நடப்பு 2025 ஆண்டில் நாட்டின் முன்னணி 7 நகரங்களில் வீடு விற்பனை 14 சதவீதமாக சரிந் துள்ளதாக தனியார் ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள் ளது. விலை உயர்வு, ஐ.டி. துறையில் பணிநீக்கம் உள்ளிட் டவை அதற்கு முக்கிய காரணங் களாக விளக்கியுள்ளது.
வீட்டுச் சந்தை
இந்திய பொருளாதாரத்தில் குடியிருப்பு வீட்டுச் சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டுமானம், சிமெண்டு, ஸ்டீல், வங்கி, வீட்டு கடன், வேலைவாய்ப்பு போன்ற பலதுறைகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய இந்தத்துறை, நாட்டின் பொருளா தார வளர்ச்சியை அளவிடும் முக் கிய குறியீடாகக் கருதப்படுகிறது.
இத்தகைய சூழலில், நடப்பு ஆண் டில் இந்தியாவின் முன்னணி 7 நகரங்களில் வீட்டு விற்பனை மற்றும் விலை போக்குகள் எவ்வாறு இருந்தன என்பதைக் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனமான அனராக் தெரிவித்துள்ளது.
7 முன்னணி நகரங்களில் வீடு விற்பனை 14 சதவீதம் சரிவு
சொத்து விலை உயர்வு, ஐ.டி.துறை பணிநீக்கம் காரணம்
ஐ.டி.துறையில் பணிநீக்கம், புவியி யல் அரசியல் பதற்றங்கள் மற்றும் பிற பொருளாதார பிரச்சினைகள் ஆகியவை 2025-ம் ஆண்டின் சொத்து சந்தையின் வளர்ச்சி வேகத்தை பாதித்தன.
தரவுகளின்படி, நாட்டின் முன் னணி 7 நகரங்களில் மொத்தம் 3 லட்சத்து 95 ஆயிரத்து 625 வீடுகள் விற்பனையாகியுள்ளன. 2024-ல் 4 லட்சத்து 59 ஆயிரத்து 645 வீடுகள் விற்கப்பட்ட நிலையில் இதனை காட்டிலும் 14 சதவீதம் சரிவாகும்.
நாட் டின் 7 முன்னணி நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே, ஐதராபாத், சென்னை மற் றும் கொல்கத்தாவில் வீடு விற்பனை 14 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 லட்சத்து 95 ஆயிரத்து 625 வீடுகள்
வீட்டு சொத்து விலை உயர்வு,
வீடுகளின் மொத்த மதிப்பு ஆண்டு அடிப்படையில்бசதவீதம் உயர்ந்துள்ளது. 2024-ல் ரூ.5.68 லட் சம் கோடியாக இருந்த மொத்த விற்பனை மதிப்பு, நடப்பு ஆண் டில் ரூ.6 லட்சம் கோடியாக உயர்ந்தது.
முன்னணியில் மராட்டியம்
மும்பை நகரம் 1,27,875 வீடுகள் விற்பனையுடன், அதிக விற்பனை பதிவான நகரமாக இருந்தது. , இது கடந்த ஆண்டு விற்ப னையை காட்டிலும் 18 சதவித சரிவை சந்தித்துள்ளது. புனே , 65,135 வீடுகள் விற்பனையுடன் அடுத்த இடத்தைப் பெற்றது. நடப்பு ஆண்டில் நாட்டின் வீடு விற்பனையில் மொத்தமாக 49 சத் வீத பங்கைக் மராட்டியத்தின் மும்பை மற்றும் புனே நகரங்கள் கொண்டிருந்தன. முன்னணி 7 ந ரங்களில் புதிதாக 4,19,170 வீடுகள் கட்டப்பட்டன. இது கடந்த ஆண் டைவிட 2 சதவீதம் அதிகம்.
அதிகபட்சமாக மும்பை மற்றும் பெங்களூருவில் 48 சதவீதம் அள வில் புதிய வீடுகள் கட்டப்பட்டுள் ளன.
கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் தனி வில்லாக்களை வாங்கும் போக்கு அதிகரித்துள் ளது. நடப்பு ஆண்டின் இறுதியில் விற்பனை ஆகாத வீடுகளின் எண்ணிக்கை 4 சதவீதம் உயர்ந்துள்ளது. 5.77 லட்சம் வீடுகள் விற்பனைக்கு உள்ளன. இதில் பெங்களூரு நகரம் 23 சதவீதம் அளவிலான விற்பனை யாகாத வீடுகளை கொண்டுள் ளன.