மொத்தப் பக்கக்காட்சிகள்

ICICI PRU LIFE ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நீண்ட கால செல்வத்தை உருவாக்க புதிய டெப்ட் ஃபண்ட்

ICICI PRU LIFE ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நீண்ட கால செல்வத்தை உருவாக்க புதிய டெப்ட் ஃபண்ட் அறிமுகப்படுத்துகிறது

·         ஆயுள் காப்பீட்டுத் துறையில் இதுபோன்ற முதல் நிதி, ஐசிஐசிஐ ப்ரூ கான்ஸ்டன்ட் மெச்சூரிட்டி ஃபண்ட் ஆகும்.

 

·         ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் டெப்ட் ஃபண்ட் கள் வாடிக்கையாளர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குகின்றன.

 

·         நீண்ட கால செல்வத்தை உருவாக்க தற்போதைய வட்டி விகிதத்தில் முதலீடுகளை முடக்குவதற்கு, வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வழியை வழங்குகிறது.

 

·         மே 15, 2023 முதல் புதிய ஃபண்ட் சந்தாவுக்குத் திறக்கப்படும்.

 

·         வாடிக்கையாளர்களுக்கு எந்த செலவும் மற்றும் வரி தாக்கங்களும் இல்லாமல் சொத்து வகுப்புகளை மாற்றுவதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

 

·         நிறுவனத்தின் கடன் நிதிகள் தொடக்கத்தில் இருந்து அந்தந்த தரநிலைகளை தொடர்ந்து விஞ்சி வருகின்றன.

 

சென்னை, மே 16, 2023: ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் திங்களன்று, வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய அதிக வட்டி விகிதத்தில் தங்கள் முதலீடுகளை முடக்கவும், நீண்ட கால செல்வத்தை உருவாக்கவும் மற்றும் நிதி இலக்குகளை அடையவும் உதவுகின்ற ஒரு   டெப்ட் ஃபண்ட் அறிமுகப்படுத்தியது.

நடைமுறையில் உள்ள இந்த வட்டி விகித திட்டமுறையானது,   வாடிக்கையாளர்களுக்கு டெப்ட் ஃபண்ட் இல் முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்பான மற்றும் ஆயுள் காப்பீட்டு சந்தையில் இதுபோன்ற முதல்  ஃபண்ட் ஆன ICICI ப்ரூ கான்ஸ்டன்ட் மெச்சூரிட்டி ஃபண்ட் வழங்குகிறது. வட்டி விகிதங்கள் அவைகளின் உச்சத்திற்கு   நெருங்கியுள்ளதால், வட்டி விகிதங்களில் எந்த ஒரு சரிவும்   வாடிக்கையாளர்களுக்கு முதலீட்டு விருப்பமாக கடன் பத்திரங்களை கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது. இது, கடன் பத்திரங்களின் விலைகள் மற்றும் வட்டி விகிதங்களுக்கு இடையே உள்ள, வட்டி விகிதங்கள் குறையும் போது அவற்றின் விலைகள் அதிகரிக்கின்ற, நேர்மாறான 


உறவின் காரணமாகும், இவ்வாறாக இந்த பத்திரங்களில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கின்றது.

இந்த ஃபண்ட் ஆனது, நிறுவனத்தின் முதன்மையான யூனிட்-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்களுடன் (ULIP) முதலீடுகளுக்குக் கிடைக்கிறது. ULIPகள் வாடிக்கையாளர்களுக்கு, ஆயுள் காப்பீடு, குடும்பத்திற்கான நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றை ஒரு தனித்துவமான முன்மொழிவுடன் வழங்குகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு செல்வத்தை உருவாக்க உதவுகிறது. மே 15, 2023 முதல் யூனிட் இணைக்கப்பட்ட திட்டங்களுடன் ICICI ப்ரூ கான்ஸ்டன்ட் மெச்சூரிட்டி ஃபண்ட் கிடைக்கிறது. யூலிப்களில் முதலீடுகளை செய்வது வரிச் சலுகைகளை வழங்கும். வருடாந்திர முதலீடுகள் ₹ 2.5 லட்சம் வரை மற்றும் வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்கு ஆயுள் காப்பீட்டைக் கொண்டிருந்தால், முதிர்வு வருமானம் வாடிக்கையாளர்களுக்கு வரி பிடித்தம் இல்லாமல் கிடைக்கும்.

எப்படி முதலீடு செய்வது?

ICICI ப்ரூ சிக்னேச்சர், ICICI ப்ரூ ஸ்மார்ட் லைஃப் மற்றும் ICICI ப்ரூ லைஃப் டைம் கிளாசிக் போன்ற இந்த நிறுவனத்தின் யூலிப் வழங்கல்கள் மூலம் இந்த ஃபண்டில் முதலீடு செய்யும் விருப்பத்தை வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளார்கள். இந்த திட்டங்களை வாங்க வாடிக்கையாளர்கள் தங்கள் ஆலோசகர்களை அணுகலாம் அல்லது நிறுவனத்தின் இணையதளத்தை (www.iciciprulife.com ) பார்வையிடலாம்.

ICICI புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், ஃபிக்ஸட் இன்கம் இன்   தலைவர் திரு. அருண் சீனிவாசன் கூறுகையில், "ஒரு தனித்துவமான டெப்ட் ஃபண்ட் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது நிலையான வருமானம் கொண்ட யூலிப் இடத்தில் அத்தகைய ஃபண்ட் வழங்கும் நாட்டின் முதல் காப்பீட்டாளராக எங்களை உருவாக்குகிறது.

வட்டி விகித சுழற்சி உச்சத்தை நெருங்கியுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் ICICI ப்ரூ கான்ஸ்டன்ட் மெச்சூரிட்டி ஃபண்டிற்கு முதலீடுகளை செய்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. முதலீட்டாளர்கள் தங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை ULIP ஃபண்ட் க்கு மூலதனப் பாதுகாப்பு மற்றும் நீண்ட கால செல்வத்தை உருவாக்குவதற்கு ஒதுக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

இந்த ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம், வாடிக்கையாளர்கள் தற்போதைய அதிக வட்டி விகிதங்களில் தங்கள் முதலீடுகளை முடக்க முடியும் மற்றும் இந்த பத்திரங்களின் விலைகள் காலப்போக்கில் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், ஃபண்டின் NAV அதிகரிப்பதன் மூலம் பயனடைய முடியும்.

வாடிக்கையாளர்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் மற்றும் கனவு இல்லத்தை வாங்குவது அல்லது நிதி ரீதியாக சுதந்திரமான ஓய்வு பெற்ற வாழ்க்கையை நடத்துவது போன்ற அவர்களின் நிதி இலக்குகளை அடைய வழக்கமான பங்களிப்புகளை செய்ய வேண்டும். இந்த முதலீடு, குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு, நிதி விருப்பங்களுக்கு இடையில் மாறுவதற்கான நெகிழ்வுத்தன்மையுடன, முடக்கப்பட்டிருப்பதால், செல்வத்தை உருவாக்க முதலீட்டாளர்களுக்கு   இது உதவும்.

எங்களின் அனைத்து டெப்ட் ஃபண்ட்களும் அறிமுகமானதிலிருந்து, தொடர்புடைய தரநிலைகளைவிட  சிறப்பாக செயல்பட்டன. குறிப்பிடத்தக்க வகையில், சந்தைச் சுழற்சிகள் முழுவதும் எங்களின் போர்ட்ஃபோலியோவில் பூஜ்ஜியச் செயல்படாத சொத்துகளின் (NPAs) ஒரு சாதனைப் பதிவை நாங்கள் கொண்டுள்ளோம்." என்று கூறினார்.

ICICI புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் இன் திட்டங்களின் தலைவர் திரு. ஸ்ரீனிவாஸ் பாலசுப்ரமணியன் கூறுகையில், "வாடிக்கையாளர்களுக்கு இந்த தொழில்துறையின் அதன்  வகையின் முதல்  டெப்ட் ஃபண்ட்   வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஐசிஐசிஐ ப்ரூ கான்ஸ்டன்ட் மெச்சூரிட்டி ஃபண்ட் எங்களின் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்களுடன்   கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் பிரீமியங்களை இந்த ஃபண்டில் முதலீடு செய்து, தற்போதைய நடைமுறையிலுள்ள அதிக வட்டி விகிதங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் நீண்ட காலத்திற்கு தங்கள் முதலீடுகளை முடக்கலாம்.

ULIP கள் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் பாலிசியின் காலத்திற்கு ஆண்டுதோறும் ` 2.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடிவத்தினால் நீண்ட கால சேமிப்பை உருவாக்குவதற்கான வரி-திறனுள்ள முறையை வழங்குகின்றன, மேலும் வரி பிடித்தம் இல்லாத முதிர்வுத் தொகையை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

சீரான மற்றும் நிலையான வருமானத்தைத் தவிர, இது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அன்புக்குரியவர்களை நிதி ரீதியாகப் பாதுகாக்கும் ஒரு ஆயுள் காப்பீட்டையும் வழங்குகிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை வழங்குவதற்கான எங்கள் சாதனையின் காரணமாக வாடிக்கையாளர்கள் எங்களை நம்புகிறார்கள்." என்று கூறினார்.

ICICI புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸின் தற்போதைய  Debt Fundகளின் செயல்திறன் பதிவு

 

 

 

5-வருட வருவாய்

10-வருட வருவாய்

தொடங்கியதில் இருந்து வருவாய்கள்

ICICI புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் கடன் நிதிகள்

மார்னிங் ஸ்டார் மதிப்பீடுகள்#

 

ஃபண்ட் வருவாய்கள் (%)*

தரநிலை வருவாய்கள் (%)*

ஃபண்ட் வருவாய்கள் (%)*

தரநிலை வருவாய்கள் (%)*

ஃபண்ட் வருவாய்கள் (%)*

தரநிலை வருவாய்கள் (%)*

இன்கம் ஃபண்ட்

4

8.02%

7.02%

9.10%

7.81%

9.34%

7.84%

மணி மார்க்கெட் ஃபண்ட்

5

6.05%

5.51%

7.36%

6.79%

7.74%

7.13%

செக்யூர் ஆப்போர்டுனிடிஸ் ஃபண்ட்

4

NA

NA

NA

NA

7.98%

7.38%

*FMC க்காக துல்லியமாக்கப்பட்டது.

கூடுதலாக, எங்களது தற்போதைய டெப்ட் ஃபண்ட்களின் வெற்றிகரமான சாதனைப் பதிவுடன், ஏப்ரல் 30, 2023 நிலவரப்படி, ICICI ப்ருடென்ஷியல் லைஃப் ஆனதுரூ.2.56 லட்சம் கோடி நிர்வாகத்தின் கீழ் (AUM) மொத்த சொத்துக்களைக் கொண்டிருந்தது , இது அதன் வாடிக்கையாளர்களால்  நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

 

 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மியூச்சுவல் ஃபண்ட் NFO- SBI வாகன வாய்ப்பு நிதி 17.05.2024 முதல் 31.05.2024 வரை

👆🏿 🚘 *NFO- SBI வாகன வாய்ப்பு நிதி* (17.05.2024 முதல் 31.05.2024 வரை)  நிதி மேலாளர்- திரு.தன்மய் தேசாய்   பெஞ்ச்மார்க் - நிஃப்டி ஆட்டோ டிஆ...