மொத்தப் பக்கக்காட்சிகள்

நம் மக்களுக்கு அரிசிச்*சோறு தேவையற்றது;பயனற்றது - பெரியார்

*#பெரியார்உணவகம்!.*#பெரியார் *உணர்வகம்*!! (14-09-2022)

*நம் மக்களுக்கு அரிசிச்*சோறு தேவையற்றது;* *பயனற்றது, மாமிசம் சாப்பிடுவதை விட்டுக் காய்கறிகளை மட்டும் உண்பது நமக்குக் கேடாக வந்த பழக்கமாகும். மாட்டு இறைச்சியை ஒதுக்கியதும் மூடத்தனமாகும்.*
 *வட நாட்டாருக்கு நம்மைவிட உடல் வளர்ச்சி, வலிவு, துணிவு அதிகமாகக் காணப்படுவது அவர்களின் உணவு முறையால்தான்.*
- விடுதலை, 3.7.1964, தந்தை பெரியார்

*நாம் சக்தி* *குறைந்தவர் களாகவும், மன* *உறுதியற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும்* *இருக்கக் காரணம் நமது அரிசி உணவுதான். அரிசி சும்மா மனிதனைச் சாகாமல் வைத்திருக்குமே ஒழிய வலிவு உடையவனாக இருக்க உதவாது. அதில் சத்து இருக்காது. மற்ற காய்கறிகளிலும் அவ்வளவாகச் சத்து அதிகம் இராது.* 

*அரிசியும் காய்கறியும் சோம்பேறியாக ஊரார் உழைப்பை உண்டு வாழக் கூடியவர்களுக்கு வேண்டுமானால் பொருந்துமே ஒழிய உழைப்பாளிக்கு ஏற்ற தல்ல.*

_ விடுதலை,  3.2.1964, தந்தை பெரியார்

*மாமிசம் உண்பது உலகெங்கும் மக்களுக்கு இயல்பாகி விட்டது. ஒரு சிறு கூட்டத்தினரே மாமிசம் உண்பதில்லை. ஆனால் அவர்களே வஞ்சம், கொடுமை மிக்கவரா யுள்ளனர். வாயினால் மட்டும் சீவகாருண்யம் பேசுவது மோசடியே.*

-விடுதலை, 30.5.1968, தந்தை பெரியார்

*மேல்நாட்டார் மன உறுதியுடனும் சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு அவர்களின் உணவு முறைதான் காரணம் ஆகும். நாம் சுத்தச் சோம்பேறிகளாகவும் மன உறுதி யற்றவர்களாகவும் இருக்கக் காரணம் நமது சத்தில்லா உணவு முறைதான் ஆகும்.*

- விடுதலை, 3.2.1964, தந்தை பெரியார்

*நாமும் காய்கறி அரிசி உணவைக் குறைத்துக் கொண்டு மாட்டு மாமிச உணவைத் தாராளமாகச் சாப்பிட வேண்டும். மலிவு விலையில் கிடைக்கப் பெரிய பெரிய மாட்டுப் பண்ணைகள் ஏற்படுத்த வேண்டும். மாடு தின்பது பாவம் அல்ல. அப்படியே பாவம் என்றாலும் கோழி தின்பதில் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் தான் மாடு தின்றாலும் ஆகும். நமது சாமிக்கே மாடு, எருமை, கோழி, பன்றி முதலியன காவு கொடுத்துதானே வருகின்றார்கள்.*

- விடுதலை, 3.2.1964, தந்தை பெரியார்

*காய்கறிகள் சாப்பிடுவதைவிட மாமிசம் சாப்பிடுவது தான் அதிகமான சீவகாருண்யம் என்பதாக உணர்ந்தேன். எப்படி என்றால் உயிர் இருப்பதால் அது சீவனாகின்றது. சீவனை வதைத்துச் சாப்பிடுவது மாமிசமாகின்றது. ஆகவே ஒரு செடியின் தழைகளைக் கிள்ளிப் பிடுங்கும் போதும் அவைகள் படும்பாடு சித்ரவதைக்கு ஒப்பாகிறது என்று போசு சொல்கிறார். எனவே ஒரு சீவனைத் தினம் பல தடவை வதை செய்து அதைத் துன்புறுத்துகிறோம் என்பதை உணர நேரிட்டது. இப்போதும் அதை நினைத்தால் சகிக்க முடியாத துக்கம் வருகிறது. ஆனால் மாமிசம் அப்படியல்ல. ஒரு சீவனைச் சாப்பிடுவதானால் ஒரு தடவைக்கு மேல் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதுவும் நொடியில் முடிந்து போகும். ஆதலால்தான் கிழங்கு, கீரை, காய்கறிகளைவிட மாமிசம் சாப்பிடுவது சீவகாருண்யம் ஆகும்.*

- விடுதலை, 23.2.1969, தந்தை பெரியார்

*இயற்கையின் தத்துவம் எப்படி இருந்தாலும் உற்பத்திப் பொருள்கள் சீவன்கள் எல்லாம் மனிதனுடைய உணவுக்குத்தான் பயன்படுகின்றன. மனிதன் ஒருவனைத் தவிர அனேகமாக எல்லாச் சீவராசிகளும் உணவுக்குத்தான் பயன் படுகின்றன. ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன.*

- விடுதலை,  3.2,1964, தந்தை பெரியார்

*மனிதனுக்குக் கிரமமான உணவு மாமிசம்தான். அதை விட்டுவிட்டுப் பழக்க வழக்கத்தை உத்தேசித்துச் சும்மா அதனை ஒதுக்குகின்றார்கள். இதனால் மக்கள் பலவீனர்களாகத்தான் ஆகின்றார்கள். மக்கள் விவசாயப் பண்ணை வைத்துக் கொண்டு தானியங்களை உற்பத்தி பண்ணுவது போல மாட்டுப் பண்ணைகள் வைத்து நல்ல வண்ணம் வளர்த்துப் பெருக்க வேண்டும். பசுவைப் பாலுக்கு வைத்துக்கொண்டு காளை மாடுகளை உணவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.*

- விடுதலை, 3.2.1964, தந்தை பெரியார்

- நன்றி : *விடுதலை ஞாயிறு மலர் 29 2 20*
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...