மொத்தப் பக்கக்காட்சிகள்

முறைப்படுத்தப்படாத டெபாசிட்டுகள் தடைச் சட்டம் 2019 முக்கிய அம்சங்கள்


Banning of Unregulated Deposit Schemes Ordinance, 2019 


முறைப்படுத்தப்படாத டெபாசிட்டுகள் தடைச் சட்டம் 2019 
முக்கிய அம்சங்கள்

·         டெபாசிட்டுகள் என்றால், கடன் அல்லது வேறு எந்த வடிவத்திலோ குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பணமாகவோ அல்லது சொத்துகளாகவோ வேறு பொருளாகவோ திருப்பித் தரப்படும் என்ற வாக்குறுதியுடன் 
முன்கூட்டியே பெறப்படும் பணம்என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
·       
  இந்த வரையறையால், எந்த வடிவத்தில் திட்டத்தை அறிவித்தாலும் அந்தத் திட்டம் இந்தச் சட்டத்தின்கீழ் வந்துவிடும். எனவே, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளிவிட்டு டெபாசிட்டுகளைப் பெறும் அனைவரும், இந்தச் சட்டத்தின்கீழ் வந்துவிடுவார்கள்.

·          தங்க நகைச் சேமிப்புத் திட்டங்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் டெபாசிட்டுகளை, நகைக்கான முன்பணம் டெபாசிட் கணக்கில் வரும்.

·         இந்தச் சட்டத்தின்படி, மோசடிப் புகார் உறுதியானதும், 180 நாள்களுக்குள் மோசடி நிறுவனத்தின் சொத்துகளைப் பறிமுதல் செய்து, அதை விற்று வரும் தொகையை வாடிக்கையாளர் களுக்குத் திருப்பி அளிக்க வேண்டும்.

·         முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்படாத நிதி நிறுவனங்களின் முழுத் தகவல்களும் திரட்டுவதற்கு என  தனி  ஓர் அமைப்பு ஏற்படுத்தப்படும்.

·         அந்த அமைப்பால் திரட்டப்பட்ட தகவல்களை ஆய்வுசெய்து, அவற்றில் சந்தேகத்துக்குரிய நிறுவனங்களின் தகவல்கள் மேல்நிலையில் இருக்கும் சிறப்பு அதிகார அமைப்புக்குத் தெரியப்படுத்தப்படும். அதன் சிறப்பு அதிகாரி, மாநிலச் செயலாளர் அந்தஸ்தில் உள்ளவராக இருப்பார்.

·         புகார்களில் குறிப்பிட்டுள்ளபடி மோசடி நடந்திருந்தால், இந்த வழக்குகளை விசாரிப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை நடக்கும். இதன் அடிப்படையில்  தீர்ப்பு வழங்கப்படும்.

·         புதிய சட்டத்தின் படி, , ஆர்.பி.., செபி உள்ளிட்ட ஒன்பது கண்காணிப்பு அமைப்புகளுக்கு பொதுவாக ஒரு ஆன்லைன் போர்ட்டல் கொண்டுவரப்படும். எந்த நிதி நிறுவனம் தொடங்கப்பட்டாலும், இந்த போர்ட்டலில் பதிவுசெய்ய வேண்டியது கட்டாயம்.


·          அப்படிப் பதிவுசெய்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டால் அதுகுறித்த தகவல், அனைத்து கண்காணிப்பு அமைப்புகளுக்கும் செல்லும். இதன் மூலம், மோசடி  குற்றச் சாட்டுக்குள்ளானவர், மீண்டும் அதேபோன்ற மோசடியில் ஈடுபடுவது தடுக்கப்படும்.

·         இந்தச் சட்டத்தின்படி, முறைப்படுத்தப் படாத நிதி நிறுவனங்கள் இயங்குவதும், டெபாசிட்டுகள் பெறுவதும் தடை செய்யப்படும்.
·         அத்தகைய நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு 2 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ. 3 முதல் ரூ. 10  லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

·         முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்கள், டெபாசிட்டு களுக்கு வட்டியைத் திருப்பியளிப்பதில் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

·          மேலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட டெபாசிட்டுகளைப் போல் இரு மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும்.

·          மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபடுபவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்.

·         எந்த ஒரு தனிநபரும், தெரிந்தே மோசடியில் ஈடுபடுவது, வாடிக்கையாளர்களை ஏமாற்றி ஏதாவது நிதி மோசடித் திட்டத்தில் உறுப்பினராகச் சேர்ப்பது போன்ற தவறுகளைச் செய்தால், அவர்களும் இந்தச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவர்.
·       
  மோசடி நிதி நிறுவனங்களின் விளம்பரங்களை பத்திரிகைகள் வெளியிட்டால், அதே பத்திரிகை, அதே அளவு விளம்பரத்தின் மூலம், `அது மோசடி நிறுவனம்என்ற செய்தியை விளம்பரமாக வெளியிட வேண்டும்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...