மொத்தப் பக்கக்காட்சிகள்

Alert பத்து வகை மனிதர்கள் இதில் நீங்கள் எந்த வகை? சிந்தியுங்கள் செயல்படுங்கள்..

1. நூற்றைம்பது சவரன் போட்டு மகளுக்கு திருமணம் முடித்தவன் வீட்டில் #கலைஞர்_TV ஓடுகிறது.

2. ஊருக்குள் 30 வீடுகள் வாடகைக்கு விட்டவன் #பசுமை_வீடு மானியத்தில் வீடு கட்டிக்கொண்டான்.

3. இரண்டு மகன்கள் அமெரிக்காவில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் #அனாதைப்_பணம் 1000 ரூபாய்  பெறுகிறார்கள்.

4. காரில் சென்று #இலவச_சேலை பெறுகிறார் ஒரு பெண்.

5. IT கம்பனியில் லட்சத்தில் சம்பளம், ஆனால் ரேஷன்கார்டு படி #தாலிக்கு_தங்கம் பெறுகிறார் இன்னொருவர்.

6. 5000 சதுர அடியில் நீச்சல் குளத்துடன் வீடு. ஆனால் #வீட்டுவரி 350 ரூபாய் . அதாவது 20 வருடத்திற்கு முன் இருந்த பழைய வீட்டின் வரியே தொடர்கிறது.

7. இது போக #ரேசன்_பொருளை வசதியானவர்கள் வாங்கி, ஏழைகளுக்கு விற்பது. மானிய சிலின்டர்களை கார் பார்ட்டிகளுக்கு விற்பது.

8.பைனான்ஸ், சீட்டுகள் நடத்தி கோடியில் விளையாடும் ஒருவர் #Income_Tax என்றால் என்ன? என்கிறார்.

9.சென்சஸ் எடுக்கப்போனோம்.
#மாத_வருமானம் 4000, 5000 என்று தான் அத்தனை குடும்பமும் கூசாமல் பொய் சொல்கிறது. அப்பத்தான் சலுகைகள் கிடைக்குமாம்.

10. இதெல்லாமே நம்முடைய  தெருவில் நடக்கும் உதாரணங்கள்...
கடைசியாக 4 கட்சியிடமும் #பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுகிறார் Mr.பொதுஜனம்.

1) முறையாக வரி செலுத்தும், சலுகைக்காக #பொய்_பேசாத மக்கள்...

2) #ஊழல்_இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் அரசியல்வாதி.

3) லஞ்சம் #வாங்காது கடமையை செவ்வனே செய்யும் அரசு ஊழியன்.

நாடு #உருப்பட இந்த மூவரும் வேண்டும்.
யார் முதலில் திருந்துவது.
எப்படி திருத்துவது.?

#சட்டத்தின் வழியா?
 #சர்வாதிகாரமா??
 #கல்வியா?
#ஆன்மீகமா?

 எதைக்கொண்டு எதைத் திருத்துவது?
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...