மொத்தப் பக்கக்காட்சிகள்

200 நிறுவனங்கள் டீலிஸ்ட் ..!

BSE to delist over 200 cos from May 11, 2018 - 200 நிறுவனங்கள் டீலிஸ்ட் ..!

2018 மே 11 ஆம் தேதி முதல் 200க்கும் அதிகமான  நிறுவனங்களை பட்டியலில் இருந்து நீக்கப் போவதாக (டீலிஸ்ட்) பிஎஸ்இ பங்குச் சந்தை அறிவித்துள்ளது.
இதனை அடுத்து  இந்த நிறுவனங்களின் பங்கு பரிவர்த்தனைகள்  ஆறு மாதத்துக்கு நிறுத்தி வைக்கப்படும்.  இந்த நிறுவனங்களின் முழு நேர இயக்குநர்கள், நிறுவனர்கள், நிறுவனத்தின் குழுமம் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட தினத்திலிருந்து 10 ஆண்டுகளுக்கு பங்குச் சந்தையில் நுழைய முடியாது.

ஃபர்ஸ்ட் லீஸிங் கம்பெனி ஆஃப் இந்தியா (First Leasing Company of India), பிராண்ட்ஹவுஸ் ரீடெய்ல்ஸ், துஜோட்வாலா பேப்பர் கெமிக்கல்ஸ் (Dujodwala Paper Chemicals), எல்டர் ஹெல்த்கேர், எல்டர் ஃபார்மாசிட்டிகல்ஸ், கோல்டைன் டெக்னோசர்வ் ( Glodyne Technoserve), ஹீலியாஸ் அண்ட் மாதேசன் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ( Helios and Matheson Information Technology), ஹிரன் ஆர்கோகெம் ( Hiran Orgochem), எம்சிஎஸ்,  துலிப் டெலிகாம், டுட்டிஸ் டெக்னாலஜீஸ் (Tutis Technologies), வஜ்ரா பேரிங்ஸ் (Vajra Bearings), வருண் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் விடிஎக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்றவை
சட்ட விரோத செயல்கள் மூலம் சம்பாதித்த கறுப்புப் பணத்தை  பங்குச் சந்தையில் பயன்படுத்திய பெயரளவு ஷெல் கம்பெனிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை , செபி அமைப்பு அண்மையில் தீவிரப்படுத்தியது. நீண்ட காலமாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளாத  கிட்டத்தட்ட  2 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.  சந்தேகத்துக்குரிய சுமார் 330 ஷெல் கம்பெனிகள் மீது எதிராக நடவடிக்கை எடுக்க  பங்குச் சந்தைகளுக்கு செபி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பிஎஸ்இ, பங்குச் சந்தைகளுக்கு சரியான தகவல்களை தராத நிறுவனங்களை பட்டியலில் இருந்து நீக்க உள்ளது.

இந்த நிறுவனங்கள், அவற்றின் முதலீட்டாளர்கள் வசம் இருக்கும் பங்குகளுக்கு நியாயமான விலை கொடுத்து பங்குகளை வாங்கிக் கொள்ள வேண்டும். இதனை அந்த நிறுவனங்கள் செய்கிறதா? என்பதை செபி அமைப்பு கண்காணிக்க வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிப்பதுடன் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் முதலீடு வங்கி ஃபிக்ஸட் வட்டி உடனாவது கிடைக்க வழி செய்ய வேண்டும். நிறுவனம் செய்த தவறுகளுக்கு முதலீட்டாளர்கள் என்ன செய்வார்கள்?

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...