மொத்தப் பக்கக்காட்சிகள்

டிசிபி பேங்க், 2018-19 இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ரூ.73 கோடி


டிசிபி பேங்க், 2018-19 இரண்டாம்காலாண்டு நிதி நிலை முடிவுகள்அறிவிப்பு

டிசிபி பேங்க், 2018-19 இரண்டாம் காலாண்டு  நிகர லாபம் ரூ.73  கோடி

அக்டோபர் 17, 2018, மும்பை: டிசிபி பேங்க்லிமிடெட் (BSE: 532772; NSE: DCB)–ன் இயக்குநர் குழு கூட்டம் மும்பையில்2018, அக்டோபர் 17 ம் தேதி நடந்தது. அதில், 2018-19 ஆம் நிதி ஆண்டு  இரண்டாம்காலாண்டு (Q2 FY 2019) நிதி நிலை முடிவுகள்ஆய்வு செய்யப்பட்டது.

2018-19 இரண்டாம் காலாண்டு நிதி நிலை முக்கியமுடிவுகள் :

         2018-19 இரண்டாம்காலாண்டில் வங்கியின் வரிக்கு பிந்தைய லாபம்(Profit After Tax - நிகர லாபம்) ரூ.73  கோடி. இது 2017-18  இரண்டாம் காலாண்டில் ரூ. 59  கோடியாகஇருந்தது. இது 25% அதிகரிப்பாகும்.

         2018-19 இரண்டாம்காலாண்டில் வங்கியின் வரிக்கு முந்தைய லாபம்(Profit Before Tax ) ரூ.114  கோடி. இது 2017-18 இரண்டாம் காலாண்டில் ரூ. 94 கோடியாக இருந்தது. இது 21% அதிகரிப்பாகும்.       
                                                                                    
          செயல்பாட்டு லாபம் ரூ. 146  கோடி, இது முந்தையஆண்டின் இதே காலத்தில் ரூ.124  கோடியாகஇருந்தது.

         வங்கியின்நிகர வட்டி வருவாய் (Net Interest Income) ரூ. 282  கோடி. இது முந்தைய ஆண்டின் இதேகாலத்தில் ரூ. 248 கோடியாக இருந்தது.  இது17% அதிகரிப்பு.

         வட்டி சாரா வருமானம்ரூ.73  கோடி. இது முந்தைய ஆண்டின் இதேகாலத்தில் ரூ. 65  கோடியாகஇருந்தது  முக்கியகட்டண வருமானம் 17% வளர்ச்சி கண்டுள்ளது.

        2018-19 முதல்காலாண்டுடன் ஒப்பிடும் போது, செலவு வருமானவிகிதம் (Cost Income Ratio) 1.38% அதிகரித்து58.88% ஆக உள்ளது.

        பங்குமூலதனம் மீதான வருமானம் (Return on Equity) ஆண்டு கணக்கில், 2018-19 இரண்டாம்காலாண்டில் 11.13%  ஆகஉள்ளது. இது 2018-19 முதல் காலாண்டில் 10.75% ஆகஇருந்தது. இது 2017-18 இரண்டாம் காலாண்டில் 9.78% ஆக இருந்தது. இது21% அதிகரிப்பாகும். முந்தைய ஆண்டின் ஒருதள்ளுபடி தவிர்த்து, செலவு வருமான விகிதம்மற்றும் பங்கு மூலதனம் மீதானவருமானம் முந்தைய ஆண்டு மற்றும்கடைசி காலாண்டுடன் ஒப்பிடும் போது மேம்பட்டுள்ளது.

                   வழங்கப்பட்டநிகர கடன்கள் (Net Advances), 2018 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படிரூ. 22,069 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 2017 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படிரூ. 17,395  கோடியாகஇருந்தது. இது 27% வளர்ச்சியாகும்.

                   2018 செப்டம்பர்30 ஆம் தேதி நிலவரப்படி வங்கியின்டெபாசிட்கள் 27% வளர்ச்சிக் கண்டு ரூ. 26,169 கோடியாகஉள்ளது. சில்லறை காசா மற்றும்சில்லறை டேர்ம் டெபாசிட்கள் தொடர்ந்துவங்கியின் நிலையான நிதி ஆதாரமாகஇருக்கிறது. வங்கியின் மொத்த டெபாசிட்டில் சில்லறைடெபாசிட்கள் (வேளாண் மற்றும் அனைவருக்கும்வங்கி் சேவை சேர்த்து) 75.30%  ஆக உள்ளது. 

                    காசா விகிதம், 2018 செப்டம்பர்30 ஆம் தேதி நிலவரப்படி 24.30%  ஆக உள்ளது. இது, 2017 செப்டம்பர்30 ஆம் தேதி நிலவரப்படி 25.88% ஆகஇருந்தது . சேமிப்பு கணக்குகளின் வளர்ச்சி 30% ஆகும்.

                   நிகரவட்டி வரம்பு (Net Interest Margin), 2018-19 இரண்டாம் காலாண்டில் 3.83% ஆக உள்ளது. இது2017-18 இரண்டாம் காலாண்டில் 4.22%, இது 2018-19 முதல்  காலாண்டில்3.90%  ஆகஇருந்தது.

                   மொத்த  வாராக்கடன் (Gross NPA) விகிதம் செப்டம்பர் 30, 2018 நிலவரப்படி  1.84%  ஆக இருக்கிறது. இது, ஜூன் 30, 2018 நிலவரப்படி 1.86% ஆக இருந்தது

                     நிகரவாராக் கடன் விகிதம், செப்டம்பர்30, 2018 நிலவரப்படி 0.72% ஆக குறைந்துள்ளது. இது, ஜூன் 30, 2018 நிலவரப்படி0.72% ஆக இருந்தது.

                     மூலதனதன்னிறைவு விகிதம் (Capital Adequacy Ratio - CAR),  செப்டம்பர்30, 2018 நிலவரப்படி  15.57%  ஆக உள்ளது. மேலும், பேசல்III விதிமுறைகள்படி  டயர்I - 12.02% மற்றும் டயர்  II - 3.55%  ஆக உள்ளது.

                     செப்டம்பர்30, 2018 நிலவரப்படி, நிகர மாற்றி அமைக்கப்பட்டநிலையான கடன்கள் (Net Restructured Standard Advances) சுமார்ரூ. 35 கோடியாக உள்ளது.

                     வங்கியின்கிளைகள் எண்ணிக்கை, 2018 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி328 ஆக அதிகரித்துள்ளது..

செயல்பாடுகுறித்து டிசிபி வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும்தலைமை செயல் அதிகாரி திரு. முரளி எம். நடராஜன் (Mr. Murali M. Natrajan, Managing Director & CEO) கூறும்  போது, "வங்கியின் மேம்பாட்டு குறித்து நாங்கள் திருப்தி அடைந்துள்ளோம். சில்லறை கடன், எம்எஸ்எம்இ / எஸ்எம்இமற்றும் வேளாண் கடன், அனைவருக்கும்வங்கிச் சேவை, தீவிர செலவுகுறைப்பு நடவடிக்கை போன்றவற்றில் தொடர்ந்து சாதனை வளர்ச்சி கண்டுவருகிறோம். தற்போதைய நிலையில் வாராக் கடன் கட்டுப்பாட்டுக்குள்உள்ளது. மூலதனத்தை சிறப்பாக பயன்படுத்தும் வழிகள் குறித்து நிலையாகஆராய்ந்து வருகிறோம். செலவு வருமான விகிதம்மற்றும் பங்கு மூலதனம் மீதானவருமானம் படிப்படியாக அதிகரிக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்"




ஐந்தொகை (Balance Sheet) முக்கிய விவரங்கள்




ரூ. கோடியில்

Sep 30,
Jun 30,
Mar 31,
Dec 31,
Sep 30,
2018
2018
2018
2017
2017

மொத்த சொத்துகள்
32,510
31,178
30,222
27,151
25,908
வைப்புகள்
26,169
25,032
24,007
21,296
20,567
நிகர கடன்கள்
22,069
21,243
20,337
18,595
17,395
முதலீடுகள்
7,003
7,053
6,219
5,714
5,711
பங்குதாரர்கள் மூலதனம்
2,931
2,854
2,808
2,743
2,685
மொத்த வாராக் கடன் விகிதம்
1.84%
1.86%
1.79%
1.89%
1.80%
நிகர வாராக் கடன் விகிதம்
0.70%
0.72%
0.72%
0.87%
0.90%
ஒதுக்கீட்டு விகிதம்
76.82%
76.09%
75.72%
73.36%
71.96%
காசா விகிதம்
24.30%
24.63%
24.33%
25.67%
25.88%
கடன் டெபாசிட் விகிதம்
84.33%
84.86%
84.71%
87.32%
84.58%






Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..! Food

*மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!* ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும்...