மொத்தப் பக்கக்காட்சிகள்

டிரான்ஸ்யூனியன் சிபில் ஆய்வு முடிவு: அதிக இடர்பாடு கொண்ட கடன்கள் இரு காலாண்டுகளாக குறைந்து வருகிறது.!.



டிரான்ஸ்யூனியன்  சிபில் ஆய்வு முடிவு: அதிக இடர்பாடு கொண்ட மற்றும் அழுத்தப்பட்ட கடன்கள் தொடர்ந்து இரு காலாண்டுகளாக குறைந்து வருகிறது.

மொத்த வாராக் கடன் ரூ. 3.1 லட்சம்  கோடி அதிகரிக்கும். காரணம், பொருளாதாரச் சரிவு அதிகரிப்பு அல்ல, ‘அங்கீகாரம்”
மும்பை, ஆகஸ்ட் 2018டிரான்ஸ்யூனியன்  சிபில் (TransUnion CIBIL), தொடர்ந்து வங்கி நடைமுறையிலுள்ள இடர்பாடு மற்றும் கடன் போக்குகளை (risk and credit trends) கண்காணித்து வருகிறது. டிரான்ஸ்யூனியன்  சிபில்-ன் சமீபத்திய பொருளாதார ஆய்வில், இந்தியாவின் மோசமான கடன் பிரச்சனை 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கிறது. இந்த அமைப்பு, தற்போதைய சூழ்நிலையை மதிப்பிடுவதோடு மட்டுமல்லாமல், மோசமான கடன்களின் மூன்று கூறுபாடுகளில் (components) கவனம் செலுத்தி இருக்கிறது. மேலும், 2018 மார்ச் நிலவரப்படி ரூ. 54.2 லட்சம் கோடிகளாக உள்ள வர்த்தகக் கடனின் எதிர்கால மொத்த வாராக் கடன் விகிதம் என்னவாக இருக்கும் என அடையாளம் கண்டுள்ளது. 
மோசமான கடன்களின் மூன்று கூறுகள்- i) 2018 மார்ச் நிலவரப்படி, மொத்த வாராக் கடன்  (அங்கீகாரம்- Recognised) ரூ. 10.4 லட்சம் கோடி ii) 'அங்கீகரிக்கப்படாத வாராக் கடன்’ (‘Unrecognized NPA’), 2018 மார்ச் நிலவரப்படி, ரூ. 3.1 லட்சம் கோடி; iii) ஒழுங்கற்ற வெளிப்பாடு (Irregular Exposure) என்பது "சிறப்பு குறிப்பு கணக்குகள்" (Special Mention Accounts SMA) பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட வணிக கடனாளர்களுக்கு சொந்தமானது அல்லது தாமதமாக கடனை செலுத்தி வருவது, 2018 மார்ச் நிலவரப்படி, ரூ. 6.6 லட்சம்  கோடி.

'அங்கீகரிக்கப்படாத வாராக் கடன்’ என்பது வங்கிகளால் வாராக் கடன் என உறுதியாக கூறமுடியாத நிலையில் இருப்பதாகும். அதேநேரத்தில், இந்தக் கடனாளிகளை உடனடி வாராக் கடன்  என வகைப்படுத்தியுள்ளனர்.

பிப்ரவரி 12, 2018 அன்று "நெருக்கடி சொத்துகள் - திருத்தப்பட்ட கட்டமைப்பின் தீர்மானம்" (Resolution of Stressed Assets – Revised Framework) என்கிற பெயரில் ஆர்பிஐ (RBI) வெளியிட்ட சுற்றறிக்கை, வாராக் கடனை நிர்ணயிக்க வழி காட்டியது. கடன் வாங்கியவர்களின் பொருளாதார அடிப்படை நிலை மேம்படக் கூடும் என்கிற கணிப்பில் அங்கீகரிக்கப்படாத வாராக் கடன் ரூ. 3.1 லட்சம் கோடி உள்ளது.
அதேநேரத்தில், பொருளாதார சரிவு அதிகரிக்காத நிலையில் மொத்த வாராக் கடன் அதிகரித்தால், அது அங்கீகரிக்கப்படாத வாராக் கடனை அங்கீகரித்ததாக இருக்கும். மேலும் எதிர்கால வாராக் கடன்கள், ஒழுங்கில்லாத வங்கி கணக்குகள் மூலம் அதிகரிப்பதாக இருக்கும். இது தரக்குறியீட்டு அமைப்புகள், ‘ஒரு ரூபாய், ஒரு நாள் தாமதம், தவறு’  (one rupee, one day delay as default) என்கிற சர்வதேச சிறந்த நடைமுறையை பின்பற்றுவதாக இருக்கிறது.

அதேநேரத்தில், மொத்த வாராக் கடன் ரூ. 8 லட்ச கோடியிலிருந்து (மார்ச் 2017) ரூ. 10.4 லட்சம் கோடியாக ((மார்ச் 2018)) நிலையாக அதிகரித்துள்ளது, 'அங்கீகரிக்கப்படாத வாராக் கடன்' ரூ. 5.5 லட்சம் கோடியிலிருந்து (மார்ச் 2017) ரூ. 3.1 லட்சம் கோடியாக (மார்ச் 2018) படிப்படியாக குறைந்துள்ளது.  இதற்கு ஆர்பிஐ-ன் நடவடிக்கையும் காரணமாக இருக்க கூடும். 'ஒழுங்கற்ற கடனாளிகளுக்கான (Irregular borrower') வெளிப்பாடு உச்ச நிலையிருந்து குறைக்கப்பட்டுள்ளது. 2017 செப்டம்பரில் ரூ.  7.9 லட்சம் கோடியாக இருந்தது, 2018 மார்ச் மாதத்தில் ரூ. 6.6 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இதற்கு, திவால் சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில்,  பெரு நிறுவனங்கள் ஒழுங்காக கடன்களை திருப்பிக் கட்டி வந்ததும் ஒரு காரணமாக இருக்கும்.

ஆய்வு கண்டுபிடிப்புகளைவிளக்கி, டிரான்ஸ்யூனியன் சிபில் அமைப்பின் நிர்வாக இயக்குநர் மற்றும்தலைமை நிர்வாக அதிகாரி திரு. சதீஷ் பிள்ளை (Mr. Satish Pillai, MD & CEO, TransUnion CIBIL)  கூறும் போது, தரமான புள்ளிவிவரம் (data quality)மற்றும்பெரியபுள்ளிவிவர பகுப்பாய்வு திறன் ((big data analytical ability) ஆகியவை இந்தியாவில் முதிர்ச்சியின்ஒருகட்டத்தைஎட்டி உள்ளது. அது வங்கி முறைமையின் (banking system) இடர்பாடுகள்  மற்றும்எதிர்காலவளர்ச்சியின்வங்கிபரிணாமத்தின்துல்லியமானமற்றும்துல்லியமானவாசிப்பைவழங்கமுடியும். இந்தப் பகுப்பாய்வு, ரிசர்வ் வங்கி, அரசுமற்றும்வங்கிகள்ஆகியவற்றின்கூட்டுமுயற்சியானது, ஆரம்ப காலவங்கிக்கணக்குமுறைக்குஉட்பட்டு, அழுத்தப்பட்டசொத்துகள் (stressed assets)மற்றும்அதிகஇடர்பாடுகடன்களைக்கடந்துவருவதால், வங்கிமுறைமையில் வெற்றிகரமாக ஆரம்ப வெற்றிகளைக்காட்டுகின்றன. அதிகரித்துவரும்மொத்தவாராக் கடன்விகிதத்தைக்கவனிக்கும்போது, மோசமானகடன்களுக்கானஉந்துதல்புள்ளிவிபரம்அடைந்துவிட்டதுஎன்பதற்கானஅறிகுறியைக்கூடவழங்க இயலாது. அந்தக் கவனிப்பு தனிப்பட்ட முறையில் சரிபார்க்க முடியும். அடையாளம் காணப்பட்ட  வாராக் கடன் களில் வலுவான மீட்பு இருப்பதால், அது  குறைந்துவிடும் வாய்ப்பு உள்ளது அப்போது, மொத்தம் வாராக் கடன்  வளர்ச்சி 2019 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் மேலும் அதிகரிக்காமல் நிலைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

டிரான்ஸ்யூனியன் சிபில் ஐஸ்பெர்க் ஆய்வு (TransUnion CIBIL Iceberg Study): முக்கிய கண்டுபிடிப்புகள்
·         வங்கிமுறைமையில் 2018 மார்ச்31 ஆம் நிலவரப்படி,  அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வாராக் கடன் ரூ. 10.4 லட்சம் கோடியாக உள்ளது. அதேநேரத்தில், அங்கீகரிக்கப்பட்ட வாராக் கடன் வெளிப்பாட்டின் அளவு (exposure)2017 மார்ச்  முதல் ரூ. 2.7 லட்சம் கோடி அதிகரித்துள்ளது; ஒட்டு மொத்த அழுத்தப்பட்ட சொத்துகள் அதிகரிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 2018 மார்ச்உடன் முடிவடைந்த ஆண்டில்,குறிப்பிடத்தக்க அளவு வாராக் கடன் முக்கியமாகபகுதி அங்கீகரிக்கப்பட்ட வாராக் கடனிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட வாராக் கடனுக்கு  மாற்றப்பட்டது. இது, பிப்ரவரி2018 இல் ஆர்.பி.. வெளியிட்ட அழுத்தப்பட்ட சொத்துகள் கணக்கீடு சுற்றறிக்கை மூலம் மாறி இருக்கிறது.
·         ரூ. 3.1 லட்சம் கடன்வெளிப்பாடு கடனளிப்பவர்களிடம் இருப்பதால்,  அங்கீகரிக்கப்பட வாராக் கடன் ஆக கணகெடுக்கப்பட்டுள்ளது. {மேலேஉள்ள அட்டவணையில்'பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட' (‘Partially Recognized’) என்பதைக்கவனிக்கவும்}. இந்தரூ. 3.1 லட்சம் கோடியை தற்போதுவாராக் கடனாக குறிக்கப்படவில்லை.
·         'ஒழுங்கற்றகடனாளிகள்' (கடந்த6 மாதங்களில் குறைந்தபட்சம்ஒரு முறையாவது கடனை சரியாக கட்டாமல் இருப்பபவர்கள்) மூலமான கடன் வெளிப்பாடு ரூ. 6.6 லட்சம் கோடி. இந்தக் கடனாளிகள், கடனளிப்பவர்களிடமிருந்து கடன் பெறும் கடன்களை செலுத்துவதில் வழக்கமான / எப்போதும் தற்போதைய வாடிக்கையாளர்களை விட அதிக வாராக் கடன் இடர்பாட்டை  எதிர்கொள்கின்றனர். ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின் படி 'தவறு' (‘default’) நடப்பு வரையறையின் கீழ் இந்த ரூ. 6.6 லட்சம் கோடி கடன், வாராக் கடன் இல்லையெனில் 'தவறு' ஆக குறிக்கலாம்.
·         பொதுத்துறை வங்கிகளில் மதிப்பிடப்பட்ட வாராக் கடன்கள்:
o   பொதுத்துறை வங்கிகளால் ரூ  8.6 லட்சம் கோடி வாராக் கடன் என  ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ரூ. 1.7 லட்சம் கோடி பகுதி  அங்கீகரிக்கப்பட்ட வாராக் கடனின் கீழ் வருகிறது. மேலும் 85% கடன்கள் அழுத்தப்பட்ட சொத்துகளாக ஏற்கனவே பொதுத் துறை வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
o   பகுதிவாராக் கடன்களின் கீழ் கிடைக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில், 2017-18-ல் பொதுத்துறைவங்கிகளில் காணப்பட்ட  வாராக் கடன் அளவு, 2019 செப்டம்பரில் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
·         தனியார் துறை வங்கிகளில் வாராக் கடன் மதிப்பீடு:
o   தனியார் வங்கிகளால், ரூ. 100 கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்ட கடன்கள் மூலமான வாராக் கடன் ரூ.1.1 லட்சம்  கோடி என ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  
o   ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகளில் நிறுவனங்கள் வாராக் கடன் நிலையில் வைத்துள்ள தொகை ரூ. 0.7 லட்சம் கோடியாக உள்ளது. ஆர்.பி.ஐ-ன் நடவடிக்கையால், அடுத்து சில காலாண்டுகளில் இவை வாராக் கடன்களகா ஆக மாற வாய்ப்பு உள்ளது.
o   ஒட்டுமொத்ததனியார் வங்கிவாராக் கடன்கள், அடுத்த இரண்டுகாலாண்டுகளில்  சுமார்ரூ. 0.4 லட்சம்கோடி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
டிரான்ஸ்யூனியன் சிபில் பற்றி
டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) இந்தியாவின் முன்னணி கடன் தகவல் நிறுவனம் ( credit information company) மற்றும் உலக அளவிலான கடன் தகவல்களை மிகப் பெரிய களஞ்சியமாகக் கொண்டுள்ளது. அனைத்து முன்னணி வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிச் சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் உட்பட 3000 க்கும் அதிகமான உறுப்பினர்கள் இதில் இணைந்துள்ளனர் மற்றும்  தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் 100 கோடிக்கும் (1000 மில்லியன்)ம் மேற்பட்ட கடன் பதிவுகளை பராமரித்து வருகிறது. இந்த அமைப்பின் நோக்கம் - வணிகம் விரைவாகவும், குறைந்தக் கட்டணத்தில் கடன் தகவல்களை அளித்து தகவல் தீர்வுகளை கொடுப்பதாக உள்ளது.
                 
உறுப்பினர்களுக்கு கடன் சார்ந்த இடர்பாட்டை நிர்வகிக்க உதவுவதன் மூலம், செலவுகளைக் குறைக்கவும், லாபத்தை அதிகரிக்கவும் பொருத்தமான வணிக உத்திகளை திட்ட உதவுகிறது.  நுகர்வோர் மற்றும் வணிக கடனாளர்களுக்கு விரிவான, நம்பகமான தகவல்களை அளித்து, தனிநபர்களுக்கும் வணிக நிறுவனங்களும் கடன்  வழங்குவதற்கான முடிவை சுலபமாக எடுக்க உதவுகிறது.

தகவல்களின் சக்தி (power of information), டிரான்ஸ்யூனியன் சிபில், அதன் உறுப்பினர்களுக்கு கடன் குறித்த தகவல்களை அளிப்பதோடு, அனைவருக்கும் நிதிச் சேவை என்கிற வலுவான பொருளாதாரத்தை உருவாக்க உதவுகிறது.

இந்தத் தகவலை நல்லது (Information for Good) என்று அழைக்கிறார்கள்.  கூடுதல் தகவல்களுக்கு பார்வையிடவும்: www.transunioncibil.com

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22

தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 தண்ணீர்... தண்ணீர்... - உலக நீர் நாள் - மார்ச் 22 உயிர் வாழ நீர் அவசியம் பூமியில் உயிர்கள்...