மொத்தப் பக்கக்காட்சிகள்

மூத்தக் குடிமக்களுக்கு 7 சலுகைகள்..! மத்திய பட்ஜெட் 2018-19

மத்திய பட்ஜெட் 2018-19

மூத்தக் குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 7 சலுகைகள் 

1.  நிலைக் கழிவு ரூ.40,000 அறிவிக்கப்பட்டுள்ளது.  சலுகை பென்ஷன்தாரர்களுக்கும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. வங்கி சேமிப்பு கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட்,   தொடர் வைப்பு (ஆர்டி)  வட்டி எல்லாம் சேர்ந்து ஓராண்டில் ரூ.10,000  வரி தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கு (section 80TTB) இது ரூ.50,000 ஆக அதிகரிக்க இருக்கிறது. இவர்களுக்கு டிடிஎஸ் என்கிற மூலத்தில் வரி பிடித்தமும் (deduction of tax at source section 194A) இருக்காது.

3. மூத்தக் குடிமக்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் (Section 80D)  பிரீமியத் தொகையில் வரிச் சலுகை ரூ.30,000 லிருந்து ரூ. 50,000 ஆக அதிகரிப்படுகிறது.

4. மிகவும் மூத்தக் குடிமக்களுக்களுக்கு (very senior citzen) பொதுவான மருத்துவச் செலவுகளுக்கு (medical expenditure) ஓராண்டில் ரூ. 50,000 வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.

5. மூத்த குடிமக்களுக்கான குறிப்பிட்ட  மருத்துவச் செலவுக்கான  (medical treatment of specified diseases)தள்ளுபடி ரூ.60,000 லிருந்து ரூ. 1 லட்சமாக அதிகரிக்கபடுகிறது.

6. மிகவும் மூத்த குடிமக்களுக்கான குறிப்பிட்ட  மருத்துவச் செலவுக்கான  (medical treatment of specified diseases)தள்ளுபடி ரூ.80,000 லிருந்து ரூ. 1 லட்சமாக அதிகரிக்கபடுகிறது.

7.  பிரதம மந்திரி பென்ஷன் திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ. 7.5 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.

இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்தால் மூத்தக் குடிமக்களுக்கு சுமார் ரூ.1.5 லட்சத்துக்கு வரி தள்ளுபடி இருக்கிறது. இதன் மூலம் 5%, 20% மற்றும்  30% வரி வரம்பில் வருபவர்களுக்கு முறையை  ரூ.7,500, ரூ. 20,000 மற்றும்   ரூ. 45,000 வரி மிச்சமாக கூடும்.

+ நிதி சாணக்கியன்

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...