மொத்தப் பக்கக்காட்சிகள்

பினாமி சொத்து சட்டம் சொல்வது என்ன?

Benami Property Act பினாமி  சொத்து சட்டம் சொல்வது என்ன?

கறுப்பு பண புழக்கத்துக்கும், கறுப்பு பண முதலீட்டுக்கும் பினாமி பெயரிலான பணம் மற்றும் சொத்து பரிவர்த்தனைகளே முக்கிய காரணம் என்று மத்திய அரசு கருதுகிறது.

 கறுப்பு பண புழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தில், பினாமி பரிவர்த்தனைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்காக புதிய சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை அண்மையில் ஒப்புதல் அளித்தது.

இதன்படி, கடந்த 1988 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பினாமி பரிவர்த்தனை (தடுப்பு) மசோதாவுக்கு பதிலாக, புதிய பினாமி பரிவர்த்தனை (தடுப்பு) மசோதா 2011 கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தை மீறி, பினாமி பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களுக்கு ஆறு (6) மாதங்களுக்கு குறையாத சிறை தண்டனை வழங்கப்படும். அது, இரண்டு ஆண்டு வரை நீடிக்கப்படவும், அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

இருந்தாலும் இந்து மத கூட்டுக் குடும்பத்தில் (ஹெச்யூஎஃப்), இணை வாரிசுதாரரின் சொத்துகள், தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவரிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்துகள் ஆகியவற்றுக்கு பினாமி பரிவர்த்தனை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட ஒருவர் தன்னுடைய மனைவி, சகோதரர், சகோதரி அல்லது இதர ரத்த சம்பந்தமுள்ள உறவுகளின் பெயரில் வாங்கும் சொத்துகள், பினாமி சொத்துகளாக இருந்த போதிலும், அவற்றுக்கு எந்த தடையும் இல்லை.
பினாமி பரிவர்த்தனை சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், விளக்கம் அளிக்க போதிய வாய்ப்பு அளிக்கப்படும். அதன்பிறகு, அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்வதற்கும் இந்த புதிய சட்டம் வகை செய்கிறது.

Income Tax Department Steps up Actions under Benami Transactions (Prohibition)Amendment Act, 2016


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! AI

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் காகிதமில்லாத (paperless) மற்றும் 100% ரொக்கமில்லா (Cashles...