மொத்தப் பக்கக்காட்சிகள்

ஐடிஎஃப்சி பேங்க் வாடிக்கையாளர் எண்ணிக்கை 20 லட்சமாக அதிகரிப்பு

ஐடிஎஃப்சி பேங்க் வாடிக்கையாளர்
எண்ணிக்கை 20 லட்சமாக அதிகரிப்பு
20170-18 இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 234 கோடி

ஐடிஎஃப்சி பேங்க்-ன் பாயின்ட்ஸ் ஆஃப் பிரசன்ஸ் 14,126 ஆக உள்ளது.  25 மாநிலங்களில்  - 325 மாவட்டங்களில், 670 நகரங்களில் மற்றும் 45,000 கிராமங்களில் இயங்கி வருகிறது.  20 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது.

மொத்த வர்த்தகம் 34%, வழங்கப்பட்ட கடன் 14% அதிகரித்துள்ளது.

2017, செப்டம்பர்  30 ம் தேதி நிலவரப்படி, நிதி சாரா வணிகம் (non-funded business) ரூ. 25,000 கோடியாக உள்ளது.

2017, செப்டம்பர் 30 ம் தேதி நிலவரப்படி, ஒட்டு மொத்த சில்லறை வணிகம் ரூ. 18,000 கோடியாக உள்ளது. இதன் பங்களிப்பு 24 சதவிகிதமாக உள்ளது.

நேரடி சில்லறை வணிக பங்களிப்பு 38 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது 2017, ஜூன்  30ம் தேதி நிலவரப்படி ரூ. 3,440 கோடியாக இருந்தது. 2017, செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, ரூ. 4,733 கோடியாக அதிகரித்துள்ளது.

மொத்த டெபாசிட் ரூ. 38,890 கோடி உள்ளது. இது 70% அதிகரிப்பு.

காசா 12% சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதாவது, 2017, ஜூன்  30-ல் ரூ.2,850 கோடியாக இருந்தது, 2017, செப்டம்பர் 30-ல் 3,200 கோடியாக அதிகரித்துள்ளது.

மும்பை, அக்டோபர் 25, 2017

ஐடிஎஃப்சிபேங்க் (IDFC Bank) -ன் இயக்குநர்கள் குழு, 2017  செப்டம்பர்  30 உடன் முடிந்த இரண்டாம் காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இரண்டாம்  காலாண்டு செயல்பாடுகள் : 2017-18 Vs 2016-2017

* செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் ரூ.234 கோடி.

* 2017 செப்டம்பர் 30 நிலவரப்படிமொத்த கடன்கள் 34% உயர்ந்து ரூ.90,598  கோடியாக அதிகரித்துள்ளது. இது  2016 செப்டம்பர் 30-ல் 67,862 கோடியாகஇருந்தது.                                                                                              
2017, செப்டம்பர் 30-ல் நிகர சில்லறை மற்றும் நிறுவனச் சொத்துகள் 14% அதிகரித்து ரூ. 65,177 கோடியாக உள்ளது. இது, 2016, செப்டம்பர் 30-ல் ரூ. 57,138 கோடியாக இருந்தது.


 2017 செப்டம்பர் 30 நிலவரப்படிமொத்த டெபாசிட்கள்  ரூ. 38,890  கோடியாக அதிகரித்துள்ளது. இது  2016 செப்டம்பர் 30-ல் 22,911 கோடியாக இருந்தது. 70 சதவிகித அதிகரிப்பாகும்.

Q2 FY18 v/s Q1 FY18

2017, செப்டம்பர் 30 நிலவரப்படி, மொத்த கடன் 9% அதிகரித்து ரூ. 90,598 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 2017,   ஜூன்  30 நிலவரப்படி, 2017,   83,157 கோடியாக இருந்தது.

2017, செப்டம்பர் 30 நிலவரப்படி, வழங்கப்பட்ட கடன்கள் 4% அதிகரித்து ரூ. 65,177 கோடியாக உள்ளது.  இது, 2017,   ஜூன்  30 நிலவரப்படி, 2017,  ரூ.  62,675 கோடியாக இருந்தது.

நிகர வட்டி வருமானம்  (NII) 10 சதவிகிதம் அதிகரித்து ரூ. 480  கோடியாக உள்ளது. வட்டி சாரா வருமானம் ரூ. 130 கோடியாக உள்ளது.

* 2017, செப்டம்பர் 30 நிலவரப்படி, திரட்டப்பட்ட டெபாசிட்கள்  அதிகரித்து ரூ. 38,890 கோடியாக உள்ளது.  இது, 2017,  ஜூன்  30 நிலவரப்படி, 2017,  ரூ. 41,959 கோடியாக இருந்தது. இது 7 சதவிகித இறக்கம்.

இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த வாடிக்கையாளர்களுக்கு பாயின்ட்ஸ் ஆஃப் பிரசன்ஸ் 14,126 மூலம் சேவை அளித்து வருகிறது. இதில், 100 கிளைகள், 48 ஏடிஎம்கள்,  383 வணிக தொடர்பு கிளைகள் (business correspondent branches),10,258 மைக்ரோ ஏடிஎம்கள் மற்றும் 3,337  ஆதார் பே மெர்சன்ட் பாயின்ட்கள் உள்ளன.

பங்குதாரர்களின் நிதி மற்றும் மூலதன தன்னிறைவு ( Shareholders’ Funds and Capital Adequacy)

2017 செப்டம்பர் 30 நிலவரப் படி வங்கியின் பங்குதாரர்களின் நிதி ரூ.15,056 கோடியாக உள்ளது.

பேசல்  III விதிமுறைகளின் படிமூலதன தன்னிறைவு விகிதம் 19.3%ஆகஇருக்கிறது. டயர் 1 மூலதன தன்னிறைவு விகிதம் 19%. 

சொத்தின் தரம் (Asset Quality)


2017, செப்டம்பர் 30 மொத்த வராக் கடன் மற்றும் நிகர வாராக் கடன் முறையை ரூ.2,002 கோடி மற்றும் ரூ.805 கோடியாக உள்ளது. வழங்கப்பட்ட மொத்த கடனில் மொத்த வாராக் கடன் 3.9% ஆக உள்ளது. வழங்கப்பட்ட நிகர கடனில் நிகர வாராக் கடன் 1.6% ஆகஇருக்கிறது.

மனித வள மேம்பாடு
வங்கியின் பணியாளர் எண்ணிக்கை 6.5% அதிகரித்துள்ளது. 2017, செப்டம்பர் 30 நிலவரப்படி மொத்த பணியாளர்கள் எண்ணிகை 8,377 ஆக உள்ளது.

விருது

சிறந்த டிஜிட்டல் தொழில் நுட்ப விருது 2017 (IDC Digital Transformation Awards 2017) இந்த வங்கிக்கு  வழங்கப்பட்டது


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...