மொத்தப் பக்கக்காட்சிகள்

ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஸ்மால் பிசினஸ் ஃபின்கிரெடிட் இந்தியா : எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ. 1 கோடி கடன் உதவி



ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் மற்றும் ஸ்மால் பிசினஸ் ஃபின்கிரெடிட் இந்தியா, இணைந்து எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு கடன் உதவி

·         ரூ. 1 கோடி வரைக்கும் சொத்துக்கு எதிராக எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு கடன்
·          வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனம் இணைந்து கடன் வழங்குவது முதல் முறை.

சென்னை: இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான, ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் (ICICI Bank), முன்னணி  வங்கிசாரா நிதி நிறுவனமான (Non-Banking Finance Company) ஸ்மால் பிசினஸ் ஃபின்கிரெடிட் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Small Business FinCredit India Pvt. Ltd -SBFC) உடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி ஐசிஐசிஐ பேங்க்  மற்றும் எஸ்.பி.எஃப்.சி இணைந்து எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு (MSMEs) கடன் அளிக்கின்றன. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் (ஆர்.பி.ஐ) செப்டம்பர் 21, 2018 தேதியிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் இந்தக் கூட்டு உருவாகி உள்ளது. இதன்படி வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்களுடன் இணைந்து முன்னுரிமை துறை சொத்துகள் மீது கடன் வழங்க ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி , எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் 15 ஆண்டுகளில் திருப்பக் கட்டும் விதமாக ரூ. 1 கோடி வரைக்கும் கடன் பெற முடியும். நாட்டில் ஒரு வங்கி மற்றும் ஒரு வங்கிசாரா நிதி நிறுவனம் இணைந்து கடன் உதவி வழங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த உடன்படிக்கையின்படி, ஐசிஐசிஐ பேங்க், எஸ்.பி.எஃப்.சி உடன் போட்டிருக்கும் பரஸ்பர விகிதாச்சாரத்தின் அடிப்படையில் சொத்து அடமானத்துக்கு எதிராக கடன் வழங்கும். ஐசிஐசிஐ பேங்க்  மூலம் கிடைக்கும் நிதி வாடிக்கையாளர்கள் அவர்களின் வணிகத்தை தடை ஏதுவும் இல்லாமல் நடத்த உதவிகரமாக இருக்கும்.  


இந்தக் கூட்டு குறித்து, ஐசிஐசிஐ பேங்க்-ன் தலைவர் (பாதுகாப்பான சொத்துகள்) திரு. ரவி நாராயணன் (Mr. Ravi Narayanan, Head - Secured Assets, ICICI Bank) கூறும் போது,  எங்களின் ஐசிஐசிஐ பேங்க், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தப் பின்னணியில் எஸ்.பி.எஃப்.சி உடன் இணைந்து தொய்வில்லாமல் முன்னுரிமை துறை கடன்களை எம்.எஸ்.எம்.இ-களுக்கு அளித்து, அதன் நிதி நிலையை வலிமைபடுத்துவதோடு வணிக வளர்ச்சிக்கும் உதவி செய்கிறோம். எம்.எஸ்.எம்.இ-களுக்கு தடை இல்லாமல் கடன் வழங்க, ஒரு வங்கி மற்றும் ஒரு வங்கிசாரா நிதி நிறுவனம் இணைந்து கடன் உதவி வழங்குவது இதுவே நாட்டின் முதல் முறையாகும். இந்த முன்முயற்சி மூலம், நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று ஆர்வமாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிப்பது எங்களின் நோக்கமாக இருக்கிறது

இந்தக் கூட்டு குறித்து எஸ்.பி.எஃப்.சிபிரைவேட் லிமிடெட் –ன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. அசீம் துஹ்ரு(Mr. Aseem Dhru, MD & CEO, SBFC Pvt Ltd) கூறும் போது,  எஸ்.பி.எஃப்.சி  ஆகிய நாங்கள், ஐசிஐசிஐ பேங்க் போ ன்ற பெரிய நிதி அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறோம். ஆர்.பி.ஐ-ன் செப்டம்பர்  சுற்றறிக்கையின் அடிப்படையில் உருவாகும் முதல் வங்கிசாரா நிதி நிறுவனம் மற்றும் வங்கி கூட்டு இதுவாகும். இந்த ஒப்பந்தம் மூலம் நாடு முழுக்க உள்ள சிறிய நகரங்களில் இயங்கும் வணிக நிறுவங்களுக்கு ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் உடன் இணைந்து பணிபுரிய முடியும். இதன் மூலம் ஐ.சி.ஐ.சி.ஐ-ன் ஐந்தொகை (balance sheet) வலிமை மற்றும் கடன் வழங்கும் சிறப்பான அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், நுண் நிறுவனங்களுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சரியான வட்டியில் கடன் கொடுப்பது மூலம் அவர்கள் இதர அதிக வட்டியிலான கடன்களை வாங்குவதை தவிர்த்து தங்கள் நிறுவனங்களின் / வணிகத்தின் பண வரத்தை மேம்படுத்த முடியும்

புதிய தகவல்களுக்கு பார்வையிடவும்.  www.icicibank.com மற்றும் ட்வீட்டரில் பின் தொடரவும் www.twitter.com/ICICIBank.

பத்திரிக்கை தகவல்களுக்கு எழுதவும் : corporate.communications@icicibank.com

ஐசிஐசிஐ பேங்க் பற்றி: 
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank Ltd - NYSE:IBN). இந்த வங்கியின் ஒருங்கிணைந்த மொத்த சொத்து மதிப்பு, 2018 ஜூன் 30 – ஆம் தேதி நிலவரப்படி US$ 160.5 பில்லியன் ஆக உள்ளது. இதன் துணை நிறுவனங்கள், இன்ஷுரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், பங்கு தரகு போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா உள்ளிட்ட 17 நாடுகளில் ஐசிஐசிஐ பேங்க் இயங்கி வருகிறது.

எஸ்.பி.எஃப்.சி பற்றி :

நாட்டின் முன்னணி  வங்கிசாரா நிதி நிறுவனமாக (Non-Banking Finance Company) ஸ்மால் பிசினஸ் ஃபின்கிரெடிட் இந்தியா(Small Business FinCredit India Pvt. Ltd -SBFC) திகழ்கிறது. நாடு முழுக்க உள்ள  நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் செயல்படும் சிறிய தொழில்முனைவோர்களுக்கு கடன் வழங்கும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இது வரைக்கும் யாரும் கடன் வழங்காத நிறுவனங்கள் மற்றும் எந்த நிறுவனமும் பயன்படுத்திக் கொள்ளாத அல்லது போகாத சிறிய நகரங்கள் மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி அளிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. 

நாடு முழுக்க 60 நகரங்களில் 90-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் 800-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் எஸ்.பி.எஃப்.சிஇயங்கி வருகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் விதமாக பாரம்பரிய நுண் நிறுவனங்களுக்கு (Traditional Micro Enterprises) கடன் உதவி அளித்து வருகிறது.  

எஸ்.பி.எஃப்.சி, அதன் கடன் வழங்கும் முறையை முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் ஆக மேம்படுத்தி இருக்கிறது. இந்தக் கடன் வழங்கும் அமைப்பை அது ‘லிவியோசா’ (Leviosa)  என அழைக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், அவர்களின் வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல்களை சுலபமாக்கி உள்ளதோடு, இதன் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு விரைந்து கடன் வழங்க முடிவு எடுக்க உதவி வருகிறது.

எஸ்.பி.எஃப்.சி-ன் பங்கு மூலம் (Equity) ரூ. 850 கோடிகளாவும், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு (Assets Under Management) ரூ. 1,100 கோடிகளாகவும் இருக்கிறது. இதன் நிர்வாக குழுவில், துறை சார்ந்த நிபுணர்கள் இடம் பெற்றிக்கிறார்கள். இவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிதிச் சேவைகளில் (Financial Services) பழுத்த அனுபவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

புதிய தகவல்களுக்கு பார்வையிடவும்:

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...