பிஎஸ்இ, என்எஸ்இ பங்குச் சந்தைகள் டெலிவரி அளவு 35.6 சதவிகிதமாக குறைவு..!

 Average monthly stock delivery volumes on the BSE and NSE
பிஎஸ்இ, என்எஸ்இ பங்குச் சந்தைகள் டெலிவரி அளவு 35.6 சதவிகிதமாக குறைவு..!

2018  ஏப்ரல் மாதத்தில் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ பங்குச் சந்தைகளில் மாத சராசரி டெலிவரி பங்குகளின் அளவு, 35.6 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது 2009 நவம்பருக்கு பிறகு மிகக் குறைந்த டெலிவரி விகிதம் .
 வங்கி, சுத்திகரிப்பு, தகவல் தொழில் நுட்பம், மருந்து தயாரிப்பு, தொலைத் தொடர்பு, சுரங்கத் துறை போன்ற துறைகளின் சராசரி டெலிவரி பங்குகளின் அளவு 2017 மார்ச் மாதத்தை விட கணிசமாகக் குறைந்துள்ளது.

2017 மார்ச் மாதத்தில் வர்த்தகமான பங்குகளில், டெலிவரி பங்குகளாக மாறியவை 52.6 சதவிகிதமாக இருந்தது. அப்போது பிஎஸ்இ-ன் சென்செக்ஸ் 30,000 புள்ளிகளாக இருந்தது. அடுத்த 9 மாதங்களில்,  2018, ஜனவரி 29 ஆம் 6000க்கும் அதிகமான புள்ளிகள் அதிகரித்து 36,444 என்ற புதிய உச்ச நிலையை எட்டியது.

எஃப் அண்ட் ஓ  வர்த்தகம் அதிகரித்ததால் டெலிவரி பங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த இரு மாதங்களாக மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளின் விலை இறக்கம் கண்டுள்ளது. மேலும், அவற்றின் மீதான வர்த்தகமும்  குறைந்தது.  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் அதிகமாக முதலீடு செய்யவில்லை. ளும் இந்த இரு பிரிவு பங்குகளையும் வாங்கவில்லை.

சர்வதேச நிகழ்வுகள் (கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் விலை உயர்வு) மற்றும் உள்நாட்டு நிகழ்வுகள் (கர்நாடகா தேர்தல்...), நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகளால், இந்தியப் பங்குச் சந்தைகளில்  இன்னும் இறக்க நிலை காணப்படுகிறது. இவை சரியாகும்பட்சத்தில் டெலிவரி எடுக்கப்படும் பங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும்.

Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.