மொத்தப் பக்கக்காட்சிகள்

யெஸ் பேங்க், இஃன்ரா பாண்ட்கள் டிரிபிள் ஏ தரக்குறியீடு - நிலையான எதிர்பார்ப்பு உடன் கேர் ரேட்டிங்ஸ்-ஐ மேம்படுத்தியது.



யெஸ் பேங்க், இஃன்ரா பாண்ட்கள் டிரிபிள் ஏ தரக்குறியீடு - நிலையான எதிர்பார்ப்பு உடன் கேர் ரேட்டிங்ஸ்-ஐ  மேம்படுத்தியது.
        உள்கட்டமைப்பு பாண்டுகள் (Infrastructure Bonds) மற்றும் அடுக்கு II பாண்டுகளுக்கான (Tier II) (பேசல் III) நிலையான  எதிர்பார்ப்பு ; (Stable Outlook) தரக்குறியீடு (Rating) AA + லிருந்து அதிகப்படியான AAA தரக்குறியீட்டுக்கு  மேம்படுத்தப்பட்டுள்ளது.
        இடைவிடாத மற்றும் கூடுதல் அடுக்கு I கடன் பத்திரங்கள் (பேசல் III) Perpetual and Additional Tier I Bonds (Basel III): நிலையான  எதிர்பார்ப்பு கேர்  AA (Care AA)  லிருந்து கேர் AA + -க்கு மதிப்பீடு மேம்படுத்தப்பட்டுள்ளது.
       இடைவிடாத மற்றும் கூடுதல் அடுக்கு I பத்திரங்களுக்கு  கேர் AA + தரக்குறியீடு என்பது அனைத்து வங்கிகளிலும் மிக அதிகம் ஆகும்.
மும்பை, ஜூலை 6, 2018:  யெஸ் பேங்க் (YES BANK) இந்தியாவின் நான்காவது பெரிய தனியார் வங்கி. இது பல முதலீட்டு திட்டங்களுக்கு கேர் நிறுவனத்தின் தரக்குறியீட்டின் மேம்படுத்தப்பட்ட தரக்குறியீடுகளை பெற்றுள்ளது. இந்த மேம்படுத்தல் என்பது யெஸ் பேங்க்-ன் வலுவான நிதி செயல்திறன், கடன் மதிப்பு, மற்றும் நடப்பு கணக்கு, சேமிப்பு கணக்கு (CASA) மற்றும் சிறு வைப்புத்தொகையின் பங்களிப்பை அதிகரிக்கும்.
கேர் தரக்குறியீடுகள், தரக்குறியீட்டை மேம்படுத்த கீழ்காணும் காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
        போதிய மூலதன அளவுகள்
        அனுபவம் வாய்ந்த மூத்த மேலாண்மை
        கடந்த பத்து ஆண்டுகளில் தொடர்ந்து ஆரோக்கியமான லாபத்தை அளிக்கும் திறமை
        பிற வங்கிகளுடன் ஒப்பிடும் போது, தரம் மிக்க சொத்துகள்   மற்றும் மிகவும் குறைவான திவால் வழக்குகள் (NCLT cases)
       நிதி திரட்டுவதில் முன்னேற்றம்
       முந்தைய ஆண்டுகளில் குறிப்பாக, மொத்த வைப்புத் தொகை திரட்டுவதில் மேம்பாடு மற்றும் எளிதில் பணமாக்கும் வசதி                                                                                                                                      மேம்பாட்டு குறித்து யெஸ் பேங்க்-ன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. ராணா கபூர் ( Mr. Rana Kapoor, MD & CEO, YES BANK) கூறும் போது, “இந்த கேர்  தரக்குறியீடு என்பது யெஸ் பேங்க்-ன் நிலையான வளர்ச்சி சார்ந்த வணிக மாதிரியை பிரதிபலிக்கிறது. மேலும், வலுவான இடர்பாடு நீக்க மேலாண்மைக் கொள்கைகள், சொத்து மதிப்பை பாதுகாப்பதில் நிரூபணம், வேகமாக வளர்ந்துவரும் வங்கி கிளைகள் எண்ணிக்கை மற்றும் வலுவான செயலாக்க நிர்வாக குழு போன்றவை இதற்கு காரணமாக இருக்கின்றன. இந்தத் தரக்குறியீடு மேம்படுத்தல், வளர்ச்சி கண்டு வரும் கடன்களுக்கான டெபாசிட் திரட்டும் செலவில் மேலும் குறைப்பை ஏற்படுத்தும். மற்றும் யெஸ் வங்கியில் டெபாசிட் செய்பவர்களின் எண்ணிக்கை, பங்குதாரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை மேலும் விரிவுபடுத்துகிறது. 14வது ஆண்டின் சிறப்பான வளர்ச்சியில் தரக்குறீயிடு மேம்படுத்துவது, உலகின் மிகவும் தரம் வாய்ந்த  வங்கியை இந்தியாவில் உருவாகும் (Finest Quality Large Bank of the World in India) எங்களின் இலக்கை மேலும் வலுப்படுத்துகிறது. ”

திட்டங்களின் அடிப்படையில் தரக்குறியீட்டு நடவடிக்கைகள் கீழே தரப்பட்டுள்ளன.
திட்டங்கள்/ வசதிகள்
தொகை (ரூ. கோடியில்)
தரக்குறியீடு
தரக்குறியீட்டில் மாற்றம்
உள்கட்டமைப்பு பாண்டுகள்
5,000.00
(ரூ. 5 ஆயிரம் கோடி மட்டும்)
கேர் AAA;  நிலையானது
(டிரிபிள் ஏ எதிர்பார்ப்பு - நிலையானது)
கேர்
 AA+; நிலையானது (டபுள் ஏ பிளஸ்; எதிர்பார்ப்பு - நிலையானது) லிருந்து மேம்பாடு  
லோயர் டயர் II பாண்ட்கள்

2,530.60
(ரூ. 2 ஆயிரத்தி ஐநூற்றி முப்பது கோடி 60 லட்சம் மட்டும்)
கேர் AAA;  நிலையானது
(டிரிபிள் ஏ எதிர்பார்ப்பு - நிலையானது)
கேர்
 AA+; நிலையானது (டபுள் ஏ பிளஸ்; எதிர்பார்ப்பு - நிலையானது) லிருந்து மேம்பாடு
டயர் II பாண்ட்கள் (பேசல் III)
4,900.00
(ரூ. நாலாயிரத்தி தொள்ளாயிரம்  கோடி)
கேர் AAA;  நிலையானது
(டிரிபிள் ஏ எதிர்பார்ப்பு - நிலையானது)
கேர்
 AA+; நிலையானது (டபுள் ஏ பிளஸ்; எதிர்பார்ப்பு - நிலையானது) லிருந்து மேம்பாடு
அடிஷனல் டயர் I பாண்ட்கள் (பேசல் III)
3,600.00
(ரூ. மூன்றாயிரத்து ஆறு நூறு  கோடி)

கேர்
 AA+; நிலையானது (டபுள் ஏ பிளஸ்; எதிர்பார்ப்பு - நிலையானது)
கேர்
 AA; நிலையானது (டபுள் ஏ ; எதிர்பார்ப்பு - நிலையானது) லிருந்து மேம்பாடு
அப்பர் டயர் II பாண்ட்கள்
1,104.10
(ரூ. ஆயிரத்தி நூற்றி நான்கு கோடி பத்து லட்சம்  கோடி)
(ரூ. 1,296.10 கோடிலிருந்து குறைக்கப்பட்டது)
கேர்
 AA+; நிலையானது (டபுள் ஏ பிளஸ்; எதிர்பார்ப்பு - நிலையானது)
கேர்
 AA; நிலையானது (டபுள் ஏ ; எதிர்பார்ப்பு - நிலையானது) லிருந்து மேம்பாடு
பெர்பச்சுவல் பாண்ட்கள் (பேசல் II)

236.00
(Rs. Two hundred Thirty Six crore only)
(ரூ. இரு நூற்றி முப்பத்தாறு   கோடி)
கேர்
 AA+; நிலையானது (டபுள் ஏ பிளஸ்; எதிர்பார்ப்பு - நிலையானது)
கேர்
 AA; நிலையானது (டபுள் ஏ; எதிர்பார்ப்பு - நிலையானது) லிருந்து மேம்பாடு
அப்பர் டயர் II பாண்ட்கள்
-
-
விலக்கி கொள்ளப்பட்டுள்ளது

யெஸ் பேங்க் பற்றி ..
யெஸ் பேங்க் (YES BANK), இந்தியாவின் நான்காவது பெரிய தனியார் வங்கி. இது இந்தியா முழுக்க  29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் செயல்பட்டு வருகிறது. இதன்  தலைமையிடமாக,மும்பையின் லோயர்  உள்ளது.  அதன் நிறுவனர் ராணா கபூரின் தொழில்முறை மற்றும் தொழில் முனைவோர் பொறுப்பு ஆகியவற்றின் மூலம் இந்த வங்கி உருவாகி இருக்கிறது. மற்றும் அதன் உயர் மேலாண்மை குழு, அதிக தரம், வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை சிறப்ப்பாக அளித்து வருகிறது. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவி வரும் தனியார் வங்கியாக இது இருக்கிறது.

யெஸ் பேங்க் சர்வதேச சிறந்த நடைமுறைகளை ஏற்றுள்ளது. சேவை தரத்தின் மிக உயர்ந்த தரநிலைகள் மற்றும் சிறப்பான செயல்பாட்டு  மற்றும் அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விரிவான வங்கி மற்றும் நிதித் தீர்வை வழங்கி வருகிறது.

சில்லறை மற்றும் நிறுவன வங்கிச் சேவையை அளித்து வரும், யெஸ் பேங்க், உலகின் மிகவும் தரம் வாய்ந்த  வங்கியை இந்தியாவில் உருவாகும் (Finest Quality Large Bank of the World in India) இலக்கை கொண்டிருக்கிறது.

For further information, please contact:

YES BANK                                                                            Adfactors
Mihir Mukherjee                                                                    Jyothi Goswami
Mob: +91 9987556960                                                           Ph: +91 9987036388
Email: 11yesbank.in"mihir.mukherjee1yesbank.in                                 Email: jyothi@adfactorspr.com

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..! Food

*மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!* ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும்...