சம்பாதித்த பணத்தை பாதுகாக்க ஓர் ஆள் தேவை.- நடிகர் & இயக்குனர் ஆர். பாண்டியராஜன்
வீல் அகாடமி முதல் ஆண்டு விழா WEAL ACADEMY
ஏழு
வயது முதல் 17 வயது வரையிலான பிள்ளைகளுக்கு தனிநபர் நிதி மேலாண்மை மற்றும் தலைமை
பண்பு கற்று தரும் வீல் அகாடமியின் (WEAL ACADEMY) முதல் ஆண்டு நாள் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது.
முக்கிய விருந்தினர்களாக திரு. ஆர். பாண்டியராஜன் - நடிகர் & இயக்குனர், திரு. எஸ்.செல்வகுமார் - ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை (ANANDHAM YOUTH FOUNDATION) ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார்கள்.
பாடநெறி முடித்ததற்கான சான்றிதழின் விநியோகம்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பணம் குறித்த விழிப்புணர்வு…!
வீல் அகாடமியின் நிறுவனர் மற்றும் நிதி ஆலோசகர் எஸ். கார்த்திகேயன், வீல் அகாடமியின் இணை நிறுவனர் திருமதி.டி. ஸ்வப்னா
இருவரும் கலந்துரையாடல் மூலம் விழாவில் பங்கேற்றவர்களுக்கு பணம் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிதி ஆலோசகர் எஸ். கார்த்திகேயன்,’’ பணத்தை இழந்தால் அதனை திரும்பப் பெறுவது கஷ்டம். பணத்தை இழப்பது மூலம் வாழ்க்கையின் ஒரு பகுதியை இழந்துவிடுகிறோம். இளம் வயதிலேயே பணம் குறித்த அறிவு தேவையாகும். அதற்கு முறையான பயிற்சி அவசியமாகும். கிரிக்கெட் வீரர் டெண்டுல்கரை எடுத்துக் கொண்டால், அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இதற்கு அவர் முறையாக கோட்ச் வைத்து பயிற்சி எடுத்துக் கொண்டதுதான்.
பணத்தை இழக்கும் போதும் தோல்வியில்
வலிமையை பெறும் நாம். பணம் நிறைய சேர்க்கும் போது வெற்றியில் மன வலிமையை இழந்து
விடுகிறோம். நம்மிடம் அதிக பணம் இருக்கும் போது, மன வலிமை கட்டாயம் தேவை. அதற்கு பணத்தை
சரியாக நிர்வகிக்கும் திறன் அவசியம். அதை தான் நாங்கள் எங்கள் வீல் அகடாமி மூலம்
பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து வருகிறோம்” என்றார்.
வாழ்க்கையில் வெற்றி பெற..!
திருமதி.டி. ஸ்வப்னா, 4 முதல் 15 பிள்ளைகள் மிக வேகமாக விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள்.ம்
பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து 50% விஷயங்களை தான் தெரிந்து கொள்கின்றன. மீதி விஷயங்களை
வீல் அகாடமி போன்றவற்றின் மூலம் கற்றுக் கொள்கிறார்கள். இது வாழ்க்கையில் வெற்றி
பெற மிகவும் உதவுகிறது” என்றார்.
பிள்ளைகளின் வெற்றியில் பெற்றோர்களுக்கு பங்கில்லை…!
ஆனந்தம் எஸ். செல்வகுமார் பேசும் போது, இன்றைக்கு 3 வயது முதல் 70 வயது பெரியவர் வரைக்கும் மன அழுத்தத்துடன் காணப்படுகிறார்கள். பிள்ளைகள் கெட்ட வார்த்தைகள் பேசமாட்டார்கள்; அவர்கள் கேட்ட வார்த்தைகளைதான் பேசுவார்கள். எனவே, பெற்றோர்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளின் வெற்றியில் மட்டும் பெற்றோர்களுக்கு பங்கில்லை. அவர்களின் தோல்வியிலும் பங்கு உள்ளது.
மேலும், பிள்ளைகளுக்கு கேட்டதை
எல்லாம் உடனடியாக வாங்கிக் கொடுக்காதீர்கள். தேவையான பொருள்கள் என்றால் கூட
தாமதப்படுத்தி வாங்கிக் கொடுங்கள்” என்ற மிகவும் எதார்த்தமாக குறிப்பிட்டார்.
சம்பாதித்த பணத்தை பாதுகாக்க ஓர் ஆள் தேவை..~!
ஆர். பாண்டியராஜன், ‘’ பணத்தை சுலபமாக சம்பாதிக்க முடிகிறது. ஆனால், அதை பாதுகாப்பாது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சம்பாதித்த பணத்தை பாதுகாக்க ஓர் ஆள் தேவை என்பதை நீண்ட காலத்துக்கு பிறகுதான் தான் புரிந்து கொண்டேன். உங்கள் பணத்தை பாதுகாக்க சிறிய முயற்சி எடுங்கள். பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு பணத்தை பாதுகாக்க, பெருக்க வழிகளை சொல்லிக் கொடுங்கள். 1000 ரூபாய் சம்பாதித்தால் அத்தனையும் ரவுண்டு கட்டி செலவு செய்துவிட்டால், அதுவே பின்னர் நம்மை ரவுண்டு கட்டி அடிக்கும்.
மேலும், பணம் தொடர்பாக ஏமாற்றுபவர்கள் புத்திசாலிதனமாக இருக்கிறார்கள். அந்த
வகையில் ஏமாறாமல் இருக்க பணம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்திக் கொள்வது
அவசியம். அதற்கு பிள்ளைகளுக்கு வீல் அகாடமி உதவி வருகிறது. அதை வாழ்த்தி
பாராட்டுகிறேன்” என்றார்.
வீல் அகாடமி - எதிர்கால தலைவர்களை வடிவமைக்கிறது..!
பண நிர்வாகத்தின் ரகசியங்களைத் திறக்கவும், வாழ்நாள் முழுவதும் நிதி வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்கவும் 7 முதல் 17 வயதுள்ளவர்களுக்கு
பயிற்சி அளிக்கப்படுகிறது.
Weal Academy இல் , நாளைய எதிர்கால தலைவர்களை வடிவமைக்கிறது. இவர்களின் கல்விக்கூடம் மற்றொரு கற்றல் மையம் மட்டுமல்ல; இது இளம் மனங்கள் விதிவிலக்கான திறமையான, இலக்கு சார்ந்த மற்றும் நிதி ரீதியாக சுதந்திரமான நபர்களாக வளர்க்கப்படும் இடமாகும்.
பிள்ளைகளின் முழு திறனையும் திறக்க அவர்களுக்கு தேவையான கருவிகள் மற்றும் அறிவை அவர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம்;
வீல் அகாடமி
2வது தளம், பழைய கதவு எண்: 2-A, புதிய எண்: 3, சிங்காரவேலு தெரு, தி.நகர், சென்னை - 600017. *பழமுதிர்ச்சோலை கட்டிடம் பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்க்கு
அடுத்து)
இமெயில் ஐடி: wealpowermind@gmail.com
தொடர்பு எண்கள்: 9585976485, 9840936032
https://www.wealacademy.com/