மொத்தப் பக்கக்காட்சிகள்

Share Trading லாபம் எடுப்பதன் மூலம் நட்டமடைவது?

லாபம் எடுப்பதன் மூலம் நட்டமடைவது

நான்  பங்கு வர்த்தகம் பண்ண துவங்கிய பொழுது அதிகப்படியான நட்ட வர்த்தகங்களை சந்தித்து கொண்டிருந்தேன். இதனால் சந்தை எப்பொழுதும் எனக்கு எதிராக செயல் படுவது போல் தோன்றியது. இது என்னை ஒரு தவறான பாதைக்கு இட்டுச் சென்றது, அதாவது வர்த்தகம் லாபத்தில் வந்தவுடன் விரைவாக வெளியேறி விடுவது.

10 வர்த்தகங்களில் 6 அல்லது 7-ல் லாபகரமாக தான் இருப்பேன். ஆனால் மொத்த கணக்கு நஷ்டத்தில் தான் இருக்கும். காரணம்? 7000 ரூ லாபமெடுத்தால் 10000 ரூ நஷ்டம் இருக்கும். கூட்டி கழித்து பார்த்தால் 3000 ரூ மொத்த இழப்பாக இருக்கும்.

எனது லாபம், நஷ்டத்தை ஈடுகட்ட போதுமானதாக இல்லை, ஏனென்றால் நான் எனது லாப வர்த்தகத்தை மிக விரைவாக வெளியேறி விடுகிறேன்.

இதற்கான காரணம் நட்டத்தை பற்றிய புரிதல் இல்லாதது தான். இதை தான் லாபம் எடுப்பதன் மூலம் நட்டமடைவது (Going broke taking profits) என்பார்கள்.

வர்த்தக திட்டமில்லாமல் வர்த்தகம் செய்வது

வர்த்தக ஜாம்பவான்களைப் பற்றி படித்ததில் நான் கவனித்தது என்னவென்றால், அவர்கள் தங்களுக்கென ஒரு வர்த்தக திட்டத்தை வைத்துள்ளனர். திட்டம் வைத்திருப்பது மட்டுமில்லை அதை சீரிய கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்கவும் செய்கிறார்கள்.

நீங்கள் தொடர்ந்து லாபம் ஈட்ட விரும்பினால், நுழைவு, அந்த வர்த்தகத்தின் ரிஸ்க் அளவு, வெளியேறுதல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு திட்டத்தை தினமும் செவ்வனே செய்து வர வேண்டும்.

10000 விதமான உதைக்கும் நகர்வை தெரிந்த மனிதனை பார்த்து எனக்கு அச்சமில்லை, ஆனால் ஒரே நகர்வை 10000 முறை பயிற்சி செய்தவனை பார்த்தால் தான் அச்சம் உண்டாகும். - ப்ருஸ் லீ

நீங்கள் லாபகரமாக இருக்க பல விதமான அமைப்புகள் (System) தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு நன்கு சோதனை செய்த திட்டத்தைப் பற்றிய முழு புரிதல் இருக்குமாயின், அந்த ஒரு திட்டமே உங்களை லாபகரமாக வைத்திருக்க போதுமானது.

காரணம் தேடுதல்

பெரும்பாலான வர்த்தகர்கள் நட்டத்தை மட்டுமே சந்தித்து வருவதற்கு ஒரு காரணம், அவர்கள் தங்களது நட்டத்திற்கு தங்களை தவிர மற்ற அனைவரும் காரணம் என்பது போன்ற ஒரு பிம்பத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதே ஆகும்.

வர்த்தகத்தில் லாபகரமாக திகழ வேண்டுமானால், உங்களுக்கு நிகழும் அனைத்து முடிவுகளுக்கும் காரணகர்த்தா நீங்கள் தான் என்பதை முதலில் உணர வேண்டும். இதை உணர்ந்தாள் தான் தவறுகள் புலப்படும். அதன் பிறகு தான் தவறுகளை திருத்த வழி தேட முடியும்.

தங்கள் முடிவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு என்பதை உணராத வரை, உங்களது தவறுகள் புலப்பட போவதில்லை. தவறுகள் அறிந்து அதை தவிர்க்க வழியை தேடினால் தான் வர்த்தகத்தில் முன்னேற முடியும்.

சிதம்பர ரகசியத்தை தேடுதல்

நான் வர்த்தகம் செய்ய துவங்கிய பொழுது, பெரிய வர்த்தகர்களுக்கு தெரிந்த சில ரகசியங்கள் இருப்பதாகவும், அதனால் தான் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என்றும் நினைத்து கொண்டிருந்தேன்.

நானும் அந்த ரகசியத்தை தெரிந்து கொண்டால் தான் லாபகரமாக இருக்க முடியும் என்று நம்பி அந்த சிதம்பர ரகசியத்தை தேடிய காலம் எல்லாம் உண்டு. என்னை பொறுத்தவரை அந்த ரகசியத்தை தெரிந்து கொண்டால் நட்ட வர்த்தகமே இல்லாமல் வர்த்தகம் செய்யலாம் என்ற அறியாமையில் இருந்த காலம்.

ஆனால் மாத கணக்கில் தேடிய பிறகு நான் தெரிந்து கொண்ட ரகசியம் என்னவெனில் "அப்படி ஒரு ரகசியமே இல்லை" என்பதை தான்.

உலகின் நம்பர்-1 வர்த்தக திட்டம் ஒன்று உள்ளது என வைத்து கொள்வோம். அதை தெரிந்து கொள்வதால் நல்ல வர்த்தகர் ஆகி விடலாம் என்று எண்ணினால் நான் அடுத்து கூறவிருப்பதை கவனமாக கேளுங்கள். உங்களது வர்த்தக ஒழுக்கத்தை உங்களை தவிர வேறு யாராலும் உங்களுக்கு கற்பிக்க முடியாது. உங்களது வர்த்தக திட்டத்தை உங்களை தவிர வேறு யாராலும் பின்பற்ற வைக்க முடியாது.

தவறான பழக்கங்களை பின்பற்றுதல்

ஒரு வர்த்தகராக நாம் அனைவரும் நமது வர்த்தக திட்ட விதிகளை மீற அவ்வப்பொழுது தூண்டப்படுவோம். அவ்வாறு மீறும் பொழுது நட்டம் வர வேண்டுமென வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால் விதிகளை மீறும் பொழுது வருகிற லாபம் நமது மூளைக்கு தவறான சமிக்ஞனையை கொடுத்து விடும். பின்னர் ஒவ்வொரு முறையும் நமது விதிகளை மீற தூண்டப்படுவோம்.

எடுத்துக்காட்டாக ஒரு வர்த்தகத்தில் இருக்கிறீர்கள். நல்ல லாபகரமாக சென்று கொண்டிருக்கிறது. இப்பொழுது உங்களது மனத்தில் வெளியேறி விடலாம் என்ற எண்ணம் உதயமாகிறது, உங்களது திட்டம் எந்த விதமான வெளியேறும் சமிக்ஞனையும் காட்டாத பொழுதிலும். நீங்களும் நல்ல லாபத்தில் வெளியேறி விடுகிறீர்கள். நீங்கள் வெளியேறிய பின்னர், அந்த வர்த்தகம் நட்டத்தில் முடிவடைகிறது.

இப்பொழுது நமது திறமையை மெச்சிக்கொள்ள கூடாது. ஏனென்றால், ஒரு வர்த்தக திட்டத்தை, ஒரு வர்த்தகத்தின் முடிவை வைத்து மதிப்பிடுவது பெரும் தவறு. இனி ஒவ்வொரு முறையும் நம் திட்ட வீதிகளை மீறி வர்த்தகம் செய்ய தூண்டும். இதனால் தான் நமது வர்த்தக திட்டத்தை மீறுவதன் மூலம் வரும் நட்டத்தை விட லாபம் அபாயகரமானது.

ஒரு வர்த்தக திட்டத்தை மீறுவதன் மூலம் நீங்கள் எவ்வளவு லாபம் வேண்டுமானாலும் ஈட்டலாம். ஆனால் உங்களது மூலதனத்தை துடைத்தெறிய 1 வர்த்தகமே போதுமானது. விதிகளை மீறுவதன் மூலம் அந்த ஒரு வர்த்தகத்தை நாம் இன்றோ, நாளையோ நிச்சயம் சந்திக்க நேரிடும்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

உங்களது நட்டத்திற்கு மிக முக்கிய காரணம், அதிக வர்த்தகங்களை எடுப்பது தான். சந்தை பல்வேறு கட்டங்களை கடந்து செல்கிறது. சில சமயம் ட்ரெண்டிங்காக இருக்கும், பல சமயம் மந்தமாக இருக்கும், சில நேரங்களில் முரட்டு தனமான நகர்வுகளையும் கொண்டிருக்கும். உங்களது நட்ட வர்த்தகங்களை எடுத்து ஆய்வு செய்து பாருங்கள் — சந்தை எப்பொழுது மந்தமாக இருந்ததோ அந்த சமயங்களில் நட்ட வர்த்தகமும் அதிகமாக இருக்கும்.

தொடர்ச்சியாக 3–4 ஸ்டாப்-லாஸ் வரும் பொழுது, பெரும்பாலான வர்த்தகர்கள், சந்தை தங்களுடைய ஏதோ ஒன்றை பறித்து கொண்டது போலவும், தங்களுக்கு எதிரி போலவும் பாவிக்க தொடங்கி விடுகிறர்கள். இன்றைக்கு சந்தையை ஒரு கை பார்த்து விடுகிறேன் என்ற மன நிலைக்கு போய் விடுகிறார்கள்.

இந்த மன நிலைக்கு வந்த பின்னர் தங்களது கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றனர். அதன் பின்னர் தேவை இல்லாத பல வர்த்தகங்களை எடுத்து நமது மூலதனத்தில் பெரும் ஓட்டை விழுவதற்கு நாமே காரணமாகி விடுவோம். முதலில் இந்த நிலைக்கு நாம் வந்து விட்டோம் என்ற விழிப்புணர்வு வரவேண்டும். அந்த விழிப்புணர்வு வந்து விட்டாலே, நாம் மேலும் தேவை இல்லாத வர்த்தகங்களை எடுப்பதை தவிர்த்து விடலாம்.

சக்கர வியூகம்

அபிமன்யு எப்படி சக்கர வியூகத்திற்குள் நுழைந்து விட்டு அதிலிருந்து வெளிவரும் யுக்தியை அறிந்திருக்கவில்லையோ, அதே பிரச்சனை இங்கு பல வர்தகர்களுக்கும் உண்டு.

பலரும் சரியான இடத்தில் தான் வர்த்தகம் எடுப்பார்கள். ஆனால் அந்த வர்த்தகத்தை எந்த இடத்தில் வெளியேற வேண்டுமென்ற படிப்பினை இருக்காது. இதற்கு காரணம், ஒரு வர்த்தகரின் ஆரம்ப காலங்களில் அவரின் கவனம் முழுவதும் நுழைவதை பற்றியே இருக்கும். இதன் காரணமாக வர்த்தகத்தின் மிக முக்கியமான பகுதி எங்கே வெளியேற வேண்டுமென்பதில் கோட்டை விட்டு விடுகிறார்கள்.

ஒரு வர்த்தகத்தில் நுழையும் பொழுது, இந்த வர்த்தகம் எனக்கு எதிராக நகர்ந்தாள் எங்கே வெளியேற வேண்டும். நான் நினைத்தவாறு நகர்ந்தாள் எங்கு வெளியேற வேண்டுமென்பதை தெரிந்திருக்க வேண்டும்.

இங்கு பெரும்பாலானோர் வர்த்தகத்தை எடுத்து விட்டு, பின்னர் எங்கு வெளிவரலாம் என்று யோசிக்கிறார்கள். இது தான் பிரச்சனை. ஒரு நல்ல சோதனை செய்யப்பட்ட வெளியேறுதல் திட்டம் இல்லையென்றால் குழப்பம் உருவாகும். குழப்பம் உருவான இடத்தில் எதுவுமே சரியாக நடக்காது. இந்த குழப்பத்திற்கு காரணம் ஒரு வெளியேறும் திட்டம் இல்லாதது தான்.


வாட்ஸ் அப்பில் பலம் வந்தது
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...