மொத்தப் பக்கக்காட்சிகள்

யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் ரூ. 9,495 கோடி 12 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள்..!


யூ.டி. ஈக்விட்டி ஃபண்ட்–  நிலையான தொடர்ச்சியான வளர்ச்சிக்கு தரமான வணிகங்களில் முதலீடுகள்..!

நிறைவேற்றக் கூடிய நியாயமான நிதி இலக்குகளை (realistic financial goals உருவாக்குவது, வெற்றிகரமான முதலீட்டுக்கான முதல் டி.  உங்கள்  முதலீட்டு இலக்குகளை அடைவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு முதலீட்டு வாய்ப்புகளை நன்கு புரிந்துகொள்வதும் மிகமுக்கியம். உங்களின் முதலீட்டு  இலக்குகள் நீண்ட காலம்  அல்லது  குறுகிய காலம்  என எதுவாக இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட்கள்  சரியாக பொருந்த கூடும் அதேநேரத்தில், ஒருவரின் நிதி இலக்குக்கான திட்டம், வெற்றி பெறுவது என்பது அவர் தேர்ந்தெடுத்த மியூச்சுவல் ஃபண்ட் வகைகளை பொறுத்திருக்கும்

யூ.டி. ஈக்விட்டி ஃபண்ட் (UTI Equity Fund)  என்பது எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் எப்ப்போது வேண்டுமானாலும் யூனிட்களை விற்று பணமாக்கும் வசதி கொண்ட ஓப்பன் எண்டெட் பங்குச் சந்தை சார்ந்த திட்டம் (open ended equity scheme) ஆகும். இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி, லார்ஜ் கேப். மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஃபண்டின்  மூலம் ரூ. 9,495 கோடி நிர்வகிக்கப்படுகிறது. 2019 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி இந்த ஃபண்டின் மீது நம்பிக்கை வைத்து 12  லட்சத்துக்கும் மேற்பட்டவர்ககள் முதலீடு செய்திருக்கிறார்கள். எந்த ஒரு நீண்ட கால முதலீட்டாளரும் அவரின் பிரதான பங்கு சார்ந்த முதலீட்டு கலவைக்கு (core equity allocation), யூ.டி. மியூச்சுவல் ஃபண்ட்  அளிக்கும் இந்த பங்கு சார்ந்த ஃபண்டை கவனிக்கலாம்.


யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் சிறப்பாக செயல்பட. அதன் முதலீட்டு தத்துவம் (investment philosophy), என்பது தரம்,  வளர்ச்சி மற்றும் மதிப்பீடு (Quality, Growth & Valuation) ஆகிய மூன்று தூண்களை சுற்றி அமைக்கப்பட்டிருப்பதாகும்.இந்த ஃபண்ட்க்காக நிறுவனப் பங்குகளை தேர்வு செய்யும் முதலீட்டுக் கலவையின் உத்தி (portfolio strategy) என்பது  உயர்தரமான வணிகங்களை கொண்ட நிறுவனங்களாகவும் அவை நீண்ட காலத்தில் நன்றாக வளர்ச்சி அடையக் கூடியதாகவும் நல்ல நிர்வாகத் திறனை கொண்டதாகவும் இருக்கின்றன.

 தரம்” என்பது, நீண்ட காலத்தில் நிறுவனத்தின் பயன்படுத்தப்பட்ட மூலதனம் மூலமான வருமானம் (Return on Capital Employed - RoCE) அல்லது  பங்கு மூலதனம் மீதான வருமானம் (Return on Equity (RoE)அதிகமாக இருக்கும் திறனை குறிக்கிறது. உண்மையாக அதிக தரம்  கொண்ட வணிகங்கள் / தொழில், அதிக ஆர்.ஓ.சி.இ-க்கள் மற்றும் அதிக ஆர்.ஓ.இ-க்களை  கொண்டிருக்கும். தொழில் அல்லது துறையின் கஷ்டமான காலக் கட்டத்தில் கூட அதாவது அனைத்து நேரத்திலும் அதன் மூலதன செலவுக்கு (cost of capital) மேலாக சிறப்பாக செயல்படும். இதனையும் தாண்டி, அதிக ஆர்.ஓ.சி.இ / ஆர்.ஓ.இ இருக்கும் தொழில்கள் வலிமையான பண வரவுகளை (cash flows) கொண்டிருப்பதோடு, பொருளாதார மதிப்பு (economic value) உருவாக ஆதாரமாக இருக்கும்.

 வளர்ச்சி”  நீண்ட காலத்தில் அந்தத் தொழில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைவதை குறிக்கும். இந்த ஃபண்டில் நிலையான மற்றும் கணிக்க கூடிய வளர்ச்சி கொண்ட தொழில் துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள் முதலீட்டுக்கு தேர்வு செய்யப்படுகின்றன. சுழற்சி முறையிலான வளர்ச்சி மற்றும் வளர்ச்சியைக் கணிக்க முடியாத தொழில்களை கொண்ட நிறுவனப் பங்குகள் முதலீட்டுக்கு தவிர்க்கப்படுகின்றன. சுழற்சி முறையிலான வளர்ச்சி மற்றும் வளர்ச்சியைக் கணிக்க முடியாத தொழில்களை கொண்ட நிறுவனப் பங்குகளின்  முதலீட்டு மூலமான வருமானம் என்பது எந்தத் திசையிலும் செல்லக்கூடும். உயர்தரமான தொழில்கள் பொருளாதார மதிப்பை உருவாக்கும் நிலையில், அதிக வளர்ச்சி தொழில்கள் கூட்டு பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும். இதுதான் இந்த ஃபண்ட், தரம் மற்றும் வளர்ச்சி அடிப்படையிலான நிறுவனப் பங்குகளை சரியாக  தேர்வு செய்வதற்கான முக்கியக் காரணமாகும்.

இந்த யூ.டி. ஈக்விட்டி ஃபண்டின் முதலீட்டு தத்துவத்தின் கடைசி தூண் – ‘’மதிப்பீடுகள்’’. மதிப்பீடுகள், மிகவும் முக்கியம். அது மிகப் பெரிய வணிகத்தில் ஒரு முக்கியமான நுழைவு புள்ளியாக இருக்கிறது. அந்த வகையில், ஒரு நிறுவனப் பங்கை முதலீட்டுக்கு தேர்வு செய்யும் முன் மிகவும் கவனமாக ஆராய்வது அவசியம். மேலும், ஒரு வணிகத்தின் மதிப்பீட்டை புரிந்துகொள்வதற்கு பி/இ (Price to Earnings - P/E)) விகிதம் ஒரு சிறந்த ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. ஆனால், இது பரவலாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அடிக்கடி, நீண்ட காலத்தில், அதிக ஆர்.ஓ.சி.இ மற்றும் அதிக வளர்ச்சி வணிகத்தை விட அதிக பி/இ விகிதம் கொண்ட பங்குகள் முதலீட்டுக்கு கவர்ச்சிகரமாக இருக்கும். அடுத்த சில மாதங்கள் அல்லது காலாண்டுகளில் சிறப்பாக செயல்படும் என்பதை விட வணிகத்தின் அடிப்படையை பார்த்து முதலீடு செய்வது அதிக லாபமாக இருக்கும். எனவே, பி/இ அடிப்படையில் முதலீட்டு முடிவை எடுப்பதற்கு முன் ஒவ்வொரு வணிகத்தின் தன்மைகளை கவனமாக ஆராய்வது அவசியம். அதன் பிறகு அவற்றின் நியாயமான மதிப்பை பெற வேண்டும்.

 இந்த ஃபண்ட் மூலம் திரட்டப்பட்ட நிதி, ‘’வளர்ச்சி’’ என்கிற முதலீட்டு பாணியில் அனைத்து பிரிவு மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் கொண்ட நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள பத்து முக்கியப் பங்குகளாக பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் லிமிடெட், ஹெச்.டி.எஃப்.சி லிமிடெட், கோட்டக் மஹிந்திரா பேங்க் லிமிடெட், இண்டஸ் இண்ட் பேங்க் லிமிடெட், டாடா கன்சல்டென்சி சர்வீஸ் லிமிடெட், எல்&டி இன்ஃபோடெக், இன்போ-எட்ஜ் (இந்தியா), இன்ஃபோசிஸ் லிமிடெட் மற்றும் ஸ்ரீ சிமின்ட் லிமிடெட் ஆகியவை உள்ளன. 2019 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி இந்த ஃபண்டின் முதலீட்டுக் கலவையில் இந்தப் பத்து பங்குகளின் பங்களிப்பு கிட்டத்தட்ட 44% ஆக உள்ளது.

யூ.டி. ஈக்விட்டி ஃபண்ட், பிரதான பங்குச் சந்தை முதலீட்டு கலவையை உருவாக்க விரும்பும் பங்கு சார்ந்த முதலீட்டாளர்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும். மேலும், தரமான வணிகங்களில் முதலீடு செய்வது மூலம் நீண்ட காலத்தில் பொருளாதார மதிப்பு உருவாக்கத்தை எதிர்பார்ப்பதாக இருக்கிறது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...