மொத்தப் பக்கக்காட்சிகள்

Mutual Fund Distributors மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் நலம் காக்கும் சுந்தரம் மியூச்சுவல்..!

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்: விநியோகஸ்தர்களின் உடல் நலனை பரிசோதிக்கும் 'சுந்தரம்  சஞ்சீவனி 2022' மருத்துவ முகாம்..!

 

மும்பை, நவம்பர் 07, 2022: சுந்தரம் மியூச்சுவல் (Sundaram Mutual), அதன் விநியோக பங்காளர்களின் (Distribution Partners) உடல் நலனை பரிசோதிக்கும், சுந்தரம் சஞ்சீவனி 2022 (Sundaram Sanjeevani 2022)  மருத்துவ முகாமை சென்னையில் 2022, அக்டோபர் 25 ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த முதல் முகாமில் 100 க்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் (Mutual Fund Distributors- MFD) பங்கேற்றார்கள். 

இந்த சஞ்சீவனி திட்டம், 'குணப்படுத்துவதை விட வரும்முன் காப்பது சிறந்தது' ('Prevention is better than cure' என்கிற பழமொழிக்கு ஏற்ப செயல்படுகிறது. அதற்கு ஏற்ப தனிநபர் ஒட்டு மொத்த உடல் நிலையை கண்டறிய 29 பரிசோதனைகள் இந்த முகாமில் செய்யப்படுகிறது. இதில், சர்க்கரை பாதிப்பு, இதயக் கோளாறுகள், ரத்த சோகை மற்றும் சில நோயெதிர்ப்பு மண்டலக் கோளாறுகளுக்கான பரிசோதனைகள்  முக்கியமானவையாகும்.

கடந்த ஆண்டு, இந்தியாவின் பல பகுதிகளில் கோவிட் பரவல் கட்டம் 3 கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த போதிலும், 28 நகரங்களில் மொத்தம் 2,166 மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு, சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் அனைத்து  80க்கும் மேற்பட்ட  கிளைகளிலும் இந்த மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முகாம்களை நடத்த நாடு முழுவதும் உள்ள பல மருத்துவ சேவை வழங்கும் நிறுவனங்குகளுடன் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்துள்ளது.


இந்த நிகழ்வின் போது சுந்தரம் மியூச்சுவல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சுனில் சுப்ரமணியம் (Mr. Sunil Subramaniam, Managing Director, Sundaram Mutual) கூறும் போது, "சுந்தரம் மியூச்சுவல் நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரக்கணகான மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் மூலம் முதலீட்டாளர்களுக்கு செல்வம் சேர்க்கும் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. எம்.எஃப்.டிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் நிதி நல்வாழ்வை (Financial WellBeing) மேம்படுத்துவதற்கு நேரத்தையும் முயற்சியையும் செலவிடுகிறார்கள். அவர்கள், பெரும்பாலும் தங்கள் சொந்த உடல் நலனை புறக்கணிப்பதால் உடல் நலம் பாதிக்கப்படுகிறார்கள். எங்கள் சுந்தரம் ஃபைனான்ஸ் குழுமத்தின் (Sundaram Finance Group) முக்கிய மதிப்பு அமைப்பான பணியாளர்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பிலிருந்து இந்தத் திட்டம் உருவாகி உள்ளது. எங்களின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைக்கும் மியூச்சுவல் விநியோகஸ்தரகளை எங்கள் சேவைக் குழுவின் நீட்டிக்கப்பட்ட குழுவாக நாங்கள் பார்க்கிறோம்.  மேலும் இந்தத் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் ஆரோக்கியத்திற்கு முதலிடம் (Health First) கொடுக்க நான் அவர்களை ஊக்குவிக்கிறேன்.." என்றார்.

 

சுந்தரம் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி பற்றி..!


சுந்தரம் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி (Sundaram Asset Management Company), அதன் துணை நிறுவனங்களுடன் இணைந்து நிதி மேலாண்மைத் துறையில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. ஆகஸ்ட் 31, 2022 நிலவரப்படி சுமார் 54,840 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருகிறது.

நாடு முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான தீவிர முதலீட்டாளர்கள் மற்றும் 80க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இந்த பிராண்ட் வலுவான சில்லறை வர்த்தகத்தில் கவனம் செலுத்தி வருகிறது. சுந்தரம் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி 19 பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் (Equity Funds), 10 ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்களுடன் (Fixed-income Funds)  பல்வேறு முதலீட்டாளர்களின் முதலீட்டு விருப்பங்களைப் பூர்த்தி செய்து வருகிறது.

 

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பற்றியும் அதன் முதலீட்டுத் திட்டங்கள் பற்றியும் கூடுதல் விவரங்களை அறிந்துக் கொள்ள  தயவு செய்து பார்வையிடவும். www.sundarammutual.com.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...