மொத்தப் பக்கக்காட்சிகள்

தமிழ்ப் புத்தகத் திருவிழா-2022 பெங்களூரு டிச.25, 2022-ஜன.1, 2023தமிழ்ப் புத்தகத் திருவிழா-2022*
பெங்களூரு டிச.25, 2022-ஜன.1, 2023

கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் இணைந்து 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 25 முதல் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிவரை பெங்களூரில் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளன‌.

கருநாடகத்தில் தமிழர்களுக்கு தமிழ்க்கற்றல் மற்றும் மொழியால் ஒன்றுபடுதலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இத்திருவிழா நடத்தப்படுகிறது.

இத்திருவிழாவில்...

* அள்ள அள்ள‌ குறையாத அறிவுச்செல்வமாய் தமிழ்ப் புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும்

* இலக்கியச்செறிவுள்ள பேச்சாளர்களின் உரைவீச்சுகள், நூல் வெளியீடுகள், மாணவர்களின் தமிழ்க்கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன‌

* கருநாடகத் தமிழர்களின் வரலாற்று ஏடுகளை படம் பிடிக்கும் ஆவணக் களஞ்சியமாக தமிழ்ப் புத்தகத் திருவிழா சிறப்புமலர் வெளியிடப்படுகிறது.

* கருநாடகத்தில் தமிழ், தமிழர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அறிஞர்கள், அறிவியலறிஞர்கள், இலக்கியவாதிகள், பேராளர்கள், விற்பன்னர்கள், தொழில்முனைவோர், இதழாளர்கள் பாராட்டப்படுவார்கள்.

*கருநாடகத் தமிழரின் வரலாற்றில் திருப்புமுனையாக அமையவிருக்கின்ற தமிழ்ப் புத்தகத் திருவிழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*

*எங்களின் முதல் முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்...!*
*இனி ஆண்டுதோறும் நடக்கும் பாருங்கள்..!*

தமிழுணர்வுடன்,

முத்துமணி நன்னன்,
செயலாளர், தபுதி-2022
பெங்களூரு
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...