மொத்தப் பக்கக்காட்சிகள்

ஒரு புளிய மரத்தின் கதை Book

ஒரு புளிய மரத்தின் கதை
***** ***** ***** ***** *****
பஜாரின் தெற்கேயிருந்து ஒரு வாத்தியாரம்மா தோன்றி வடக்கே போவதை எண்ணற்ற நாட்கள் பாத்திருக்கேன். அவளுடைய நடையழகு என்னை வெகுவாக கவர்ந்தது...!

மனதில் பதிந்துவிட்ட அவளின் உருவமே இந்நாவலின் செல்லத்தாயின் உருவாக பதியவிட்டிருக்கிறேன் என்கிறார் சுந்தர ராமசாமி.

நாவலாசிரியர் நாகர்கோவில் பிராமண குடும்பத்தில் 1931-ஆம் ஆண்டு பிறந்து 2005-ஆம் ஆண்டு மறைந்தவர்.

தாமோதர ஆசான் எனும் கிழவன்தான் ஆரம்பத்தில் கதையைத் தாங்கிப்பிடித்து நகர்த்துகிறார். நாவலாசிரியர் சுந்தர ராமசாமி கல்லூரியில் படிக்கும்போது ஆசான் 80-வயதை நெருங்கியவர். ஆக தனக்கு முன்பே வாழ்ந்த இரண்டு,மூன்று தலைமுறை மக்கள் வாழ்வியலையும்,வரலாற்றையும் தாமோதர ஆசானிடம் கதை கேட்டே கறந்திருக்கிறார் சுந்தர ராமசாமி.

குளத்தின் நடுவில் இருக்கும் சிறு தீவில் நிற்கும் புளியமரம் மாடுமேய்க்கும் சிறுவர்களின் ஓய்விடம்...!

அந்த குளம் நிரப்பப்பட்டு, தீவைச் சுற்றி சாலை வந்து, பின் பஜாராகிய பின்னரும் அழியாமல் அங்கேயே நிற்கும் புளியமரம் மனிதர்களின் பல்வேறு இன்னல்களுக்கு எப்படி தப்புகிறது எனவும் அதன் வீழ்ச்சியுமே கதை.

அழகான செல்லத்தாயி புளியமரத்தில் தூக்கிட்டு சாகிறாள்..., வெப்பிராளத்தில் அவள் மாமன்மகன் கொப்ளான் மரத்தை வெட்ட கோடாலியோடு வர, தாமோதர ஆசான் அவனை ஆசுவாசப்படுத்தி நைசாக பேசி செல்லத்தாயி தொங்கிய கிளையை மட்டும் வெட்டவைத்து மரத்தை காப்பாற்றுகிறார்.

திருவிதாங்கூர் மகாராஜாவின் கன்னியாகுமரி பயணத்தின்போது துர்நாற்றம் வீசிய குளம் இரண்டு நாளில் நிரப்பப்பட்டு வடசேரி முதல் கோட்டாறு வரை புதிய சாலை அமைக்கப்பட... குளத்தின் நடுவில் நின்ற மரம் சாலையின் ஓரத்திற்கு வருகிறது.

மன்னராட்சி முடிந்து மக்களாட்சி வந்தபோது, எதிரே கிடந்த சவுக்குத்தோப்பு நகராட்சி பூங்காவாகிறது. புளியமரத்தைச்சுற்றி கடைகள் முளைத்து பஜாராகிறது. பேருந்து போக்குவரத்து துவங்கியபோது நாகர்கோவிலின் முதல் பஸ்நிலையமாகவும் மாறுகிறது.

தற்போது செல்போன் இணையத்தில் அடிமையாகிக்கிடக்கும் இளைஞர்களைப்போல, 1960-களில் வெளிவரத்துவங்கிய தினசரி பத்திரிகைகளில் லயித்துக்கிடந்த இளைஞர்கள் பேசப்படுகிறார்கள்.(பக்.75&76)

பாதியிலிருந்து கதை புளியமர ஜங்சன் வியாபாரிகளோடு மல்லுக்கட்டி நகர்கிறது. தக்கலை அப்துல் காதர் வழியாக கோபால அய்யரிடம் நுழைகிறது. பின்னிணைப்பாக தாமு கதாபாத்திரம்.

தாமு கைது செய்யப்படும்போது 'வெற்றிலைப்பாக்கு வியாபாரிகள் சங்கம்' போராட்டம் நடத்துவது அக்காலத்தில் அந்த வியாபாரத்தின் வலிமையைக் காட்டுகிறது.

நாகர்கோவிலுக்கு புதிதாக வரும் சிகரெட் கம்பெனி, திருவிதாங்கூர் நேசன் எனும் உள்ளூர் பத்திரிகை. அதன் நிருபர் இசக்கி என நகரும் கதை, தாமு-காதர் வியாபார மோதலில் இறுதி நிலையை எட்டுகிறது.

புளியமரம் திடீரென தெய்வமாக்கப்படுகிறது.

மரத்துக்கு விஷம் வைத்த கூலி ஐயப்பன் மரத்தடியில் கொல்லப்படுகிறான்.

தாமு-காதர் மோதல் மற்றும் கைது பிரச்சினைகளின் ஊடாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் யாரும் எதிர்பாராமல் கடலை தாத்தா வெல்கிறார்.

1966-ல் சுந்தர ராமசாமி எழுதிய புதினம்.

1996-ல் வெளிவந்த 5-ஆம் பதிப்பின் முன்னுரையில் சுந்தர ராமசாமி எழுதும்போது நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் 1996-ஆம் ஆண்டு துவக்கத்தில் நடந்த (காமராஜர் சிலை சம்பந்தப்பட்ட) கலவரத்தை நினைவு கூருகிறார்.
"புளியமரம் என்பது எங்கள் ஊரில் நிற்கும் வேப்பமரம்" எனவும் கூறுகிறார்.

கதையோடான கற்பனை நாகர்கோவில் வேப்பமூடு ஜங்சனின் பழைய வரலாற்றை ஞாபகப்படுத்துகிறது.
அந்த வேப்பமரம்(புளியமரம்) மட்டும் நூறாண்டுகளைக் கடந்து பல வரலாற்றுகளை விழுங்கி சில தலைமுறைகளையும் அசாத்தியமாக கடந்து இன்னமும் நிற்கிறது அழியாமல்,   சுந்தர ராமசாமியின் புகழைப்போல...
***** ***** ***** ***** *****
லியோ,திருவரம்பு... 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...