடு முழுவதும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு கிடைக்க இந்தக் கூட்டு மேலும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்என்றார்.

          இந்தியன் வங்கி மற்றும் எஸ்.பி. லைஃப் இன்சூரன்ஸ்  பற்றி மேலும் தெரிந்துகொள்ள பார்வையிடவும்:

·         www.indianbank.in
·         www.sbilife.co.in

·         For press queries, please contact:
·         Santosh Setty: santosh.setty@sbilife.co.in

·         Minakshi Mishra: minakshi.mishra@sbilife.co.in 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...