மொத்தப் பக்கக்காட்சிகள்

மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் புதிய பங்கு வெளியீடு

மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட்:
புதிய பங்கு வெளியீடு
ஏப்ரல் 03, 2019-ல் ஆரம்பம்,  
ஏப்ரல் 05, 2019-ல் நிறைவு
விலைப்பட்டை:  ரூ.. 877  முதல் ரூ. 880
இந்தியாவின் முன்னணி நோய்கண்டறியும் (diagnostics) நிறுவனங்களில் ஒன்றாக மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட்(Metropolis Healthcare Limited (“நிறுவனம்”) உள்ளது. 2018 மார்ச் 31 நிலவரப்படி வருவாயின் அடிப்படையில் இந்த நிறுவனம் முன்னணி நிறுவனமாக (Source: Frost & Sullivan) உள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு  (Initial Public Offering - IPO)  ஏப்ரல் 03, 2019*-ல் ஆரம்பிக்கிறது.  

நிகர பங்கு வெளியீடு
இந்த ஐ.பி.ஓ மூலம் ரூ. 2 முகமதிப்பு (face value) கொண்ட மொத்தம் 1,36,85,095 சம பங்குகள் (Equity Shares) வெளியிடப்படுகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் (Promoter) டாக்டர். சுஷில் கனுபாய் ஷா வசம் இருக்கும் 62,72,335பங்குகளும், முதலீட்டு நிறுவனமான (Investor) சி.. லோட்டஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் வசம் இருக்கும்  74,12,760 பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன

மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் நிறுவனப் பணியாளர்களுக்காக 3,00,000 பங்குகள் ஒதுக்கப்படுகிறது (Employee Reservation Portion). இதனை கணக்கில் எடுத்துக் கொண்டால் நிகர பங்கு வெளியீடு (Net Offer) 1,33,85,095 ஆக உள்ளது.
குறைந்தபட்சம் 17 பங்குகள்

இந்தப் பங்கு வெளியீடு ஏப்ரல்05, 2019 –ல் நிறைவு பெறுகிறது. பங்கின்  வெளியீட்டுவிலைப்பட்டை (Price Band), பங்கு ஒன்றுக்கு ரூ.877-880-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 17 பங்குகள் மற்றும் 17-ன் மடங்குகளில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பங்குகள் பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படுகிறது.
இந்தப் பங்கு வெளியீட்டை ஜே.எம். ஃபைனான்சியல், கிரெடிட் சூசி செக்யூரிட்டீஸ் (இந்தியா), கோல்டுமேன் சாக்ஸ் (இந்தியா), ஹெச்.டி.எப்.சி பேங்க் லிமிடெட் மற்றும் கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல் ஆகிய புக் ரன்னிங் லீட் மேனேஜர்கள்  நிர்வகிக்கிறார்கள்.  
இந்த பங்கு விற்பனையின் நோக்கம், பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதின் லாபங்களை அடைவதாக இருக்கிறது.

1957 ஆம் ஆண்டின், பத்திரங்கள் ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிமுறைகள்  (Securities Contracts (Regulation)  Rules) படி செபி அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தப் பங்கு வெளியீடு நடக்கிறது. மேலும் ஏலமுறையில் (Book Building Process) பங்கு விற்பனை நடக்கிறது.

மொத்தப் பங்கு விற்பனையில் குறைந்தபட்சம் 75%, தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு (Qualified Institutional Buyers -QIBs)  ஒதுக்க வேண்டும். இதில், 60 சதவிகிதம் விருப்பத்தின் அடிப்படையில் பெரிய முதலீட்டாளர்களுக்கு (Anchor Investors) ஒதுக்கப்படலாம். இதில் மூன்றில் ஒரு பங்கு, பங்குகள் ஆங்கர் முதலீட்டாளர்கள் ஏலம் கேட்டுள்ள விலை அல்லது அதை  விட அதிகமாக இருக்கும்பட்சத்தில்  அவை உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.

பங்குகள் கேட்டு குறைவாக விண்ணப்பிக்கப்பட்டிருந்தால் அல்லது ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு பங்குகளுக்கு ஒதுக்கப்படவில்லை என்றால் மீதமுள்ள பங்குகள் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். மேலும், கியூ.ஐ.பி ஒதுக்கீட்டில் (ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு தவிர்த்து) 5% பங்குகள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கப்படும். மீதமுள்ள கியூ.ஐ.பி ஒதுக்கீட்டில் உள்ள பங்குகள் விகிதாச்சார அடிப்படையில் கியூ.ஐ.பி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.

சிறு முதலீட்டாளர்

குறைந்தபட்சம் 75% பங்குகள் கியூ.ஐ.பி நிறுவனங்களுக்கு ஒதுக்க முடியாவிட்டால், உடனடியாக முழு விண்ணப்பப் பணமும் திருப்பி அளிக்கப்படும். மொத்தப் பங்கு வெளியீட்டில் 15 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கும் (Non-Institutional Investors), 10 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் சிறு முதலீட்டாளர்களுக்கும் (Retail Individual Investors) பங்குகள் ஒதுக்கப்படும். வெளியீட்டு விலை அல்லது அதற்கு அதிகமான விலையில் கேட்கப்பட்டால் இப்படி பங்குகள் ஒதுக்கப்படும்.

அஸ்பா

அனைத்து முதலீட்டாளர்களும் (ஆங்கர் முதலீட்டாளர்கள் தவிர) அனைவரும் அஸ்பா (ASBA - Applications Supported by Blocked Amount) முறையில் பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். அதேநேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை வங்கி கணக்கில் முடக்கி (Blocked) வைக்கப்பட்டிருக்கும். ஆங்கர் முதலீட்டாளர்கள் இந்த அஸ்பா முறையில் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.

செபி அமைப்பின் விதிமுறைகளின் (SEBI ICDR Regulations), பங்கு வெளியீட்டை மேற்கொள்ளும் புக் ரன்னிங் லீட் மேனேஜர்களுடன் கலந்து ஆலோசித்து ஆங்கர் முதலீட்டாளர்கள் பங்கு வெளியீட்டில் பங்கேற்பது முடிவு செய்யப்படும். ஆங்கர் முதலீட்டாளர்கள், ஒரு பணி நாளுக்கு முன்பாக அதாவது 2019 ஏப்ரல 2 ஆம் தேதி பங்குகள் வேண்டி விண்ணப்பிக்கலாம்.

All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the RHP. 

Disclaimer:
METROPOLIS HEALTHCARE LIMITED is proposing, subject to, applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public offer of its Equity Shares and has registered the Red Herring Prospectus with the RoC. The Red Herring Prospectus shall be available on the websites of SEBI, BSE, NSE at www.sebi.gov.in, www.bseindia.com and www.nseindia.com, respectively, and is available on the websites of the Book Running Lead Managers (“BRLMs”), i.e. JM Financial Limited, Credit Suisse Securities (India) Private Limited, Goldman Sachs (India) Securities Private Limited, HDFC Bank Limited and Kotak Mahindra Capital Company Limited at www.jmfl.com, www.credit-suisse.com, www.goldmansachs.com, www.hdfcbank.com and www.investmentbank.kotak.com, respectively. Potential investors should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to the same, see “Risk Factors” beginning on page 20 of the Red Herring Prospectus. Potential investors should not rely on the Draft Red Herring Prospectus for any investment decision.

These materials are not for publication or distribution, directly or indirectly, in or into the United States (including its territories and possessions, any state of the United States and the District of Columbia). These materials are not an offer of securities for sale into the United States, Canada or Japan. The Equity Shares offered in the Offer have not been and will not be registered under the U.S. Securities Act of 1933, as amended (“U.S. Securities Act”) or any state securities laws in the United States, and unless so registered may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the U.S. Securities Act and applicable state securities laws. Accordingly, such Equity Shares are being offered and sold (i) outside of the United States in offshore transactions in reliance on Regulation S under the U.S. Securities Act and the applicable laws of the jurisdiction where those offers and sales occur; and (ii) to “qualified institutional buyers” (as defined in Rule 144A (“Rule 144A”)) under the U.S. Securities Act), pursuant to the private placement exemption set out in Section 4(a) of the U.S. Securities Act. No public offering of securities is being made in the United States



METROPOLIS HEALTHCARE LIMITED
Registered and Corporate Office: 250 D Udyog Bhavan, Hind Cycle Marg, Worli, Mumbai 400 030, Maharashtra, India; Tel: (91 22) 6258 2810
Website: www.metropolisindia.com Corporate Identity Number: U73100MH2000PLC192798

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...