மொத்தப் பக்கக்காட்சிகள்

திருப்பி செலுத்தும் திறன் அறிந்து கடன் வாங்குங்கள்..!. - ஆ.சிவசங்கர்

திருப்பி செலுத்தும் திறன் அறிந்து கடன் வாங்குங்கள்..!.
        -  ஆ.சிவசங்கர்

தமிழர் பரிந்துரை வணிகம் அமைப்பின் 158 வது வாரக் கூட்டம் சென்னை தி.நகரில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக திரு. .ஆ.சிவசங்கர் கலந்து கொண்டார்.

பிரபல தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளரான(தமிழ்நாடு,கேரளா மாநிலங்கள் உள்ளடங்கிய பகுதி) இவர் வணிகர்களுக்கு பயன்தரும் பல்வேறு அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

சிறப்புரை நிகழ்த்துகையில் அவர் பேசியதாவது:

 " தங்கள் வணிக வளர்ச்சிக்காக கடன் வாங்கி தொழில்  செய்து வந்த தொழில் முனைவோர் சிலர் கடனை உரிய நேரத்தில் செலுத்தமுடியாமல் திண்டாடிய போது, அவர்கள் எந்த இடத்தில் தவறு செய்திருக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தேன்.அப்போது சில காரணங்களை கண்டறிய முடிந்தது.

கடைகளுக்கு சமையல் எண்ணெய் சப்ளை செய்யும் ஒரு வியாபாரி .மிகக் கடின உழைப்பாளி. எங்கள் நிறுவனத்தில் 70 லட்சம் பாக்கி வைத்திருந்தார்.அவரை அணுகியபோது, பொருளை சப்ளை செய்துவிட்டு கடைக்காரர்களிடம் சரியாக வசூலிக்கத் தெரியாமல் கோட்டை விட்டது தெரிய வந்தது.

இந்த எண்ணெய் வியாபாரி ஏமாற்றப் பட்டிருந்தார்

ஒரு வணிக நிறுவனத்தில் வியாபாரம் நன்கு நடைபெற்றது.
ஆனால் அவரால் லாபம் ஈட்ட முடியவில்லை.அது பற்றி ஆராய்ந்தபோது ,அவர் கணக்கு வழக்கு பார்க்காத வியாபாரி என்பது தெரிய வந்தது.வருவாய் வந்தது ,அதைவிட அங்கு செலவு இருந்தது.மீண்டுவர முடியாத கடனுக்குள் இருந்தார்.

வரவு-செலவை பார்த்து செயல்படாததால் வந்த வினை.

ஒரு பல் மருத்துவர் நிறைய கடன் வாங்கி நவீன உபகரணங்கள் போட்டு பல் மருத்துவ கிளினிக் ஆரம்பித்தார்.நோயாளிகள் வரவில்லை.கடனுக்காக மாதந்தோறும் 2 லட்சம் செலுத்த வேண்டும்.

இப்போது கிளினிக்கை மூடிவிட்டு மாதம் 30 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு போகிறார்.கடனை எப்படி அடைப்பாரோ?

இவரிடம் சரியான திட்டமிடல் இல்லை.

ஒரு  பிரபல கண்மருத்துவர் தன் சக்தியை மீறி ஏகப்பட்ட கடன் வாங்கியதால்  குடும்ப நிம்மதி யை இழந்தார்.கடன்காரர்களுக்கு அஞ்சி மனைவிபிரிந்து தனியாக போனார்.கடன்தொல்லையால்  மருத்துவர்க்கு மன அழுத்தம் ஏற்பட்டு தொழில் திறனையும் இழந்து விட்டார்.

ஒரு வழியாக கடன் பிரச்னையில் இருந்து அவரை வெளியே கொண்டு வந்தோம்.

வணிக வளர்ச்சிக்கு கடன் அவசியம். ஆனால், திருப்பி செலுத்தும் திறன் அறிந்து கடன் வாங்குங்கள், என்றார் திரு.சிவசங்கர்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...