மொத்தப் பக்கக்காட்சிகள்

ஐஜிபிசி பசுமை புதிய கட்டிட பிளாட்டினம் விருதை பெறும் முதல் அரசு கட்டிடம் Green building

ஐஜிபிசி பசுமை புதிய கட்டிட மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் மிகவும் உயரிய விருதான பிளாட்டினம் விருதை பெறும் முதல் அரசு கட்டிடம்

 

சென்னைநவ.25,2023: சென்னை பெருமாநகராட்சியின் ஸ்மார்ட் கவர்னன்ஸ் சென்டர் இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் (ஐஜிபிசி-ன்) பசுமை புதிய கட்டிட மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் மதிப்புமிக்க விருதான பிளாட்டினம் சான்றிதழைப் பெற்றுள்ளது.பசுமையான சுற்றுச்சூழல் மாசு இல்லாத நிலையான எதிர்காலத்திற்கான சிறந்த அரசு கட்டிடத்தை கட்டி 100 மதிப்பெண்களுக்கு 89 மதிப்பெண்களை பெற்று சென்னை பெருமாநகராட்சி சிறந்த இடத்தை பிடித்துள்ளது. இதற்கான விருது மற்றும் சான்றிதழ் இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் தேசியத் தலைவர் குர்மித் சிங் அரோராதேசிய துணைத் தலைவர் பி. தியாகராஜன், சென்னை மண்டல தலைவர் அஜித் குமார் சோர்டியா மற்றும் ஜான்சன் கன்ட்ரோல்ஸ் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அருண் அவஸ்தி ஆகியோர் முன்னிலையில் சென்னை பெருமாநகராட்சி கமிஷனரும்தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலருமான டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.

 

இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த பசுமை கட்டிட காங்கிரஸ் 2023 மாநாட்டில் இந்த விருதைப் பெற்றுக் கொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,  தமிழ்நாட்டின் மையப்பகுதியில்பசுமையான எதிர்காலத்தை வலியுறுத்திஉலகின் பழமையான மற்றும் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி அமைப்புகளில் ஒன்றாக சென்னை பெருமாநகராட்சி திகழ்கிறது. பசுமை என்பதை வாய் அளவில் மட்டுமல்லாமல் செயலளவில்தமிழக மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத மற்றும் ஆரோக்கியமான இடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். பசுமைக் கட்டிட காங்கிரஸ் 2023 உடன் தமிழகம் இணைந்து பணியாற்றுவது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். தமிழகத்தை சுற்றுச்சூழல் மாசற்ற மாநில உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் முனைப்புடன் செயலாற்றி வருகிறோம். இந்த விருது எங்கள் அர்ப்பணிப்புக்கு கிடைத்த சான்றாகும். இந்தியாவில் முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். வரும் காலங்களில் இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் விருதுக்காக மட்டுமல்லாமல் நிலையான எதிர்காலத்திற்கான அனைத்து திட்டங்களையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். நிலைத்தன்மையைப் பற்றி வாய் அளவில் மட்டும் பேசாமல் எதிர்கால சந்ததியினருக்கான இயற்கை வளங்களைப் பாதுகாத்துஅனைவரின் நல்வாழ்விற்கும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய 'பசுமை கட்டிட காங்கிரஸ் 2023' மாநாடு மற்றும் கண்காட்சியை சென்னையில் நடத்தியதற்காக இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய பசுமை கட்டிட கவுன்சிலுக்கு எனது பாராட்டுகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். சுற்றுச்சூழல் மாசு இல்லாத நிலையான எதிர்காலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் தேசியத் தலைவர் குர்மித் சிங் அரோரா கூறுகையில், துவக்கம் முதல் இறுதி வரை நிலையான பசுமைக் கட்டமைப்பை உருவாக்க முன்மாதிரியாக செயல்பட்ட சென்னை பெருமாநகராட்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 

தேசிய துணைத் தலைவர் பி. தியாகராஜன் பேசுகையில், உண்மையில் இது சென்னை மாநகராட்சியின் பாராட்டுக்குரிய முயற்சியாகும்மேலும் இந்த குறிப்பிடத்தக்க பயணத்தில் நாங்களும் இணைந்து இருப்பது குறித்து உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம். மேலும் சென்னை மாநகராட்சி இதுபோன்ற கட்டிடங்களை கட்டுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும்தமிழகத்தின் பசுமைத் தடத்தை அதிகரிப்பதற்கும்தமிழகத்தை பசுமைமிக்க மாநிலமாக உயர்த்துவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நான் நம்புகிறேன் என்று பேசினார்.

 

சென்னை பெருமாநகராட்சியின் ஸ்மார்ட் கவர்னன்ஸ் சென்டரின் சிறப்புகள்

 

 • இந்த ஆண்டு 51,338 சதுர அடியில் சென்னை பெருமாநகராட்சியின் ஸ்மார்ட் கவர்னன்ஸ் சென்டர் கட்டப்பட்டது
 • சென்னையின் மற்றொரு முக்கிய அடையாளமாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம்நவீன கட்டிடக்கலை உத்தியுடன் பாரம்பரிய நேர்த்தியையும் ஒன்றிணைக்கும் வகையில் அருகிலுள்ள ரிப்பன் மாளிகையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
 • ஊழியர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இந்த கட்டிடம் சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
 • வெப்பத்தை தணிக்கும் தொழில்நுட்பம்: 95 சதவீத வெப்பத்தைக் குறைக்க இந்தக் கட்டிடத்தில் ஸ்ரீ டைல்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இயற்கையான முறையில் 75 சதவீதம் குறைக்கும் வகையில் ஏராளமான மரங்கள் நடப்பட்டுள்ளன.  
 • பசுமை தாவரங்கள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு: 30 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி மரங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மரங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
 • நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள்:  இந்த மையம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 90%க்கும் அதிகமான மழை நீரை சேமிக்கும் வகையிலும்தண்ணீர் பற்றாக்குறை உள்ள சென்னையில் தண்ணீரை வீணாக்காமல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
 • ஆற்றல் திறன் மற்றும் சேமிப்புஏஏசி தடுப்புச் சுவர்கள்இன்சுலேடட் ஷீட்களால் போடப்பட்டுள்ள மேற்கூரைநிழல் சாதனங்கள்விஆர்எப் அமைப்புடிஎப்ஏ அமைப்பு மற்றும் மோஷன் சென்சார்கள் போன்ற ஆற்றல் சேமிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. சோலார் மின் உற்பத்தி உட்பட மின்சார கட்டணத்தை சுமார் 43 சதவீத குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு பொருத்தப்பட்டுள்ள 131kWp திறன் கொண்ட சோலார் பிவி சிஸ்டம் ஆண்டுக்கான மொத்த மின் நுகர்வில் 34 சதவீதத்தை வழங்குகிறது.
 • இந்த கட்டிடத்தில் உள்ள 75 சதவீத பகுதிகள் பகல் நேரங்களில் இயற்கையாக சூரிய வெளிச்சம் வரும் வகையில் கட்டப்பட்டுள்ளன.
 • நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள்: சுற்றுச்சூலுக்கு ஏற்ற கட்டுமான பொருட்கள்அகச்சிவப்பு மற்றும் புற ஊதா ஒளிக் கதிர்களை குறைக்கும் ஜன்னல் கண்ணாடிகள்மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள்உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கட்டுமானப் பொருட்கள்குறைந்த அளவு மாசை வெளியேற்றும் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. 100% கரிம கழிவு உற்பத்திக்கான ஆர்கானிக் வேஸ்ட் கன்வெர்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
 • மேம்பட்ட அனுபவத்திற்கான ஸ்மார்ட் கட்டிடத்தின் சிறப்புகள்: விரிவான கட்டிட மேலாண்மை அமைப்பு (BMS), CO2 சென்சார்கள், EV சார்ஜிங் நிலையங்கள் மற்றும் சொட்டு நீர் பாசன அமைப்புகளுடன்கரிம கழிவுகளை உரமாக்குதல் மற்றும் கழிவுகளை பிரிக்கும் வசதிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
 • ஊழியர்களின் ஆரோக்கியத்தில் கவனம் :  சுகாதாரமானவசதியான மற்றும் உற்பத்திச் சூழலை உறுதி செய்யும் வகையில் தூசியைக் குறைக்கும் மேட்டுகள்உட்புற உடற்பயிற்சி கூடம்பசுமைக் கல்விச் சுவரொட்டிகள் மற்றும் பிற வசதிகள் உட்பட ஊழியர்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு இந்த சென்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • நம்பிக்கை மற்றும் நெகிழ்ச்சியின் அடையாளம்: இந்திய பசுமைக் கட்டிடக் கவுன்சிலின் பிளாட்டினம் சான்றிதழ் அங்கீகாரத்துடன்பசுமை கட்டிட நடைமுறைகளில் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகிறதுமேலும் இந்த சென்டர் நம்பிக்கைநெகழ்ச்சி மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான கலங்கரை விளக்கமாக உள்ளது.

 

 

Photo cation

 

Dr. J Radhakrishnan, I.A.S, Additional Chief Secretary, Government of Tamil Nadu and Commissioner, Greater Chennai Corporation receiving the IGBC Platinum Award from the IGBC Leadership Team

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...