மொத்தப் பக்கக்காட்சிகள்

உங்களுடைய சுயமரியாதையை உங்களைத் தவிர யாராலும் குறைக்க முடியாது Life

ஏதாவது நீங்கள் நினைத்தது போல் நடக்கவில்லை என்றால், என்னிடம் எது குறைவாக இருக்கிறது என்றே மனசு அலசுகிறது. 

நான் அழகாக இல்லையா என்னிடம் பணம் இல்லையா திறமை இல்லையா என்று உங்களை நீங்களே அலச செய்கிறது. 

அந்தக் கேள்வியே உங்களுக்கு தாழ்வு மனப்பான்மையை தந்து வருந்த செய்கிறது.  பட்ட அவமானமும் சங்கடங்காளுமே  உங்கள் மனக் கண் முன் வந்து நிற்கிறது. 

அவர் அப்படி செய்திருக்கக் கூடாது என ஆரம்பிக்கும் மனம், எனக்கு இப்படித் தான் நடக்கும் எனும் சுயபச்சதாபத்தில் முடிகிறது. 

உங்கள் சுயமரியாதையை நீங்களே அலசி அலசி ஆராய்ந்து விட்டு  யாரோ உடைத்து விட்டதாக வருந்துகிறது. 

தானே யாரவது முன் வந்து கிழே விழுந்து அடிபட்டுக் கொள்வார்களா. அப்படி யாரவது செய்கிறார்கள் என்றால் சுத்த அபத்தம் என்பீர்களா இல்லையா. 
ஆனால் மனதை என்ன செய்கிறீர்கள் தனக்குத் தானே அடி பட அனுமதிக்கிறீர்கள். 

தன்னம்பிக்கை குறையும் போது அது எல்லார் மேல் உள்ள நம்பிக்கையையும் குறைத்து விடுகிறது.  அது பல பிரச்னைகளை கொண்டு வருகிறது. தோல்விகள் அவமானங்கள் எல்லாவற்றிலும் இருந்தும் மீள்வது மிக சிரமமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் உங்களை குறி வைத்து பேசுவதாக உங்களைப் புறக்கணிப்பதாகவே படுகிறது. 

உண்மையில், உங்களுடைய சுயமரியாதையை உங்களைத் தவிர யாராலும் குறைக்க முடியாது. உங்களுடைய எண்ணமே உங்கள் உணர்வு. உங்களுடைய மனக் காயத்திற்கு யாரோ ஒருவர் வந்து மருந்து தடவ வேண்டும் என்று எதிர் பார்த்து காத்திருந்து துவண்டு போகாமல் உங்களை யாராலும் எளிதில் காயப் படுத்த முடியாது என திடமாக இருங்கள்... எந்த பிரச்னையும் அதன் தடம் பதிக்காமல் உங்களை விட்டும் இடம் மாறி விடும்.

எது வேண்டும் நமக்கு?!

- dr.Fajila Azad, International Lifecoach
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...