மொத்தப் பக்கக்காட்சிகள்

தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் புதிய பங்கு வெளியீடு குறைந்தபட்சம் 28 பங்குகளுக்கு விண்ணப்பம்..!



செய்தி வெளியீடு

தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் லிமிடெட், ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு செப்டம்பர் 05, 2022 அன்று ஆரம்பம்

·        ரூ. 10 முகமதிப்பு கொண்ட சமப் பங்கு ஒன்றின் விலைப்பட்ட ரூ.500 முதல் ரூ. 525  ஆகும்.

 

·        பங்கு வெளியீடு ஆரம்ப தேதி –  திங்கள் கிழமை, செப்டம்பர் 05, 2022 மற்றும் நிறைவு தேதி புதன் கிழமை, செப்டம்பர் 07, 2022

 

·        பங்கு விலை, முக மதிப்பை போல் 50.00 மடங்குகள் முதல் 52.50  மடங்குகள் வரை

 

·        குறைந்தபட்சம் 28 பங்குகளுக்கு ஏலம் கேட்க வேண்டும். அதன் பிறகு 28-ன் மடங்கில் ஏலம் கேட்கலாம்.

 

மும்பை, ஆகஸ்ட் 30, 2022: தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் லிமிடெட் (Tamilnad Mercantile Bank Limited – the "Bank"), ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை (Initial Public Offer - IPO) செப்டம்பர் 05, 2022 அன்று ஆரம்பிக்கிறது. ரூ. 10 முக மதிப்பு கொண்ட மொத்தம் 15,840,000 சம பங்குகள் (the "Offer") புதிய வெளியீடு மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.10 முகமதிப்பு கொண்ட சமப் பங்கு ஒன்றின் விலைப்பட்ட ரூ.500 முதல் ரூ. 525  ஆகும் குறைந்தபட்சம் 28 பங்குகளுக்கு ஏலம் கேட்க வேண்டும். அதன் பிறகு 28-ன் மடங்கில் ஏலம் கேட்கலாம்.

வங்கியின் சொத்துகள், முக்கியமாக வங்கியின் கடன்கள் மற்றும் முதலீட்டு இலாகா ஆகியவற்றின் வளர்ச்சிக்கு தேவைப்படும் வங்கியின் எதிர்கால மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, வங்கியின் அடுக்கு-I மூலதனத்தை (Tier-I capital) அதிகரிக்க இந்தப் பங்கு வெளியீடு மூலமான பணம் பயன்படுத்திக் கொள்ளப்படும். மேலும் இந்திய ரிசர்வ் வங்கியால் அவ்வப்போது பரிந்துரைக்கப்படும் மூலதன தன்னிறைவு விகித ஒழுங்குமுறைத் தேவைகளை பராமரிக்கவும் இந்தத் தொகை பயன்படுத்திக் கொள்ளப்படும்.

கடந்த 1957 ஆம் ஆண்டின், பத்திரங்கள் ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிமுறைகள் (Securities Contracts (Regulation) 19(2)(b)-ன் படி செபி அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருத்தப்பட்ட விதிமுறை 31 ("SCRR"), செபி (Issue of Capital and Disclosure Requirements) விதிமுறைகள் 2018 படி ("SEBI ICDR Regulations") இந்தப் புதிய பங்கு வெளியீடு நடக்கிறது.  செபி ஐ.சி.டி.ஆர் விதிமுறைகள், விதிமுறை 6(1)-ன் கீழ் ,ஏலமுறையில் (Book Building Process) பங்கு விற்பனை நடக்கிறது. நிகரப் பங்கு விற்பனையில்  75%-க்கு மேற்படாமல் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு  ("QIBs", the "QIB Portion"), நிறுவனம் மற்றும் பங்கு விற்பனையாளர்  ஒதுக்க வேண்டும். இதில், 60% விருப்பத்தின் அடிப்படையில் பெரிய முதலீட்டாளர்களுக்கு ("Anchor Investor Portion"), செபி அமைப்பின் ஐ.சி.டி.ஆர் (SEBI ICDR) விதிமுறைகளின்படி ஒதுக்கீடு செய்யப்படும். இதில் மூன்றில் ஒரு பங்கு, பங்குகள் ஆங்கர் முதலீட்டாளர்கள் ஏலம் கேட்டுள்ள விலை அல்லது அதை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில்  அவை உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும், நிகர கியூ.ஐ.பி (Net QIB)  ஒதுக்கீட்டில் 5% பங்குகள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கப்படும். மீதமுள்ள கியூ.ஐ.பி ஒதுக்கீட்டில் உள்ள பங்குகள் விகிதாச்சார அடிப்படையில், செல்லத்தக்க ஏலங்கள் வெளியீட்டு விலையில் அல்லது அதற்கு மேலாக கேட்கப்பட்டிருக்கும்பட்சத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட கியூ.ஐ.பி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். 

அதேநேரத்தில், , மியூச்சுவல் ஃபண்டுகளின் மொத்தத் தேவை நிகர கியூ.ஐ.பி பகுதியின் 5%-க்கும் குறைவாக இருந்தால், மியூச்சுவல் ஃபண்ட் பகுதியில் ஒதுக்கப்படுவதற்குக் கிடைக்கும் மீதியுள்ள பங்குகள், கியூ.ஐ.பிகளுக்கு விகிதாசார ஒதுக்கீட்டிற்காக மீதமுள்ள நிகர கியூ.ஐ.பி பகுதியுடன் சேர்க்கப்படும்.

மேலும், நிறுவனம் அல்லாத ஏலதாரர்களுக்கு ("Non-Institutional Portion") 15% க்கு மேல் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படமாட்டாது. அதில் மூன்றில் ஒரு பங்கு, நிறுவனம் அல்லாத ஒதுக்கீடு ஏலதாரர்களுக்கு விண்ணப்ப அளவுடன் ஒதுக்கீடு செய்யக் கிடைக்கும். ரூ. 200,000க்கு மேல் மற்றும் ரூ. 1,000,000 வரை மற்றும் நிறுவன சாரா பகுதியின் மூன்றில் இரண்டு பங்கு விண்ணப்பத்தின் அளவு ரூ. 1,000,000க்கு மேல் மற்றும் சந்தா குறைவாக உள்ள ஏலதாரர்களுக்கு ஒதுக்கப்படும். -செபி ஐசிடிஆர் விதிமுறைகளுக்கு இணங்க, நிறுவன ஒதுக்கீடு அல்லாத பிற துணைப் பிரிவில் உள்ள ஏலதாரர்களுக்கு வெளியீட்டு விலை அல்லது அதற்கு மேல் பெறப்படும் செல்லுபடியாகும் ஏலங்களுக்கு உட்பட்டு  பங்குகள் ஒதுக்கப்படலாம்.

 மேலும், செபி ஐ.சி.டி.ஆர் விதிமுறைகளுக்கு  உட்பட்டு சிறு தனிநபர் ஏலதாரர்களுக்கு ("Retail Portion") 10% க்கு குறையாமல் ஒதுக்கீடு செய்யப்படும். இது  வெளியீட்டு விலையில் அல்லது அதற்கு மேல் பெறப்பட்ட செல்லுபடியாகும் ஏலங்களுக்கு உட்பட்டது.

அனைத்து தகுதியுள்ள முதலீட்டாளர்களும் (ஆங்கர் முதலீட்டாளர்கள் தவிர) அனைவரும் அஸ்பா  ("ASBA" - Applications Supported by Blocked Amount) முறை மற்றும் யூ.பி.ஐ ஐ.டி (UPI ID) முறையில் பங்குகளுக்கு  விண்ணப்பிக்க வேண்டும். இந்த முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். அதேநேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை வங்கி கணக்கில், சுய சான்றளிக்கப்பட்ட சிண்டிகேட் வங்கிகள் (Self Certified Syndicate Banks -"SCSBs") அல்லது யூ.பி.ஐ சிஸ்டத்தில் முடக்கி  (Blocked) வைக்கப்பட்டிருக்கும். ஆங்கர் முதலீட்டாளர்கள் இந்த அஸ்பா முறையில் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.

சிறு முதலீட்டாளர்கள் மற்றும் NII ஏலதாரர்களுக்கான யூ.பி.ஐ  ஏற்றுக்கொள்ளும் நேரம் ( ரூ. 5,00,000 வரை ஏலம்ஐ.பி.ஓவின் இறுதி நாளில் அதாவது செப்டம்பர் 07, 2022 அன்று மாலை 5:00 மணிக்கு காலாவதியாகும்.

மேலும் விவரங்களுக்கு, ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸ் (Red Herring Prospectus)-ன் பக்கம் 326 இல் தொடங்கும் "பங்கு விற்பனை நடைமுறை"( The Offer Procedure")  என்பதைப் பார்க்கவும்.

இந்தச் சம பங்குகள் பி.எஸ்.இ (BSE) மற்றும்  தேசியப் பங்குச் சந்தை  ஆகிய  இரண்டு பங்குச் சந்தைகளிலும்  பட்டியலிட உத்தேசிக்கப்பட்டுள்ளன. ஆக்ஸிஸ் கேப்பிட்டல் லிமிடெட், மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ் லிமிடெட் மற்றும் எஸ்.பி.ஐ கேப்பிட்டல் மார்கெட்ஸ் லிமிடெட் ஆகியவை இந்தப் பங்கு வெளியீட்டை கவனிக்கும் மேலாளர்களாக (Book Running Lead Managers -"BRLMs") உள்ளனர்

Disclaimer:

TAMILNAD MERCANTILE BANK LIMITED is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to make an initial public offering of its Equity Shares and has filed the Red Herring Prospectus, with the Registrar of Companies, Tamil Nadu at Chennai on August 26, 2022 read with the addendum to the Red Herring Prospectus: Notice to Investors dated August 29, 2022 ("RHP").The RHP shall be available on the website of SEBI at www.sebi.gov.in, websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com, respectively, and is available on the websites of the BRLMs, i.e. Axis Capital Limited, Motilal Oswal Investment Advisors Limited and SBI Capital Markets Limited at www.axiscapital.co.in, www.motilaloswalgroup.com and www.sbicaps.com, respectively. Investors should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risk, please see the section entitled "Risk Factors" beginningon page 20 of the RHP. Potential investors should not rely on the draft red herring prospectus or the RHPfiled with SEBI for making any investment decision.

The Equity Shares offered in the Offerhave not been and will not be registered under the U.S. Securities Act of 1933 (the "U.S. Securities Act") or any state securities laws in the United States, and unless so registered, and may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of theU.S. Securities Act and in accordance with any applicable U.S. state securities laws. Accordingly, the Equity Shares are being offered and sold outside the United States in 'offshore transactions' in reliance on Regulation S under the U.S. Securities Actand the applicable laws of jurisdictions where such offers and sales are made.

 

 

For more information:

Adfactors PR

Nikhil Mansukhani - 9833552171 / nikhil.mansukhani@adfactorspr.com

Sagar Sawant - 7303975422 / sagar.sawant@adfactorspr.com

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

ஜாக்கிரதை டிஜிட்டல் கைது

MINISTRY OF HOME AFFAIRS IC Indian Cybor Orme Coordination Contre ஜாக்கிரதை டிஜிட்டல் கைது இது எப்படி நடக்கிறது? மோசடி செய்பவர்கள், உங்கள் ப...