போன்பிக்லியோலி டிரான்ஸ்மிஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின்
பொதுப்பங்கு வெளியீடு (IPO) அக்டோபர் 15, 2026 வியாழக்கிழமை அன்று தொடக்கம்!
ஒரு ஈக்விட்டி பங்கின் விலை வரம்பு ₹
558 முதல் ₹ 586 வரை என நிர்ணயம்
●
பங்கின் குறைந்தபட்ச
விலை (Floor Price) முகமதிப்பை விட (ஒரு பங்கிற்கு ₹10)
55.8 மடங்காகவும், அதிகபட்ச விலை (Cap Price) 58.6 மடங்காகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
●
பங்கு பெறுவதற்கு
(Bid/Offer) அக்டோபர் 15, 2026 வியாழக்கிழமை அன்று தொடங்கி, அக்டோபர் 19, 2026 திங்கள்கிழமை
அன்று முடிவடையும்.
●
ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான
(Anchor Investors) விருப்பப் பெறுகை காலம் அக்டோபர் 14, 2026 புதன்கிழமை அன்று நடைபெறும்.
●
குறைந்தபட்சம்
25 ஈக்விட்டி பங்குகளுக்கும் (Equity Shares), அதற்குப் பிறகு 25-ன் மடங்குகளிலும்
முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
● RHP இணைப்பு:
https://www.icicisecurities.com/console/uploads/actual/BONFIGLIOLI-TRANSMISSION-LIMITED---RHP_1791727263_81.pdf
போன்பிக்லியோலி
டிரான்ஸ்மிஷன்ஸ் லிமிடெட் ("நிறுவனம்") தனது ஈக்விட்டி பங்குகளின் ஆரம்ப
பொதுப் பங்கு வெளியீடு (IPO) தொடர்பான விருப்பப் பெறுகையை (Bid/Offer) அக்டோபர்
15, 2026 வியாழக்கிழமை அன்று தொடங்குகிறது.
இப்பங்கு
வெளியீட்டின் விலை வரம்பு ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ₹ 558 முதல் ₹
586 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ("விலை வரம்பு").
குறைந்தபட்சம்
25 ஈக்விட்டி பங்குகளுக்கும், அதற்குப் பிறகு 25-ன் மடங்குகளிலும் முதலீட்டாளர்கள்
விண்ணப்பிக்கலாம். ("குறைந்தபட்ச விண்ணப்ப அளவு").
ஆங்கர்
முதலீட்டாளர்களுக்கான விருப்பப் பெறுகை நாள் அக்டோபர் 14, 2026 புதன்கிழமை ஆகும். பொது
பங்கை பெறுவதற்கு அக்டோபர் 15, 2026 வியாழக்கிழமை அன்று தொடங்கும்.
இந்த
பங்கு வெளியீடானது, அதன் விளம்பரதாரர் விற்பனைப் பங்குதாரரான போன்பிக்லியோலி எஸ்.பி.ஏ
(Bonfiglioli S.p.A) நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் 4,32,39,042 ஈக்விட்டி பங்குகள்
வரையிலான விற்பனைக்கான ஆஃபரை (Offer for Sale) உள்ளடக்கியது. ஒவ்வொரு ஈக்விட்டி பங்கின்
முகமதிப்பும் ₹ 10 மட்டுமே ஆகும்.
போன்பிக்லியோலி
டிரான்ஸ்மிஷன்ஸ் லிமிடெட் ("நிறுவனம்") இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பம்
சார்ந்த மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரோ-மெக்கானிக்கல் பவர் டிரான்ஸ்மிஷன் மற்றும்
தொழில்முறை டிரைவ் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம்
பல்வேறு பயன்பாட்டுச் சந்தைகளுக்காக அத்தியாவசியமான, துல்லியமாக வடிவமைக்கப்பட்ட கியர்
மோட்டார்கள், கியர்பாக்ஸ்கள் மற்றும் டிரைவ் சிஸ்டம்களைத் தயாரிக்கிறது.
உலகளவில்
சுமார் 70 ஆண்டுகள் மற்றும் இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலான இயக்கப் பாரம்பரியம்
கொண்ட சர்வதேச அளவில் புகழ்பெற்ற போன்பிக்லியோலி (Bonfiglioli) பிராண்டின் அடிப்படையில்
இந்நிறுவனத்தின் பரம்பரை பெருமை கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தாலியைத் தலைமையிடமாகக்
கொண்டு செயல்படும் இதன் கார்ப்பரேட் விளம்பரதாரரான போன்பிக்லியோலி எஸ்.பி.ஏ
(Bonfiglioli S.p.A.), மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரோ-மெக்கானிக்கல் பவர் டிரான்ஸ்மிஷன்
மற்றும் தொழில்முறை டிரைவ் தீர்வுகள் துறையில் முன்னணி மற்றும் அதிநவீன தொழில்நுட்பம்
கொண்ட உலகளாவிய நிறுவனங்களில் ஒன்றாகும்.
ரெட்
ஹெர்ரிங் பிராஸ்பெக்டஸ் (Red Herring Prospectus) மூலம் வெளியிடப்படும் இந்த ஈக்விட்டி
பங்குகள், பிஎஸ்இ லிமிடெட் ("BSE") மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப்
இந்தியா லிமிடெட் ("NSE", பிஎஸ்இ உடன் இணைந்து "பங்குச் சந்தைகள்")
ஆகிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஆக்சிஸ்
கேபிடல் லிமிடெட் (Axis Capital Limited), பிஎன்பி பரிபா (BNP Paribas), ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்
லிமிடெட் (ICICI Securities Limited) மற்றும் ஜாஃப்ரீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்
(Jefferies India Private Limited) ஆகியவை இந்த பங்கு வெளியீட்டிற்கான புக் ரன்னிங்
லீட் மேனேஜர்களாக (Book Running Lead Managers) செயல்படுகின்றன.