மொத்தப் பக்கக்காட்சிகள்

எஸ்ஸார் ஆயில் 12.9 பில்லியன் டாலருக்கு விற்பனை

எஸ்ஸார் எனர்ஜி மற்றும் ஆயில் பிட்கோஎஸ்ஸார் ஆயில் நிறுவனத்தை ரோஸ்நெஃப்ட் மற்றும் டிராபிகிரா-யூசிபி கூட்டமைப்பு  நிறுவனங்களுக்கு 12.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வெற்றிகரமாக விற்பனை செய்துள்ளன.
* இந்தப் பரிவர்த்தனை, இது வரைக்கும் இல்லாத அளவுக்கு ரஷ்யாவின் மிகப் பெரிய வெளிநாட்டு முதலீடு (foreign investment) ஆகும். அதேநேரத்தில், இது இந்தியாவின் மிகப் பெரிய அந்நிய நேரடி முதலீடும் (FDI) ஆகும்    
* இந்தப் பரிவர்த்தனை, எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தின்  சுத்திகரிப்பு மற்றும் சில்லறை சொத்துகள் (US $1,090 கோடி),  வடினார் துறைமுகம் மற்றும் அது சார்ந்த உள்கட்டமைப்பு சொத்துகளை (US $ 200 கோடி)உள்ளடக்கியதாகும்.
 எஸ்ஸார் ஆயில் லிமிடெட் (Essar Oil Limited - EOL) - ன் நிர்வாக பங்குதாரர்களான எஸ்ஸார் எனர்ஜி ஹோல்டிங்ஸ் லிமிடெட் (Essar Energy Holdings Limited) மற்றும் ஆயில் பிட்கோ (மொரிசியஸ்) {Oil Bidco (Mauritius) Limited} ஆகிய இரு நிறுவனங்கள், மொரிசியஸ் சட்டப்படி நிர்வகித்து வந்தன.அவை எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தின் 98.26%  பங்குகளை வெற்றிகரமாக விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளன.
ரோஸ்நெஃப்ட் (Rosneft) அதன் துணை நிறுவனமான பெட்ரோல் காம்ளெக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Petrol Complex Pte. Ltd) மூலம் 49.13%  பங்குகளை கையக்கப்படுத்தி உள்ளது. டிராபிகிரா, யூசிபி கூட்டமைப்பு (Trafigura, UCP consortium) அதன் கேசானி என்டர்பிரைசஸ் கம்பெனி லிமிடெட் (Kesani Enterprises Company Limited) மூலம் இதே அளவு பங்குகளை வாங்கி உள்ளது. மீதி உள்ள 1.74 சதவிகித பங்குகள் சிறு முதலீட்டாளர்களிடம் உள்ளன.
கடந்த ஆண்டு ரஷ்யா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முன்னிலையில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த முதலீடானது, உலகில் இதுவரைக்கும் எங்கும் நடக்காத ரஷ்யாவின் மிகப் பெரிய ஒற்றை வெளிநாட்டு முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியா - ரஷ்யா  பொருளாதார ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயம் ஆகும். இது இந்தியாவின் மிகப் பெரிய ஒற்றை அந்நிய நேரடி முதலீடும் (FDI) ஆகும். இதன் மூலம் அந்நிய முதலீட்டுக்கான கவர்ச்சிகரமான நாடாக இந்தியா மீண்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் நிறைவேற ஒத்துழைத்த இந்திய அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு அவற்றின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்கு எஸ்ஸார் எனர்ஜி நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. இந்தப் பரிவர்த்தனையை தொடர்ந்து, 3,000 கோடி அமெரிக்க டாலருக்கும் மேற்பட்ட அந்நிய முதலீட்டை இந்தியா பெறுவதற்கு எஸ்ஸார் உதவி புரிந்துள்ளது. இதற்கு முன் 2007 ம் ஆண்டு எஸ்ஸார் குழுமம், ஹட்சிசன் வாம்போவா இணைந்து வோடஃபோன் மூலம் 1,110 கோடி அமெரிக்க டாலரை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது.
எஸ்ஸார் எனர்ஜி நிறுவனம், விடிபி கேப்பிட்டல் (VTB Capital) மற்றும் அதன் முதலீட்டு வங்கி பங்குதாரருக்கு இந்த ஒப்பந்தம் நிறைவேற உதவியதற்கு சட்ட ஆலோசனைகள் வழங்கிதற்கு நன்றி தெரிவித்துள்ளது. .
எஸ்ஸார் ஆயில் நிறுவனத்துக்கு கடன் வழங்கியது மூலம், அது இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயல்பட உதவிய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், ஐடிபிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், யெஸ் பேங்க் மற்றும் கூட்டமைப்புக்கு எஸ்ஸார் எனர்ஜி நன்றியை தெரிவித்துள்ளது.
இந்த விற்பனையில், எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தின் உலகின் மிகப் பெரிய 20 MTPA  வடினார் சுத்திகரிப்பு நிலையம், இந்தியா முழுக்க உள்ள அதன் 3,500 சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பு வசதிகள் அடங்கும். மேலும் 58 மில்லியன் டன் கொள்ளவு கொண்ட உலக தரமான வடினார் துறைமுகம், 1,010  MW திறன் கொண்ட வடினார் மின் உற்பத்தி ஆலை, பல் முன்னை எரி பொருள் நிலையம் ஆகியவையும் அடங்கும்.
எஸ்ஸார் நிறுவனத்தின்  நிறுவனர் திரு. சஷி ரூயா (Essar Founder Mr Shashi Ruia) கூறும் போதுஇந்தியா - ரஷ்யா பொருளாதார ஒப்பந்தத்தில் இன்றைக்கு வரலாற்று முக்கியமான நாள். இந்தப் பரிவர்த்தனை உலகின் இரு மிகப் பெரிய தலைவர்களின் குறிக்கோளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. உலக தரம் வாய்ந்த எண்ணெய் வணிகத்தில் முதலீடு செய்தற்காக ரோஸ்நெஃப்ட், டிராபிகிரா, யூசிபி நிறுவனங்களை பாராட்டுகிறேன். இதனை உருவாக்கியதற்காக நாங்கள் பெருமைபடுகிறோம். எஸ்ஸார் நிறுவனத்துக்கு இது சாதனை பரிவர்த்தனை. இது இந்தியாவின் வளர்ச்சிக்கு சிறப்பாக உதவி செய்வதாக இருக்கும்.
எஸ்ஸார் கேப்பிட்டல் நிறுவனத்தின் இயக்குநர் திரு. பிரசாந்த் (Mr Prashant Ruia, Director, Essar Capital),  கூறும் போது இந்தப் பரிவர்த்தனையின் மூலம் எங்கள் நிறுவனத்தின் கடனை 1100 கோடி டாலர் (ரூ.70,000 கோடி) குறைத்துள்ளோம். எங்களின் விரிவாக்க பணிகளை நிறைவேற்றுவது மூலம் பல்வேறு வணிகத்தில் பரந்து விரிந்திருப்போம்"
எஸ்ஸார் எனர்ஜி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு. தன்பத் நஹதா (Mr Dhanpat Nahata, Director, Essar Energy Holdings Limited) கூறும் போது இந்தக் குறிப்பிடத்தக்க பரிவர்த்தனை மூலம் எஸ்ஸார் எனர்ஜி புதிய சாதனை படைத்துள்ளது. எஸ்ஸார்  ஆயில் நிறுவனத்தின் புதிய பங்குதாரர்களாகி இருக்கும், ரோஸ்நெஃப்ட், டிராபிகிரா, யூசிபி நிறுவனங்களை வரவேற்கிறேன். மேலும், இந்தப் பரிவர்த்தனை மிகவும் சிறப்பாக நிறைவேற பாடுபட்ட எஸ்ஸார் எனர்ஜி நிறுவனத்தின் குழு மற்றும் என் சக பணியாளர்கள், ஆலோசகர்களுக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
இந்தப் பரிவர்த்தனை சிறப்பாக நிறைவு பெற்றிருப்பது குறித்து ரோஸ்நெஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  திரு. இகார் செஹின் (Rosneft CEO, Mr Igor Sechin), கூறும் போது இன்றைய தினம், எஸ்ஸார் ஆயில் நிறுவனத்திற்கு புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. எங்களின் பங்குதாரர்களுடன் இணைந்து நிறுவனத்தின் நிதி நிலையை மேம்படுத்த உதவி செய்ய உள்ளோம். நடுத்தர காலத்தில் நிறுவனத்தில் சொத்தை அதிகரிக்க உள்ளோம். இந்தப் பரிவர்த்தனை என்பது ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துக்கு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இதன் மூலம் எங்கள் நிறுவனம், வேகமாக வளரும் ஆசியா- பசிபிக் சந்தையில் நுழைந்திருக்கிறது. வடினார் சுத்திகரிப்பு ஆலையை கையக்கப்படுத்தியது மூலம் ரோஸ்நெஃப்ட் நிறுவனம் அதன் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
டிராபிகிரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. ஜெர்மி வயர் (Mr Jeremy Weir, CEO of Trafigura) ,கருத்து தெரிவிக்கும் போது: சர்வதேச முதலீடு மூலம் எஸ்ஸார் ஆயில் அதனை மேம்படுத்தி உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் சூழலில் எஸ்ஸார் ஆயில் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருப்பது, இந்தியாவில் டிராபிகிரா நிறுவனம் வளர்ச்சி காணும் வாய்ப்பாக அமையும் எனலாம்.
யூசிபி இன்வெஸ்ட்மென்ட் குரூப்-ன் நிர்வாக பங்குதாரர் திரு. இளய ஷெர்போவிச் (Mr Ilya Sherbovich, Managing Partner of UCP Investment Group) கூறும் போது, "வலிமையான இந்த பங்குதாரர்களுடன் இந்தப் பரிவர்தனையை வெற்றிகரமாக முடித்திருப்பது எஸ்ஸார் ஆயில் நிறுவனத்துக்கு ஒரு மைல்கல் ஆகும். அனைத்து புதிய பங்குதாரர்களும் நாங்கள் எங்களின் துறையில் அங்கீகரிக்கப்பட்ட முன்னணி நிறுவனங்களாக இருப்போம் என நம்புகிறோம். நீண்ட காலத்தில் எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தின் மதிப்பு வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கிறோம்."

 விடிபி பேங்க்-ன் முதல் துணைத் தலைவர் திரு. யூரி சோலோவிவ்  (Mr Yuri Soloviev, First Deputy President and Chairman of VTB Bank) கூறும் போது, இந்த முக்கியமான மைல் கல் பரிவர்த்தனை வெற்றிகரமாக நிறைவு பெற்றதற்கு அனைவரையும் பாராட்டுகிறேன். எஸ்ஸார் எனர்ஜி நிறுவனத்தின் உலத தரமான சொத்துகளை விற்பனை செய்ய நிதி ஆலோசனை வழங்க விடிபி கேப்பிட்டல் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனை சிறப்பாக நிறைவு செய்திருக்கிறோம். இந்தியாவில் விடிபி குழுமத்துக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் எஸ்ஸார் உடன் தொடர்ந்து பணியாற்றுவோம். இதன் மூலம் எங்களின் வாடிக்கை நிறுவனத்தை மேலும் வளர்ச்சி அடைய செய்வோம்.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...