மொத்தப் பக்கக்காட்சிகள்

திரு. சைலேந்திரபாபு முகநூல் பதிவு பெற்றோர்களின் கவனத்திற்கு Parenting

தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் 
திரு. சைலேந்திரபாபு அவர்களின் முகநூல் பதிவு.

பெருமைக்கு உரிய பெற்றோர்களே,

ஒரு நிமிடம் ஒதுக்கி இதைப் படியுங்கள்.

தலைமுறை இடைவெளியில்,
உங்கள் காலத்து நடைமுறைகளை மனதில் வைத்துக் கொண்டு, 
உங்கள் குழந்தைகளை அணுக வேண்டாம்.

காரணம்,
மிக வேகமாக இயங்குகின்ற உலகத்தில்,
உங்கள் பிள்ளைகள் ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

உங்கள் பொறுமை, அறிவு ஆற்றலை விட, 
அவர்கள் அறிவும், செயல்வேகமும் மிக்கவர்கள்.

கணினி உலகின் மொத்தத் தாக்குதல்களுக்கும்,
உங்கள் பிள்ளைகள் ஆளாகி இருக்கின்றார்கள்.

நீங்கள் பதிநான்காம் வயதில், ஊருக்கு ஒதுக்குப்புறத் திரை அரங்குகளில், 
அரைகுறையாகப் பார்த்த பாலியல் படங்களை,
உங்கள் மகனோ  மகளோ,
உங்கள் வீட்டுக்கு உள்ளே, துல்லியமாகவும் தெளிவாகவும்
பார்க்கின்ற காலம் இது.

அந்த வகையான வெப்சைட்டுகளுக்கு 
அவர்கள் தேடிப்போவது இல்லை.
இன்னபிற தளங்களுக்குச் செல்கையில்,
போர்ன்சைட் உடல்உறவுத் தளங்கள் குறித்த விளம்பரங்களை அள்ளித் தெளிக்கின்றது 
இணைய உலகம்.

அதை ஒதுக்கி விட்டுப் போன பிள்ளைகளை விட, 
அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலில்,
அதற்கு உள்ளே மூழ்கிப்போன பிஞ்சுகளே அதிகம்.

நீங்கள் கள்ளிச்செடிகளில் பெயர் எழுதிய அதே பள்ளிப் பருவத்தில், இவர்கள் கள்ளிச் செடிகளுக்குள் காமம் எழுதுகின்றார்கள்.

ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கும் மாணவிக்கும், குறைந்தது ஐந்து காதல் நிறுத்தங்கள்
அல்லது மூன்று காதல் முறிவுகள் இருக்கின்றன.

நீங்கள் கூட்டிச் செல்லாத,
ஆள் ஆரவாரம் இல்லாத உள்ளூர் மறைவு இடங்கள் 
உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிந்து இருக்கின்றன.

பெண் குழந்தைகளும் தற்போது  மதுவின் வாசனை பழகி இருக்கின்றார்கள்.

என் பிள்ளையிடமோ, என்னிடமோ ஆன்ட்ராய்டு போன் இல்லையே என நிம்மதி கொள்ளாதீர்கள்.
தோழன் தோழிகளால் உங்கள் பிள்ளைகளுக்குப் பாதிப்பு அதிகம்.

ஒரு எட்டாம் வகுப்பு மாணவி 
ஐந்து வேறுவேறு ஆண்களுடன் பேசுகிறாள்...
கடைசியாக அப்பாவுக்குத் தொடர்பு கொண்டு,
இன்று ஸ்பெசல் கிளாஸ்...வீட்டுக்கு வர நேரம் ஆகும் அப்பா என்கிறாள்.

முன்பு பொம்மைகளால் நிரம்பிக் கிடந்த குழந்தைகள் உலகம், இப்போது பொய்மைகளால் நிரம்பிக் கிடக்கின்றது.

உங்கள் குழந்தைகளின் நண்பர்களை,
அவ்வப்போது அழைத்துப் பேசி 
அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முனையுங்கள்.

உங்கள் குழந்தைகளுடன் 
நட்பு உறவில் இருங்கள்.
முடிந்தால் நல்ல தோழனாகவும் தோழியாகவும் இருங்கள்.

காலையில் தவிர்க்க முடியாத வேலை  இருந்தாலும், 
மாலையில் கண்டிப்பாக பள்ளிக்கூடம் சென்று உங்கள் பிள்ளைகளை அழைத்து வாருங்கள்.

மாதம் ஒருமுறையாவது 
உங்கள் குழந்தைகளின் வகுப்பு ஆசிரியரை நேரில் சந்தித்துப் பேசுங்கள். 
அவர்களுடைய நடத்தை மாற்றம் பற்றிக் கேட்டு அறியுங்கள். 
ஏனெனில், உங்களை விட , அவர்களுடன்தான் குழந்தைகள் கூடுதல் நேரத்தைக் கழிக்கின்றார்கள்.

இன்னொரு பக்கம், சைக்கோத்தனமான காதல், 
போதை ஆசாமிகளின் ஹீரோயிச பாதிப்பு, வயதான கிழவர்களின்  பிடிகளில் வலியச்சென்று வலிமை அனுபவிக்கின்றன சில குழந்தைகள்.

இதெல்லாம் மேற்கு நாடுகளில் இயல்புதான் என்போர்,
வழக்கம் போல எந்தக் கவலையும் இல்லாமல்,
உங்கள் பணிகளில் மூழ்கிப் போகலாம்..

டிக்கெட்டில், ரூபாய் நோட்டில் அலைபேசி எண் எழுதிப் போடுவது,
தோழியின் அண்ணன்..அவனோட நண்பன் என்று தொடர்கதையாக நீளுகின்றது இந்தப் பட்டியல்.

மலரில் தேன் எடுக்கும் வண்டுகளைப் போல,
இளைஞர்கள் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி விட்டு காணாமல் போகின்றார்கள்.

அடுத்த இரண்டு நாள்கள் அழுது முடித்து,
அடுத்த காதலுக்குக் கிளம்பி விடுகிறார்கள் பட்டாம்பூச்சிகள்.
   
ரோஜாச் செடிகள், வேலிக்குள் இருக்கும் மட்டும்தான் பாதுகாப்பாகவும் அழகாகவும் இருக்க முடியும்.
வேலி தாண்டினால்,
அதைப் பிடுங்கி நுகர்ந்து பாத்து கசக்கி எறியும் கைகளும், முழுச்செடியையும் மேய்ந்து தின்னும் ஆடுகளும் தெருவுக்கு நூறு இருக்கின்றன.

குடும்ப மானம், பிள்ளைகளின் வருங்காலம் குறித்துக் கனவு காண்பவர்கள், 
பிள்ளைகளைக் கண்காணியுங்கள்

உங்கள் மகள்களை 
ரோஜாக்களாக, கசங்காமல் பாதுகாத்திடுங்கள்.

மகன்களை 
சிங்கமாக விலங்குகள் போல வளர்க்காமல்,
நல்ல மனிதனாக  வளர்த்திடுங்கள்.

சைலேந்திர பாபு.

(கண்ணில் பட்ட பதிவில் இருந்த,
ஆங்கிலம், வடமொழிச் சொற்களைக் களைந்து, திருத்தங்களுடன், ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் தனித்தனியாக முழுமையாக
எளிய நடையில் எழுதி இருக்கின்றேன்)

பதிவு
அருணகிரி
27.07.2022
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...