மொத்தப் பக்கக்காட்சிகள்

உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் 10 அம்சங்கள்!

உங்களை கோடீஸ்வரர் 
ஆக்கும் 10  அம்சங்கள்!
சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com

1. ஒரு விதையைப் பெட்டிக்குள் அடைத்து வைத்தால், எத்தனை ஆண்டுகளானாலும் அது விதையாகவே இருக்கும். அதையே மண்ணில் விதைக்கும்போதுதான் அது செடியாக, மரமாக வளர்ந்து பயனளிக்கும்.
அதுபோலத்தான் நம்முடைய பணமும் முதலீடு செய்தால் மட்டுமே வளர்ச்சியடையும். 

2. முதலீடு செய்தால் மட்டும் போதாது; முதலீடு என்பது விலைவாசியைத் தாண்டி வளர்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். 

அப்போதுதான் நாம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறோம் என அர்த்தமாகும்.

3. உலகின் எட்டாவது அதிசயமான கூட்டு வட்டியின் மகிமையை உணர வேண்டும். அதற்கு நாம் நீண்ட காலம் முதலீடு செய்ய வேண்டும். இதற்கான எளிய ஃபார்முலா இதோ… 

முதலீட்டு மீதான வருமானம் > பணவீக்கம் = செல்வம் பெருக்கம்

முதலீட்டு மீதான வருமானம் < பணவீக்கம் = செல்வம் இழப்பு

4. எந்தவொரு பொருளை உற்பத்தி செய்வதற்கும் மூலப்பொருள் அவசியமாகிறது. அதுபோல, எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் வளர்ச்சியடைய வாடிக்கையாளர் எனப்படும் (consumer) ஆதாரம் அவசியமாகிறது. 

கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்மைப் பயன்படுத்தி (130 கோடி மக்கள்) வளரும்போது, நாம் ஏன் கார்ப்பரேட் நிறுவனங்களில் முதலீடு செய்து வளரக்கூடாது என்பதை உணர வேண்டும்.

5. வாடிக்கையாளராக மட்டுமே இருந்து வேடிக்கைப் பார்ப்பதை விடுத்து, நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் பங்கு தாரராக மாற வேண்டும். 

ஒரு சிறு தொகையை முதலீடு செய்வதன் மூலம் மறைமுகமாக நாமும் பல பெரிய நிறுவனங்களில் மைக்ரோ முதலாளி யாக மாறுகிறோம். 

நம்  முதலீடும் கார்ப்பரேட் நிறுவனங்களோடு சேர்ந்து வளரும்.

6. நாம் செய்யும் சிறிய முதலீடு என்பதுகூட நாம் தூங்கும் நேரங்களில் நமக்காக வேலை செய்துகொண்டிருக்கும். உதாரணமாக டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் மட்டுமன்றி, மற்ற மேலை நாடுகளிலும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

இங்கு நாம் முதலீடு செய்துவிட்டுத் தூங்கிக் கொண்டிருப்போம். ஆனால், அதேநேரத்தில் அமெரிக்காவில் நாம் முதலீடு செய்த கம்பெனியில், ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அதனால் கம்பெனி வளரும்போது நம் முதலீடும் வளரும்.
சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர்
7. பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நாம் முதலீடு செய்யும் ரூ.5,000 என்பது 30 முதல் 40 கம்பெனி பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. ஐ.டி, ஃபார்மா, இன்ஃப்ரா, வங்கி எனப் பல்வேறு துறைகளில் பகிர்ந்து முதலீடு செய்யும்போது பெருமளவு ரிஸ்க் தவிர்க்கப்படுகிறது.

8. மாதத் தவணை முறையில் (எஸ்.ஐ.பி -SIP)  முதலீடு செய்யும்போது, சராசரியாக (Rupee Cost Average) அதிகபடியான யூனிட்கள் கிடைக்கும். 

எனவே, இது ஒரு பாசிட்டிவான விஷயமே.

9. ரிஸ்க் என்பது, தன்னுடைய தேவை, எப்போது பணம் தேவை என்பதை அறியாமல் செய்யப்படும் முதலீடாகும்.

10. பணத் தேவை ஓராண்டிலா அல்லது  ஐந்தாண்டுகளுக்குப்பிறகா என்பதைக் கணித்து அதற்கேற்றவாறு, குறுகிய காலத் தேவையாக இருந்தால் கடன் பத்திரத்திலும்,  மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் தேவையிருந்தால். ஃபேலன்ஸ்டு ஃபண்டுகளிலும், ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்கு மேல் தேவையெனில் ஈக்விட்டி ஃபண்டுகளிலும் முதலீடு செய்வது சிறந்தது.

நமக்கு கார் ஓட்டத் தெரிந்தாலும், நாம் டிரைவரை நியமித்து ஓட்டுவது ரிஸ்க்கைக் குறைக்கும்; அதுபோல, நம் பணத்தை முதலீடு செய்யும்போது நல்ல நிதி ஆலோசகர் மூலம் முதலீடு செய்வது மேலும் வளமையாக்கும்.  

S.BHARATHIDASAN
CEO, 
WEALTH MANAGEMENT SOLUTIONS.
s_bharathidasan@yahoo.Com

S.BHARATHIDASAN DECE,BA,FChFP.
CHARTERED FINANCIAL PLANNER
MOB; 94441 94869, 81223 56059.
   
CHENNAI ADDRESS:                           
 No.3 / 267C, IVth Cross                            
Sengeni Amman Koil Street,                    
Neelangarai, CHENNAI - 600 041.             
Email id : s_bharathidasan@yahoo.com
MOB; 94441 94869, 81223 56059.

PUDUCHERRY ADDRESS
No.353, Kamaraj Salai,
 Opposite to Kadhi, New Saram,  
 PUDUCHERRY - 605 013.
MOB; 94441 94869, 81223 56059.
Email id : s_bharathidasan@yahoo.com



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...