மொத்தப் பக்கக்காட்சிகள்

அதிக உத்தரவாத வருமானம் : ஏபிஎஸ்எல்ஐ கேரண்டீட் மைல்ஸ்டோன் பிளான்


அதிக உத்தரவாத வருமானம் அளிக்கும்
ஏபிஎஸ்எல்ஐ கேரண்டீட் மைல்ஸ்டோன் பிளான்,
ஆதித்ய பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ் அறிமுகம்

~ அதிக வருமானம் அளிக்கும் பிரத்யேக இணை ஆயுள் பலன் திட்டம்  ~

மும்பை, நவம்பர் 12, 2018: ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனத்தின் (Aditya Birla Capital Limited - ABCL) ஆயுள் காப்பீடு பிரிவு, ஆதித்ய பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ் (Aditya Birla Sun Life Insurance  -ABSLI).  இது ஒரு குறிப்பிடத்தக்க வங்கிசாரா நிதிச் சேவை நிறுவனம் ஆகும். 

இந்த நிறுவனம், அதன் ஏபிஎஸ்எல்ஐ கேரண்டீட் மைல்ஸ்டோன் பிளான் (ABSLI Guaranteed Milestone Plan) மூலம் அதிக உத்தரவாத வருமானம் அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் அதிக வருமானம் பெற முடியும்.  

இந்தத் திட்டம் இப்போது அதிகரிக்கப்பட்ட உத்தரவாத கூடுதல் பலன்களுடன் வந்துள்ளது. அது ஆண்டுக்கு ஆண்டு தொகுப்பு நிதியை (corpus) அதிகரிப்பதோடு இறப்புக்கு எதிராக முழுமையான உத்தரவாதம் அளிக்கிறது.  

ஏபிஎஸ்எல்ஐ கேரண்டீட் மைல்ஸ்டோன் பிளான், வாழ்க்கையின் முக்கியமான இலக்குகளின் ஏற்ற இறக்கத்தை பாதுகாக்கும் மற்றும் எதிர்பாராத பொருளாதார சிக்கலை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டது. இந்தத் திட்டம், இறப்பு மற்றும் முதிர்வில் உத்தரவாத வருமானத்தை அளிக்கிறது. மற்றும் வாடிக்கையாளரின் பிரத்யேக சேமிப்பு தேவைகளை ஈடுசெய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

மறுமுதலீட்டு இடர்பாடு (reinvestment risk) இல்லாமல் முதலீட்டு வாய்ப்புகளை (investment options) அளிக்கிறது.

       திட்டம் ஒரு கண்ணோட்டம்
நுழைவு வயது  (வயது கடைசி பிறந்த நாள்படி)
30  நாள்கள்    60 ஆண்டுகள்
பாலிசி காலம்
12, 14, 16, 18, 20, 22, 24 & 26 ஆண்டுகள்
பிரீமியம் கட்டும் ஆண்டுகள்

·    12/14 ஆண்டு பாலிசிகளுக்கு 6 ஆண்டுகள்
·    16/18 ஆண்டு பாலிசிகளுக்கு 8 ஆண்டுகள்
·    20/22 ஆண்டு பாலிசிகளுக்கு 10 ஆண்டுகள்
·    24/26 ஆண்டு பாலிசிகளுக்கு 12 ஆண்டுகள்
அதிகபட்ச முதிர்வு வயது
18  ஆண்டுகள்
குறைந்தபட்ச பிரீமியம்
ரூ. 15,000
காப்பீடு தொகை (Sum Assured)
15 X ஆண்டு பிரீமியம்
 குறைந்தபட்ச காப்பீடு தொகை     
Rs. 2,25,000
 பிரீமியம் கட்டும் காலம்

ஆண்டுக்கு ஒரு முறை, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதம்  

ஆதித்ய பிர்லா சன் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பங்கஜ் ரஸ்தன் (Pankaj Razdan, MD & CEO, Aditya Birla Sun Life Insurance and Dy. CE, Aditya Birla Capital) கூறும் போதுகச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம், ரூபாய் மதிப்பு குறைவு மற்றும் வாழ்க்கையில் நிலையற்ற தன்மை அதிகரிப்பு போன்றவை இலக்குகளுக்கு திட்டமிடும் போது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில், உத்தரவாத வருமானம் அளிக்கும் நிதித் திட்டங்களை நாங்கள் அளித்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக எங்களின் ஏற்கெனவே உள்ள திட்டமான ஏபிஎஸ்எல்ஐ கேரண்டீட் மைல்ஸ்டோன் பிளான்-ல் புதிய சலுகைகளை அளிக்கிறோம். அதாவது, ஏற்ற காலங்களில் உத்தரவாத.வருமானத்தை மேம்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நிதித் தேவைகள் மற்றும் இலக்குகளை பாதுகாப்பானதாக மாற்றி இருக்கிறோம். இதன் மூலம் அவர்கள் மன நிம்மதி மற்றும் சிக்கல் இல்லாத வாழ்க்கையை மேற்கொள்ள முடியும்.

ஏபிஎஸ்எல்ஐ கேரண்டீட் மைல்ஸ்டோன் பிளான் (ABSLI Guaranteed Milestone Plan)  கீழ்க்கண்ட முக்கிய பலன்களை அளிக்கிறது.

·   வாழ்க்கையின் முக்கிய இலக்குகளை பாதுகாக்க உத்தரவாத வருமானத்தை அளிக்கிறது.

·   இறப்பு மற்றும் முதிர்வின் மீது முழு உத்தரவாத பலன்களை அளிக்கிறது. 

·   ஆண்டுக்கு ஆண்டு உத்தரவாத கூடுதல் பலன்களை அதிகரித்து தொகுப்பு நிதியை மேம்படுத்துகிறது.  

·   நெகிழ்வு காப்பீட்டை (Flexibility to cover) துணைவருக்கு (கணவன்/மனைவி) அளிக்கிறது. இணை ஆயுள் காப்பீடு பாதுகாப்பை தேர்வு செய்யும் வசதி.  

·   வாடிக்கையாளரின் வசதிக்கு ஏற்ப பாலிசி காலம் மற்றும் பிரீமியம் கட்டும் காலத்தை தேர்வு செய்யும் வசதி.

·   நடுத்தர காலம் முதல் நீன்ட காலம் வரையிலான உத்தரவாத வருமானத்துடன் மறுமுதலீட்டு இடர்பாடு இல்லாமல் குறுகிய கால முதலீட்டு வாய்ப்புகளை (investment options) அதாவது குறுகிய காலத்துக்கு மட்டும் பிரீமியம் கட்டும் வாய்ப்பு உள்ளது.

·   சரியான துணை பாலிசி விருப்பங்கள் (rider options) மூலம் ஆயுள் காப்பீடு அளவை அதிகரித்து கொள்ளும் வசதி.


இந்தத் திட்டம் ஏற்கெனவே, ஆயுள் காப்பீடு துறையிலேயே முதன் முறையாக இணை ஆயுள் காப்பீடு பாதுகாப்பு விருப்பத்தை தேர்வு செய்வது மூலம் துணைவருக்கு (கணவன்/மனைவி)க்கு பிரத்யேக ஆயுள் காப்பீடு பலனை அளித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் இறப்பு பலன் மற்றும் முதிர்வு தொகையை இருவருக்கும் அளிக்கிறது. துணை பாலிசி விருப்பங்களை சேர்ப்பது மூலம் இந்த பாலிசி மேலும் வலிமையானதாக மாற்றப்பட்டிருக்கிறது.

பாலிசிதாரர் மற்றும் அவரின் துணைவருக்கு உத்தரவாத சேமிப்பு பலன்களை அளிக்கும் அதேநேரத்தில் வாடிக்கையாளரின் வசதிக்கு ஏற்ப பிரீமியம் கட்டும் காலத்தை தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கிறது. மேலும், கூடுதல் பிரீமியம் கட்டுவது மூலம் துணை பாலிசிகள் மூலம் ஆயுள் காப்பீடு அளவை அதிகரித்து கொள்ள முடியும்.  

ஆதித்ய பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஏபிஎஸ்எல்ஐ கேரண்டீட் மைல்ஸ்டோன் பிளான் அனைவருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது; இது ஒருவரின் முதலீடு மற்றும் சேமிப்பை பாதுகாப்பதோடு வாழ்க்கை இலக்கை அடையும் நோக்கத்துக்கு உதவுகிறது. இதர வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் நாட்டில் நிதி பாதுகாப்பில் அதிக இடைவெளி இருக்கிறது. எனவே, ஏபிஎஸ்எல்ஐ தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இந்தியச் சந்தையில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களின் எண்ணிகையை அதிகரிக்க உள்ளது. மேலும், இந்தத் தீர்வுகள் மூலம் பாலிசிதார்கள் செல்வம் சேர்க்க உதவுகிறது.  


ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆதித்ய பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ் பற்றி

ஆதித்ய பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் (Aditya Birla Sun Life Insurance Company Limited - ABSLI),  ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனத்தின் (Aditya Birla Capital Ltd  -ABCL) துணை நிறுவனமாக உள்ளது. ஏபிஎஸ்எல்ஐ 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது 2001 ஜனவரி 17 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. ஏபிஎஸ்எல்ஐ ஆதித்ய பிர்லா குழுமம் மற்றும் கனடாவை சேர்ந்த முன்னணி சர்வதேச நிதிச் சேவைகள் அமைப்பான சன் லைஃப் ஃபைனான்ஷியல் இன்கார்ப்பரேஷன் (Aditya Birla Group and Sun Life Financial Inc.) -ன் 51:49 கூட்டு நிறுவனமாகும்.

இதற்கு முன் இதன் பெயர், பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (Birla Sun Life Insurance Company Limited) என இருந்தது. ஏபிஎஸ்எல்ஐ, இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீடு நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இது வாடிக்கையாளரின் வாழ்க்கை முறை, பிள்ளைகளின் எதிர்கால திட்டங்கள், செல்வம் பாதுகாப்பு திட்டங்கள், பாரம்பரிய குறித்த கால திட்டங்கள், பங்குச் சந்தையுடன் இணைந்த காப்பீடு திட்டங்களை (children future plans, wealth protection plans, retirement and pension solutions, health plans, traditional term plans and Unit Linked Insurance Plans -ULIPs) கொண்டுள்ளது.

2018 ஜூன் நிலவரப்படி, ஏபிஎஸ்எல்ஐ நிர்வகிக்கும் மொத்த தொகை ரூ. 375,820 மில்லியனாக உள்ளது. (ஆதாரம்: லைஃப் இன்ஷூரன்ஸ் கவுன்சில்). 2018-19 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஏபிஎஸ்எல்ஐ-ன் மொத்த பிரீமிய வருமானம் சாதனை அளவாக ரூ.12,673 மில்லியனாக உள்ளது. மேலும் தனிநபர் முதல் ஆண்டு பிரீமியம் 46% வளர்ச்சி கண்டுள்ளது. இதே கால கட்டத்தில் நிகர லாபம் ரூ. 248 மில்லியனாக உள்ளது.

ஏபிஎஸ்எல்ஐ-க்கு நாடு முழுக்க பரந்து விரிந்த விநியோக வசதி இருக்கிறது. 433 கிளைகள், 9 வங்கி பங்குதாரர்கள், 6 விநியோக சேனல்கள் மற்றும் 80,000-க்கும் மேற்பட்ட நேரடி விற்பனை ஏஜென்ட்கள், இதர கார்ப்பரேட் ஏஜென்ட்கள், புரோக்கர்கள் மற்றும் இணைய தளம் மூலம் திட்டங்களை வியோகித்து வருகிறது. இந்த நிறுவனம் 8,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டுள்ளது. இதற்கு 16 லட்சத்துக்கும் மேற்பட்ட துடிப்பான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

ஹோல்டிங் நிறுவனமான (holding company) ஏபிசிஎல், சர்வதேச அளவில் நிதிச் சேவைகளை அளிக்கும் நிறுவனம். இது இந்தியாவின் மிகப் பெரிய நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இது சிறு வாடிக்கையாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனைத்து நிதித் தேவைகளுக்கான சேவையை அளிக்க உறுதி பூண்டுள்ளது. இதன் ஒருங்கிணந்த பிராண்ட் ஆன – ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் மூலம் இந்தச் சேவையை அளித்து வருகிறது.

இந்த நிறுவனம், பலதரப்பட்ட பணத் தீர்வுகளை பாதுகாப்பு,, முதலீடு போன்ற பிரிவுகளில் அளித்து வருகிறது. ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நாடு முழுக்க லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது. ஆயுள் காப்பீடு தவிர, இந்தக் குழுமம் பல்வேறு வணிகப் பிரிவுகளில் குறிப்பாக வங்கிச் சாரா நிதிச் சேவை, சொத்து மேலாண்மை, ஆரோக்கிய காப்பீடு, வீட்டு வசதிக் கடன், தனிப்பட்ட பங்கு முதலீடு, பொதுக் காப்பீடு தரகு, செல்வ மேலாண்மை, பங்கு தரகு, ஆன்லைன் தனிநபர் நிதி மேலாண்மை மற்றும் ஓய்வூதிய நிதி மேலாண்மை (NBFC, asset management, health insurance, housing finance, private equity, general insurance broking, wealth management, broking, online personal finance management and pension fund management)  போன்ற சேவைகளை அளித்து வருகிறது.



சன் லைஃப் ஃபைனான்ஷியல் இன்கார்ப்பரேஷன், கனடா பற்றி
சன் லைஃப் ஃபைனான்ஷியல் (Sun Life Financial), கனடாவில் கடந்த 1865 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது பல தலைமுறையாக நம்பிக்கையான நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. 152 ஆண்டுகளாக இயங்கி வருவது இதன் சிறப்பாகும். சன் லைஃப் ஃபைனான்ஷியல், சர்வதேச அளவில் நிதிச் சேவைகள் அளித்து வரும் அமைப்பாகும். இது, பல தரப்பட்ட பாதுகாப்பு மற்றும் செல்வம் சேர்க்கும் திட்டங்களை தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது.

சன் லைஃப் ஃபைனான்ஷியல் மற்றும் அதன் பங்குதாரர்கள் உலக அளவில் பல நாடுகளில் இயங்கி வருகிறார்கள். குறிப்பாக, கனடா, ஐக்கிய அமெரிக்க நாடுகள். இங்கிலாந்து, அயர்லாந்து, ஹாங் காங், பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோனேசியா, இந்தியா, சீனா, ஆஸ்திரேலியே, சிங்கப்பூர் வியட்நாம், மலேசியா, மற்றும் பர்முடா போன்ற நாடுகளில் இயங்கி வருகின்றார்கள். 2017 டிசம்பர் 31 நிலவரப்படி, சன் லைஃப் ஃபைனான்ஷியல் குழும நிறுவனங்கள் மொத்தம் $ 903 பில்லியன் நிர்வகித்து வருகின்றன.

சன் லைஃப் ஃபைனான்ஷியல் இன்கார்ப்பரேஷன் –ன் பங்குகள் எஸ் எல் எஃப் (SLF) என்கிற குறியீட்டில் டொராண்டோ (Toronto -TSX), நியார்க் (New York -NYSE)  மற்றும் பிலிப்பைன் (Philippine -PSE) பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகி வருகிறது.

For more details, please contact ,


Mr. Krishna Bajaria – krishna.bajaria@adfactorspr.com| 9619302153

                                                                  ******************************


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...