மொத்தப் பக்கக்காட்சிகள்

2019 இந்திய ரியல் எஸ்டேட் குடியிருப்பு சந்தைகளுக்கான எதிர்பார்ப்பு


சில்லறை சந்தை எதிர்பார்ப்பு : நுகர்வோர் வளர்ச்சி மேம்பாடு (RETAIL MARKET OUTLOOK: CONSUMER GROWTH DRIVEN)

இந்திய சில்லறை துறை கடந்த சில ஆண்டுகளாக வேகமான 
வளர்ச்சியில் இருக்கிறது.  நகரமயமாக்கல் அதிகரிப்பு, வணிக 
சின்னம் பொறித்த தயாரிப்புகளுக்கு (பிராண்டுகள்) 

முன்னுரிமை  அளிப்பது, தொழில்நுட்ப மேம்பாடு, சமூக 
வலைதளங்கள்  போன்றவை இந்தத் துறையின் வளர்ச்சியின் 
பின்னணியில் இருக்கின்றன. 
கடந்த 2018 ஆம் ஆண்டில் சுமார் 51 லட்சம் 
சதுர அடி புதிய சில்லரை கட்டட பரப்புகள் நாட்டின் 
மிகப்பெரிய ஏழு நகரங்களில் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. 
இந்த அளிப்பில் தென்னிந்திய நகரங்கள் முன்னணியில் 
உள்ளன. முதலிடத்தில் ஹைதராபாத் உள்ளது. இதனைத் 
தொடர்ந்து சென்னை மற்றும் பெங்களூர் நகரங்கள் உள்ளன. 
சிறிய சில்லறை கட்டட பரப்பு மேம்பாடுகள், டெல்லி-  
என்.சி.ஆர் மற்றும் கொல்கத்தாவில் கடந்த 2018 ஆம் ஆண்டில் 
செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்திய நுகர்வோர்களிடையே கடந்த சில ஆண்டுகளாக 
நுகர்வு பிரிவில் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. ஃபேஷன் 
மற்றும் ஆடை கடைகளுக்கான தேவை மிகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக உயர் மதிப்பு ஃபேஷன் (value fashion) கடைகள், நடுத்தர ஃபேஷன் (mid-range fashion) கடைகள் 
போன்றவை சில்லறை விற்பனையை அதிகரிப்பதில் முக்கிய 
பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவகங்கள் 
மற்றும் குளிர்பான கடைகள், மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள், 
பொழுதுபோக்கு மையங்கள் போன்றவை சில்லறை விற்பனைத் 
துறை வளர்ச்சியின் பின்னணியில் உள்ளன.
2019 சில்லறை துறை வளர்ச்சி எதிர்பார்ப்பு (Retail Outlook for 2019):
        நடப்பு 2019 ஆம் ஆண்டில் இந்தத் துறையில் சுமார் 1-1.2 கோடி சதுர அடி (10 – 12 million sq. ft) கட்டட பரப்பு அளிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அளிப்பை விட தேவை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான அந்நிய நேரடி முதலீடு  விதிமுறைகளில் (FDI norms) மாற்றம், குறுகிய காலத்தில் இணையதளம் மூலமான விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
        இ - காமர்ஸ் பிரிவில் நிலையற்ற தன்மை காணப்பட்டாலும் சில்லறை வர்த்தக்கதில் பல்வேறு வழிகளில் விற்பனை வளர்ச்சிக்கு (omni-channel retailing ) வாய்ப்பு இருக்கிறது.
        பல்வேறு பிரிவுகளில் தேவை (Diversification in demand) அதிகரிப்பு உள்நாட்டு மற்றும் சர்வதேச பிராண்டுகள் மூலம் பல்வேறு புதிய பிரிவுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  
         
நுகர்வோர்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை நிலக்கிழார்களும் சில்லறைக் கடை வைத்திருப்பவர்களும் தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்து நுகர்வோரின் அனுபவத்தை சிறப்பாக மாற்ற (Experiential retail and place making) தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார்கள்.

மூலதனச் சந்தைகள் & நில விற்பனை எதிர்பார்ப்பு: 
நிலையானதிலிருந்து உறுதி (CAPITAL MARKETS &  LAND 
OUTLOOK: STABILITY TO ENSUE)
கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்திய வர்த்தக ரியல் எஸ்டேட் 
முதலீடு, சுமார் 470 கோடி டாலராக (USD 4.7 billion) இருக்கிறது
சில பெரிய அளவிலான முதலீடுகள் வந்ததே இதற்கு காரணம். 
இந்த முதலீடுகள், அலுவலகம் மற்றும் சில்லறை பிரிவுகளில் 
மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் உள்நாட்டு 
முதலீட்டாளர்கள் நிலங்களில் அதிக மேம்பாட்டை 
உருவாக்கியிருக்கிறார்கள். நீண்ட காலத்தில் தனிப்பட்ட பங்கு 
முதலீடு (private equity) மற்றும் நிறுவனங்களின் முதலீடு 
குறிப்பாக அலுவலகம் மற்றும் சில்லறை பிரிவில் தொடர்ந்து 
மேற்கொள்ளப்படும் என்பதால் இந்தத் துறை நிலையான 
வளர்ச்சியை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலதன சந்தைகள் மற்றும் நிலம் எதிர்பார்ப்பு 2019 (The Capital Markets and Land outlook for 2019):
        வங்கி சாரா நிதி சேவை (NBFC) துறை, மத்திய அரசின் கொள்கைகள் போன்றவை இந்தத் துறையில் ஒரு தேக்கநிலையை (consolidation) உருவாக்கி இருக்கிறது.
         தனிப்பட்ட பங்கு முதலீடுகள் (PE investments),  அலுவலகம், கிட்டங்கி, சில்லறை பிரிவு, குடியிருப்பு துறை போன்றவற்றில்  கட்டி முடிக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தரமான சொத்துகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது
         விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், கடன்களின் தரம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கக்கூடும்.

குடியிருப்பு சந்தை எதிர்பார்ப்பு : தொடர்ந்து மீட்சிப் பாதையில் (RESIDENTIAL MARKET OUTLOOK: PATH TO RECOVERY CONTINUES)
கடந்த 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு பணமதிப்பு நீக்கம், ரியல் 
எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், சரக்கு மற்றும் சேவை வரி 
போன்றவற்றால் குடியிருப்பு துறையின் வளர்ச்சி மீட்சிப் 
பாதைக்கு திரும்பியிருக்கிறது. அதாவது புதிய திட்டங்கள் 15% 
வளர்ச்சிகண்டிருக்கிறது, விற்பனை 13% உயர்ந்திருக்கிறது.
ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் தங்களுக்கிடையே கொள்கை 
அளவில் கடந்த சில ஆண்டுகளில் மாற்றங்களை 
மேற்கொண்டிருக்கிறார்கள். இது தேவையின் 
குணாதிசயங்களை மாற்றியிருக்கிறது. அந்த வகையில் 2019 
ஆண்டிலும்  குடியிருப்புகளுக்கான  அளிப்பு அதிகரிக்கும் என 
நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஊகம் அடிப்படையிலான முதலீட்டு செயல்பாடுகள் 
குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்திருப்பதால், நடப்பாண்டில் 
குடியிருப்பு சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையும். 
குறிப்பாக, நடுத்தர பட்ஜெட் திட்டங்கள் அதனைத் தொடர்ந்து 
குறைந்த விலை வீடுகளுக்கு (affordable )  தேவை அதிகரிக்கும். 
மத்திய அரசின் சலுகைகள் மற்றும் பயன்பாட்டாளர்களிடையே 
தேவை உயர்வு இதற்கு காரணமாக இருக்கின்றன. பெங்களூர், 
மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை நகரங்களில் இந்த 
இரு பிரிவுகளிலும் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் 
என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா மற்றும் புனே புதிய 
குடியிருப்புகள் அறிமுகம் நிலையானதாக இருக்கும் என்று 
எதிர்பார்க்கப்படுகிறது.

2019 குடியிருப்பு சந்தைகளுக்கான எதிர்பார்ப்பு (The Residential Market Outlook for 2019):
        நடப்பு 2019 ஆம் ஆண்டில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் குடியிருப்பு அளிப்பு மற்றும் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கட்டி முடிக்கப்பட்டு விற்காமல் இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
        திருமணம் ஆகாமல் இணைந்து வாழ்வது, மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான வீடுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை நிறைவேற்றும் விதமாக ரியல் எஸ்டேட் டெவலப்பர்களும்  புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

        குறைந்த விலை வீடுகள் (Affordable housing) தேவை மற்றும் அளிப்பு அதிகரிக்கும். காரணம், மத்திய அரசின் பல்வேறு சீர்திருத்தங்கள்.

        குறைந்த விலை வீடுகள் ரியல் எஸ்டேட் அவர்கள் புதிய சந்தை உத்திகள் மூலம் படிப்படியாக கட்டுமான செலவுகளை குறைத்து வருகிறார்கள். இதற்கு அவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த கட்டுமான உத்திகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

சி.பி.ஆர்.இ குழுமம் பற்றி (About CBRE Group, Inc.)
சி.பி.ஆர்.இ குழுமம் [CBRE Group, Inc. NYSE:CBG), என்பது ஃபார்ச்சூன் 500 மற்றும்  எஸ்& பி 500 பட்டியலில் இடம் பெற்றிருக்கும் நிறுவனம். இதன் தலைமை அலுவலகம் லாஸ் ஏஞ்செல்ஸ்-ல் உள்ளது. இது உலக அளவில் மிகப் பெரிய வர்த்தக ரியல் எஸ்டேட் சேவைகள் மற்றும் முதலீட்டு (2016 ஆம் ஆண்டின் வருவாய் அடிப்படையில்) நிறுவனமாகும். இந்த நிறுவனத்துக்கு 75,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கிறார்கள். உலகம் முழுக்க சுமார் 450 அலுவலகங்கள் இருக்கின்றன. 
சி.பி.ஆர்.இ, ரியல் எஸ்டேட் துறையின் ஒருங்கிணைந்த சேவைகளை அளித்து வருகிறது.  வசதிகள், பரிமாற்றம், திட்ட மேலாண்மை, முதலீட்டு மேலாண்மை, சொத்து மதிப்பீடு, சொத்து குத்தகை, ஆலோசனை உத்திகள், சொத்து விற்பனை, அடமான சேவைகள் மற்றும் சொத்து அபிவிருத்தி சேவைகளை அளித்து வருகிறது.

கூடுதல் விவரங்களுக்கு பார்வையிடவும்  www.cbre.com.
Follow us:
On Twitter: @cbre_India
And on LinkedIn: company/cbre-asia-pacific

Bidisha Suri                                                                                     Ms. Vandana M
CBRE South Asia Pvt. Ltd                                                                       Adfactors PR
Phone: +91 9999576965                                                                        Phone: + 91 9999479947                                     

Email: Bidisha.Suri@cbre.com                                                                Email: vandana.m@

ஆதாரம்: சி.பி.ஆர்.இ சவுத் ஆசியா பிரைவேட் லிமிடெட் (CBRE South Asia Pvt. Ltd)  

ரியல் எஸ்டேட் மார்க்கெட் அவுட்லுக் 2019 – இந்தியா 

(Real Estate Market Outlook 2019 - India)
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...