மொத்தப் பக்கக்காட்சிகள்

அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆப்ஷன்களுடன் ஆதித்ய பிர்லா சன் லைஃப் ரிட்டயர்மென்ட் ஃபண்ட்



ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஆதித்ய பிர்லா சன் லைஃப்  ரிட்டயர்மென்ட் ஃபண்ட்  அறிமுகம்

ஓய்வு கால தீர்வு சார்ந்த ஓப்பன் எண்டெட் திட்டம், முதலீட்டு பூட்டுக் காலம் 5 ஆண்டுகள் அல்லது பணி ஓய்வு வரை (எது முந்துகிறதோ அது)

முக்கிய அம்சங்கள்


·    ஃபண்ட் வெளியீடு பிப்ரவரி 19, 2019 அன்று ஆரம்பிக்கிறதுமார்ச் 5, 2019 அன்று  நிறைவடைகிறது

·  பல்வேறு வயது  பிரிவினருக்கு நான்கு முதலீட்டு திட்டங்களுடன் வந்துள்ளது.

·         முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இடைவெளிகளில் எஸ்.ஐ.பி. தவணையை அதிகரிக்கும் வசதி

·        முதலீட்டு பூட்டுக் காலத்தை பொறுத்து குறிப்பிட்ட இடைவெளியில் முதலீட்டாளர்கள் வருமானத்தை பெறும் வசதி,  எஸ்.ஐ.பி., எஸ்.டி.பி வசதிகள் இருக்கினறன.

 ·      இந்த ஃபண்டில் வெளியேறும் கட்டணம் இல்லை.

மும்பை, பிப்ரவரி 19, 2019:

ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் லிமிடெட் (Aditya Birla Capital Limited) – ன் துணை நிறுவனம் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் (Aditya Birla Sun Life Mutual Fund - ABSLMF) முதலீட்டு நிறுவனமான  ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி  லிமிடெட் (Aditya Birla Sun Life AMC Limited)ஆதித்ய பிர்லா சன் லைஃப் ரிட்டயர்மென்ட் ஃபண்ட் (Aditya Birla Sun Life Retirement Fund) -ஐ அறிமுகம் செய்துள்ளது.

இது எப்போது வேண்டுமானலும் முதலீடு செய்யும், எப்போது வேண்டுமானலும் முதலீட்டை வெளியே எடுக்கும் வசதி கொண்ட ஓப்பன் எண்டெட் (open ended ) ஃபண்ட். இது முதலீட்டாளர்களுக்கு ஓய்வு கால தீர்வை அளிக்கும் திட்டம் (retirement solution oriented scheme) ஆகும். இந்த ஃபண்டின் குறைந்தபட்ச முதலீட்டு பூட்டுக் காலம் (lock-in period) ஐந்து ஆண்டுகள்  அல்லது பணி ஓய்வு வரை, எது முந்துகிறதோ அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த ஃபண்ட் பல்வேறு வயதை சேர்ந்த தனிநபர்களுக்கு அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப ஓய்வு கால முதலீட்டுக்கு சிறப்பாக திட்டமிட நான்கு வித  திட்டங்களை (asset allocation plans) கொண்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு அவர்களின் ஒய்வு காலத்தை சுலபமாக திட்டமிட பல்வேறு நிலைகளில் நிதித் திட்டமிடல் (financial planning) மூலம் தீர்வு அளிக்கிறது..
ஏ.பாலசுப்பிரமணியன் 

இந்தப் புதிய திட்ட அறிமுகம் குறித்து ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி லிமிடெட்-ன் தலைமை செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன் (A. Balasubramanian, CEO, Aditya Birla Sun Life AMC Limited) கூறும் போது, ‘’ஆதித்ய பிர்லா சன் லைஃப் ரிட்டயர்மென்ட் ஃபண்ட், முதலீட்டாளர்களுக்கு அதிகரிக்கும் வாழ்க்கை செலவுகளுக்கு ஈடு கொடுக்கும் விதமாக அவர்களின் 30 வயதிலிருந்தே திட்டமிட முதலீட்டுத் தீர்வை அளிக்கிறது.  எதிர்கால செலவுகளை சமாளிக்க, சிறப்பான ஓய்வூதிய திட்டம் மிகவும் முக்கியம். மேலும், இது போன்ற முதலீட்டு திட்டம், ஓய்வு காலத்தை சிறப்பாக செலவிட உதவும்.

இந்த ஃபண்ட், நான்கு முதலீட்டு விருப்பங்களாக (investment options), பல்வேறு வயதினருக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது

30களில் இருப்பவர்களுக்கான திட்டத்தில் (The 30s plan), அவர்களின் முதலீட்டு தொகை  80-100%   பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த நிதி ஆவணங்களில் முதலீடு செய்யப்படும். மீதி  கடன் சந்தை மற்றும் பணச் சந்தை ஆவணங்களில் முதலீடு செய்யப்படும்.

40களில் இருப்பவர்களுக்கான திட்டத்தில் (The 40s plan), அவர்களின் முதலீட்டு தொகை   65-80%   பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த நிதி ஆவணங்களில் முதலீடு செய்யப்படும்.

50களில் இருப்பவர்களுக்கான திட்டத்தில் (The 50s plan), அவர்களின் முதலீட்டு தொகை   75-100%.  கடன் சந்தை சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப்படும்.

இது தவிர பணி ஒய்வு காலத்தை நெருங்குபவர்களுக்கு 50ஸ் பிளஸ் டெஃப் பிளான் (50s Plus Debt Plan)  இருக்கிறது. இதில் 100%  தொகையும், கடன் சந்தை மற்றும் பணச் சந்தை ஆவணங்களில் முதலீடு செய்யப்படும்

இந்த ஃபண்ட், அஜெய் கார்க் மற்றும் பிரனாய் சின்ஹா (Ajay Garg and Pranay Sinha) ஆகிய ஃபண்ட் மேனேஜர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் வெளியேறும் கட்டணம் (exit load) கிடையாது. 

முதலீட்டு திட்டம்
இந்தத் திட்டம் எந்த வகை முதலீட்டாளர்களுக்கு ஏற்றது*

ஆதித்ய பிர்லா சன் லைஃப் ரிட்டயர்மென்ட் ஃபண்ட் -
‘The 30s Plan’
நீண்ட கால மூலதன வளர்ச்சி
பங்குகள், பங்கு சார்ந்த ஆவணங்களில் முதலீடு
ஆதித்ய பிர்லா சன் லைஃப் ரிட்டயர்மென்ட் ஃபண்ட் -
‘The 40s Plan’
நீண்ட கால மூலதன வளர்ச்சி மற்றும் வருமானம்
பங்குகள், பங்கு சார்ந்த ஆவணங்கள் மற்றும் கடன், நிதி சந்தை ஆவணங்களில் முதலீடு  

ஆதித்ய பிர்லா சன் லைஃப் ரிட்டயர்மென்ட் ஃபண்ட் -
‘The 50s Plan’
நடுத்தரம் முதல் நீண்ட காலத்துக்கு மூலதன வளர்ச்சியோடு வருமானம்
கடன், நிதி சந்தை ஆவணங்கள் மற்றும் பங்குகள், பங்கு சார்ந்த ஆவணங்களில் முதலீடு
ஆதித்ய பிர்லா சன் லைஃப் ரிட்டயர்மென்ட் ஃபண்ட் -
‘The 50s Plus - Debt Plan’
மூலதன அதிகரிப்பு & நீண்ட காலத்தில் ஓய்வு கால இலக்குகளை அடைதல்  
கடன், நிதி சந்தை ஆவணங்கள் மற்றும் பங்குகள், பங்குச் சந்தை ஆவணங்களில் முதலீடு
*தங்களுக்கு ஏற்றத் திட்டம் எது என்பதில் குழப்பம் இருந்தால், முதலீட்டாளர்கள் நிதி ஆலோசகரை கலந்து பேசவும்.



மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, பங்குச் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது, முதலீடு செய்யும் முன், திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்
 (Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.)


ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி!


கடந்த 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட  ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்  (Aditya Birla Sun Life Mutual Fund -ABSLMF), ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனம் (Aditya Birla Capital Limited -- ABCL)) மற்றும் சன் லைஃப் இந்தியா ஏ.எம்.சி. இன்வெஸ்ட்மென்ட்ஸ் இன்கார்ப்பரேஷன் (Sun Life (India) AMC Investments Inc) இணைந்து உருவாக்கப்பட்டதாகும். .

ஏ.பி.எஸ்.எல் எம்.எஃப் நிறுவனம் 2018 செப்டம்பர் 30 ஆம் தேதி உடன் முடிந்த காலாண்டில் உள்நாட்டில் மொத்தம் ரூ. 25,0,000 கோடி (Rs. 2500 billion) –க்கு மேல் சொத்தை நிர்வகித்து வருகிறது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான  ஆம்ஃபி (Association of Mutual Funds of India -AMFI) வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி நிர்வகிக்கும் சொத்தின் அடிப்படையில் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றாக இது உள்ளது.
பங்குச் சந்தை, கடன் சந்தை, கலவை (equity, debt, balanced) திட்டங்களுடன் சிற்ப்பு சொத்து வகை திட்டங்களையும் கொண்டுள்ளது. 2018 செப்டம்பர் 30 நிலவரப்படி சுமார் 66 லட்சம் (6.6 million) முதலீட்டு கணக்குகளை (investor folios) கொண்டுள்ளது.

இந்தியா முழுக்க 249 இடங்களில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கத்தோடு ஏ.பி.எஸ்.எல் எம்.எஃப் செயல்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு முதலீட்டாளர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு இந்தியா முழுக்க முடிவில்லாமல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை மேம்படுத்துவதற்காக பணிபுரிந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறப்பான தீர்வுகள், சேவைகள் மற்றும் வசதிகளை முதலீட்டாளர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு டிஜிட்டல் முறையில் அளித்து வருகிறது.

ஏ.பி.எஸ்.எல் எம்.எஃப் துறை சார்ந்த ஈக்விட்டி திட்டங்கள், ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டங்கள், மாத வருவாய் திட்டங்கள், கடன் சார்ந்த திட்டங்கள், கரூவூல திட்டங்கள் மற்றும் ஆஃப்சோர் திட்டங்களை முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகிறது..


நிறுவனம் குறித்த தகவல் : ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி லிமிடெட் (Aditya Birla Sun Life AMC Limited  - முந்தைய பெயர் ஆதித்ய பிர்லா சன் லைஃப் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி), ஒன் இந்தியா புல்ஸ் சென்டர், டவர் 1, 17வது தளம், ஜூபிடர் மில் காம்பவுண்ட், , 841, எஸ்.பி. மார்க்,  மார்க், எல்பின்ஸ்டோன் சாலை, மும்பை - 400 013. Tel.: 4356 8000. இணைய தளம்: www.adityabirlacapital.com. CIN: U65991MH1994PLC080811

ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் லிமிடெட் (Aditya Birla Capital Limited -ABCL), ஆதித்ய பிர்லா குழுமத்தின் அனைத்து நிதிச் சேவை வணிகங்களின் முதலீட்டு நிறுவனமாக உள்ளது. 

ஆயுள் காப்பீடு, சொத்து மேலாண்மை, தனிப்பட்ட பங்கு முதலீடு, நிறுவனங்களுக்கு கடன், சிறப்பு நிதி திட்டங்கள், திட்டங்களை நிறைவேற்ற கடன் உதவி, பொதுக் காப்பீடு தரகு,, பங்குச் சந்தை, கரன்ஸி மற்றும் கமாடிட்டி தரகு, இணையதளம் மூலம் தனிநபர் நிதி மேலாண்மை, வீட்டு வசதிக் கடன், ஓய்வூதிய நிதி மேலாண்மை, ஆரோக்கிய காப்பீடு வணிகம் ஆகியவற்றில் நிதிச் சேவைகளை நிறுவன வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் / சிறு வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. ஏ.பி.சி.எல்-க்கு 16,500 க்கு மேற்பட்ட பணியாளர்கள் நாடுமுழுக்க இருக்கிறார்கள். மேலும் 2 லட்சம் முகவர்கள் / சேனல் பார்ட்னர்கள் இருக்கிறார்கள்.  

ஆதித்ய பிர்லா கேப்பிட்டல், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்கள் மூலம் 2018 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரபப்டி ரூ. 3,10,500 கோடி (Rs. 3,105 billion) மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருவதோடு ரூ.57,900 கோடி  (Rs. 579 billion) கடன்களை வழங்கி இருக்கிறது.

சன் லைஃப் ஃபைனான்ஸியல் பற்றி..

சன் லைஃப் ஃபைனான்ஸியல் (Sun Life Financial), முன்னணி நிதிச் சேவை அமைப்பாகும். இது காப்பீடு, சொத்து மேலாண்மை தீர்வுகளை தனிநபர்கள் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. 
சன் லைஃப் ஃபைனான்ஸியல், உலகம் முழுக்க பல்வேறு நாட்டு சந்தைகளில் குறிப்பாக கனடா, ஐக்கிய அமெரிக்க நாடுகள். இங்கிலாந்து, அயர்லாந்து, ஹாங் காங், பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோனேசியா, இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் வியட்நாம், மலேசியா, மற்றும் பர்முடா போன்ற நாடுகளில் இயங்கி வருகிறது. 
2018 செப்டம்பர் 30 நிலவரப்படி, சன் லைஃப் ஃபைனான்ஷியல் மொத்தம் $984 பில்லியன் நிர்வகித்து வருகிறது. .
கூடுதல் தகவல்களுக்கு பார்வையிடவும்  www.sunlife.com.

சன் லைஃப் ஃபைனான்ஷியல் இன்கார்ப்பரேஷன் –ன் பங்குகள் எஸ். எல் எஃப் (SLF) என்கிற குறியீட்டில் டொராண்டோ (Toronto-TSX), நியார்க் (New York-NYSE)  மற்றும் பிலிப்பைன் (Philippine -PSE) பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகி வருகிறது


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...